ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

விலை குறைவான கார்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய வசதிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

2021ம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்டது. தற்போதைய நவீன கார்களில் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் என ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் விலை குறைவான கார்களில் இன்றளவும் கூட மிகவும் அத்தியாவசியமான வசதிகள் வழங்கப்படுவதில்லை.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

விலை குறைவான கார்களில் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படையான வசதிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். கார் உற்பத்தி நிறுவனங்கள் இதனை பரிசீலனை செய்து, கார்களில் வழங்கினால் வாடிக்கையாளர்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

பின் பக்க யூஎஸ்பி போர்ட்கள் (Rear USB Ports)

கிட்டத்தட்ட அனைத்து கார்களின் முன் பகுதியிலும் தற்போது யூஎஸ்பி போர்ட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் விலை குறைவான கார்களின் பின் பகுதியில் யூஎஸ்பி போர்ட்கள் வழங்கப்படுவதில்லை. பின் இருக்கை பயணிகளும் யூஎஸ்பி போர்ட்களை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்தான். எனவே கார் நிறுவனங்கள் பின் இருக்கைகளுக்கு யூஎஸ்பி போர்ட்களை வழங்கினால் நன்றாக இருக்கும்.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

ஸ்பீடு-சென்சிங் லாக்ஸ் (Speed-Sensing Locks)

மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியவுடன் ஸ்பீடு சென்சிங் லாக்ஸ் ஆட்டோமேட்டிக்காக காரை லாக் செய்து விடும். இது மிகவும் அடிப்படையான பாதுகாப்பு வசதியாகும். ஆனால் விலை குறைவான கார்களில் இந்த வசதி வழங்கப்படுவதில்லை. எனவே லோ-பட்ஜெட் மாடல்களிலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வசதியை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

பூட் லைட் (Boot Light)

விலை குறைவான கார்களில் பூட் லைட் வழங்கினாலும் நன்றாக இருக்கும். இதன் விலை அதிகம் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. இரவு நேரங்களில் காரின் பூட் பகுதியில் பொருட்களை தேடும்போது, பூட் லைட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலை குறைவான கார்களில் மட்டுமல்லாது, நடுத்தர விலை கார்களிலும் கூட இந்த வசதி வழங்கப்படுவதில்லை என்பது கவலையளிக்க கூடிய விஷயமாக உள்ளது.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை (Height Adjustable Seat)

டிரைவர் தனது தேவைக்கு ஏற்ற சீட்டிங் பொஷிஷனை கண்டறிவதற்கு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை உதவி செய்யும். அனைத்து டிரைவர்களும் தங்களுக்கு சௌகரியமான சீட்டிங் பொஷிஷனை அமைத்து கொள்வதற்கு தகுதியுடையவர்கள்தான். எனவே அனைத்து கார்களிலும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை வழங்க வேண்டும் என்பது எங்களது கருத்து.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

வீல் ஆர்ச் க்ளாடிங் (Wheel Arch Cladding)

இதனை காஸ்மெட்டிக் அம்சமாக கூறலாம். ஒரு கார் முழுமை பெறுவதில் வீல் ஆர்ச் க்ளாடிங் முக்கிய பங்கு வகிக்கிறது. காரில் வீல் ஆர்ச் க்ளாடிங் இருக்கும்போது அதனை நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். ஆனால் அது இல்லாதபோது, வீல் ஆர்ச் க்ளாடிங் 'மிஸ்' ஆகியுள்ளது என்பது உங்கள் கவனத்திற்கு வரும். ஒவ்வொரு காரின் எக்ஸ்டீரியரிலும் வீல் ஆர்ச் க்ளாடிங் முக்கியமான ஒரு அம்சமாகும்.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

பவர் விண்டோஸ் (Powered Windows)

இது 2004ம் ஆண்டு கிடையாது. அந்த காலகட்டத்தில் பவர் விண்டோஸ் சொகுசு வசதியாக இருந்தது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது 2021. எனவே அனைத்து கார்களிலும் பவர் விண்டோக்களை வழங்க வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களை நாங்கள் இந்த செய்தியின் மூலமாக வலியுறுத்தி கொள்கிறோம்.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் (Electrically Adjustable ORVMs)

ஒகே. மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்களை வழங்கினால் உற்பத்தி செலவு சற்று அதிகரிக்கும் என்பதை ஒப்பு கொள்கிறோம். ஆனாலும் இந்த வசதியை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். பின்னால் என்ன வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன? என்பதை டிரைவர் தெளிவாக பார்ப்பதற்கு இது உதவி செய்யும்.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் இருக்கின்றன. ஆனால் சில சமயங்களில் டிரைவர்கள் சோம்பேறிதனம் பட்டுக்கொண்டு அவற்றை அட்ஜெஸ்ட் செய்யாமல் விட்டு விடுகின்றனர். இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், அனைத்து கார்களிலும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்களை வழங்குவது நல்லது.

ரொம்ப யூஸ்ஃபுல்... விலை குறைவான கார்களிலும் இந்த வசதிகள் கண்டிப்பா இருக்கணும்... என்னென்ன தெரியுமா?

பார்சல் ட்ரே (Parcel Tray)

காரின் பூட் பகுதியில் பார்சல் ட்ரே பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை வைத்து கொள்வதற்கு இதனை நாம் பயன்படுத்தலாம். பெரும்பாலான கார்களில் பார்சல் ட்ரே வழங்கப்படுகிறது. ஆனால் விலை குறைந்த கார்களில் இவை இருப்பதில்லை. இது மிகவும் அடிப்படையான விஷயம்தான். இதனை வழங்குவதால் கார் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் செலவு ஆகாது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Useful features that even the low budget cars should have
Story first published: Saturday, November 27, 2021, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X