மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் தந்தை பைக் பயணம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த ஒரு சில வாரங்களாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்திருந்தது.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததும் கூட இதற்கு ஒரு காரணம். ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே வாகன போக்குவரத்து சீராக தொடங்கியுள்ளது. அத்துடன் மதுக்கடைகளும் திறக்கப்பட்டிருப்பதால், மீண்டும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துள்ளது.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் தற்போது மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ஒரு சட்ட போராட்டத்தையே நடத்தியுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால், கடந்த சில வாரங்களாக 'குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து' என்பது போன்ற செய்திகளை நாம் அதிகம் காணாமல் இருந்தோம்.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

எனினும் தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள காரணத்தால், அத்தகைய விபத்துக்களும் மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் அரியலூர் அருகே நடைபெற்றுள்ள ஒரு விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய தந்தையில் அவர் காயமடைந்தது மட்டுமின்றி, அவரது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள திருமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். உறவினர் வீட்டு துக்க காரியத்தில் பங்கேற்பதற்காக செல்வம் நேற்று (மே 19ம் தேதி) இரு சக்கர வாகனத்தில் சென்றார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சுயநினைவை இழந்துள்ளார்.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

இருந்தாலும் பைக்கை கிளப்பி கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் போதையில் திரும்பி வரும்போது தனது மகன் அன்பு அமுதனையும் செல்வம் பைக்கில் அழைத்து சென்றார். அன்பு அமுதனுக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது. முன் பகுதியில் மகனை அமர வைத்து கொண்டு, செல்வம் தாறுமாறாக பைக்கை ஓட்டியுள்ளார்.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

எனவே புதுச்சாவடி என்னும் இடத்திற்கு அருகே வந்தபோது, அன்பு அமுதன் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதனால் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் செல்வம் தொடர்ந்து பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அவர் அந்தளவிற்கு உச்சகட்ட போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் சிறிது தூரம் சென்றதும் அவரும் விபத்தில் சிக்கினார். வழியில் இருந்து ஒரு முட்புதருக்கு செல்வம் தவறி விழுந்தார். முன்னதாக சாலையில் அன்பு அமுதன் மயங்கி கிடப்பதை கண்ட, அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் கீழே காணலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு பெரிய தவறு என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், சிந்திக்கும் நிலையையும், முடிவு எடுக்கும் நிலையையும் இழக்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாகனம் ஓட்டும்போது, விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடுகின்றன.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

எனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். ஒருவேளை மது அருந்தியிருக்கும்போது நீங்கள் வாகனம் ஓட்டும் சூழல் ஏற்பட்டால், சில வழிமுறைகள் மூலம் அதனை தவிர்க்கலாம். நீங்கள் மது அருந்தியிருந்தால், மது அருந்தாத அதே சமயம் உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் வாகனத்தின் சாவியை கொடுத்து விடுங்கள்.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு அவர் உங்களை பத்திரமாக அழைத்து சென்று விடுவார். அப்படி ஒரு வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக தங்கி விடுங்கள். போதை தெளிந்த பிறகு அங்கிருந்து புறப்படுங்கள். அதேபோல் ஓலா, உபேர் போன்ற கேப்கள் மூலம் பயணம் செய்வதும் ஓரளவிற்கு நன்மை தரும்.

மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் வழியில் நீங்கள் யாருடனும் தகராறு செய்யாமல் இருப்பது மிக அவசியம். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மது அருந்தாமல் இருப்பது இன்னும் நல்லது. இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் மிக முக்கியமான காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Useful Tips to Prevent Drunk Driving. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X