எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ஆள் இல்லா போர் விமானம்... அமெரிக்கா உருவாக்குகிறது!

பைலட் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் புதிய போர் விமானத்தை அமெரிக்க விமானப் படை உருவாக்கி வருகிறது.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

சாதாரண விமானங்களைவிட போர் விமானங்களை இயக்குவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது. அதன் வேகம் மற்றும் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. மேலும், போர் சமயங்களில் இந்த விமானங்களை இயக்கும் பைலட்டுகள் எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று திரும்பும்போது உயிரை பணயம் வைத்து செயல்படுகின்றனர்.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

கடந்த காலங்களில் நடந்த போர்களில் ஏராளமான பைலட்டுகள் போரின்போது உயிரிழந்துள்ளனர். மேலும், போர் விமானங்களை இயக்கி பயிற்சி செய்யும்போதும் பல பைலட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

இதனை மனதில் வைத்து போர் விமானங்களை பைலட்டுகள் இல்லாமல் செலுத்துவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு உலகின் பல நாடுகள் முயன்று வருகின்றன. நம் நாட்டு பொறியாளர்களும், தேஜஸ் போர் விமானத்திற்கு பைலட் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது ஆரம்ப கட்ட அளவில்தான் உள்ளது.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

மேலும், பைலட் இல்லாமல் போர் விமானத்தை செலுத்துவதில் பல்வேறு சவாலான விஷயங்களும் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க விமானப் படை பைலட் இல்லாமல் செல்லும் போர் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது. பைலட் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் தக்க முடிவை விமானத்தில் உள்ள செயற்கை தொழில்நுட்பமே எடுத்து இயங்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

போர் விமானங்களை இயக்கும் பைலட்டுகள் அதிக புத்தி கூர்மையுடன் செயல்படுவது அவசியம் என்பதுடன் அவர்களுக்கு பல ஆயிரம் மணிநேரம் பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவு திறன் வெற்றி பெற்றால், இந்த நேர விரயங்கள் தவிர்க்கப்படும்.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

போரின்போது பைலட்டுகள் உயிரிழப்பதையும் முழுமையாக தவிர்க்க முடியும். மேலும், இந்த செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பமானது பைலட்டுகளை விட மிக வேகமாக, துல்லியமாக முடிவு எடுத்து விமானத்தை செலுத்தும். எனவே, எதிரி நாட்டு தாக்குதல்களிலிருந்தும் எளிதாக தப்புவதற்கான வாய்ப்பை வழங்கும்.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

பைலட் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும் முதல் போர் விமானத்தை அடுத்த ஆண்டு முதல் சோதனை நடத்துவதற்கு அமெரிக்க விமானப் படை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆள் இல்லா போர் விமானம்... கெத்து காட்ட தயாராகும் அமெரிக்கா!

இந்த திட்டம் வெற்றி பெற்றால் அது புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும், அதிக எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவ மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் கூட இதேபோன்ற திட்டங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Image Courtesy: United States Air Force

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
US Air Force is developing autonomous fighter jet and it is expected to test by 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X