Just In
- 3 min ago
525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?
- 33 min ago
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!
- 2 hrs ago
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- 5 hrs ago
ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...
Don't Miss!
- News
திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - சனிக்கிழமை தெப்பத்திருவிழா
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் நேற்று பதவி ஏற்றார். உயிருக்கு அதிக அச்சுறுத்தல் கொண்ட அரசியல் தலைவராக இருப்பதால், அவருக்கு உயர் வகை பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகிறார். மேலும், அவர் இருக்கும் இடம் மட்டுமின்றி, அவர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார், விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மிக உச்சப்பட்ட பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன.

அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. குறிப்பாக, அவர் பயணிக்கும் வாகனங்களை இயக்குவதற்கு மட்டும் பணத்தை தண்ணீராக வாரி இறைக்கிறது அமெரிக்க பாதுகாப்புத் துறை. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் என்றாலே, அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது தி பீஸ்ட் காரும், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமும்தான்.
உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத பல்வேறு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை இந்த காரும், விமானமும் பெற்றிருக்கின்றன. பரந்த நிலபரப்பை கொண்ட அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்வதற்கும், வெளிநாடு செல்லும்போதும் ஏர் ஃபோர்ஸ் விமானத்தையே அமெரிக்க அதிபர் பயன்படுத்துகிறார்.

அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து அவர் விமான நிலையத்திற்கு வருவதற்கு மரைன் ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. விஎச்-3டி சீ கிங் அல்லது விஎச் 60என் ஒயிட் ஹாக் ஆகிய இரண்டு மாடல்களும்தான் மரைன் ஒன் குறியீட்டுப் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.

அவர் எங்கு சென்றாலும், அவரது தி பீஸ்ட் காரும் நிழல்போல அவரை பின்தொடர்ந்து செல்லும். ஆம். அவர் உள்நாட்டில் எந்த மாகாணத்திற்கு சென்றாலும் சரி, அல்லது வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, பீஸ்ட் காரையே பயன்படுத்துவார். இதற்காக, அவரது 9 டன் எடை கொண்ட பீஸ்ட் கார் சி5 கேலக்ஸி கார்கோ என்ற சரக்கு விமானத்தில் முன்கூட்டியே கொண்டு செல்லப்பட்டுவிடுகிறது.

மேலும், அவரது பயணங்களில் போயிங் 747 விமானம்தான் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. போயிங் 747 விமானம் அமெரிக்க அதிபருக்காக பல்வேறு வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தம் இரண்டு விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு விமானம் பயன்படுத்தப்படும்.

போயிங் 747 விமானத்தின் VC-25 என்ற ராணுவ பயன்பாட்டு அம்சங்கள் கொண்ட விமானத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில், VC25A என்ற விமானம் போயிங் 747 200பி விமானத்தின் அடிப்படையிலும், VC25B மாடலானது போயிங் 747-8 மாடலின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவையாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு விமானங்களும் 1990ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன்தான் இந்த விமானங்களை உருவாக்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். அவரது மனைவி நான்சி ரீகன் இந்த விமானத்தின் உட்புற வடிவமைப்புக்கு ஆலோசனைகளை தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்களின் உட்புறம் 4,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாக உள்ளன. இந்த விமானங்களில் நவீன ரேடார் தொழில்நுட்ப வசதி மூலமாக உலகின் எந்த மூலைக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளன. அவசர சமயங்களில் அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் வகையில் உள்ளது. ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவசமும் உள்ளது.

இந்த விமானத்தில் அதிபருக்காக கட்டளை மையம், இரத்த வங்கி, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ஓய்வு அறை உள்ளன. மருத்துவர்கள், அதிகாரிகள் என அனைவரும் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. மிக நீண்ட தூர பயணத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 930 கிமீ வேகம் வரை இயக்க முடியும். 12,600 கிமீ தூரம் வரை பறப்பதற்கான வாய்ப்பை வழங்கும். நடுவானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியும். இந்த விமானத்தை அமெரிக்க உளவு அமைப்பின் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்ட 2 விமானிகள், ஒரு எஞ்சினியர், ஒரு வழிகாட்டு நிபுணர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் இயக்கப்படுகிறது.

சரி, இந்த விமானத்தை இயக்குவதற்கு எவ்வளவு செலவாகிறது தெரியுமா? அமெரிக்க அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்குவதற்கு மணிக்கு 2.10 லட்சம் டாலர்கள் வரை செலவாகிறதாம். இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.53 கோடி வரை செலவிடப்படுகிறது. அதாவது, அவரது ஒவ்வொரு நகர்வும் பாதுகாப்பாக அமைவதற்கு பல கோடிகளை அமெரிக்க பாதுகாப்புத் துறை வாரி இறைக்கிறது.