Just In
- just now
குறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...
- 43 min ago
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?
- 10 hrs ago
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- 13 hrs ago
புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...
Don't Miss!
- News
உடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு? இனிதான் ஆட்டமே ஆரம்பம்!
- Sports
அட போங்கய்யா.. மிஸ்ஸான நடராஜனின் விக்கெட்.. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் இந்திய வீரர்கள்!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Movies
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மைலேஜ் குறையும், உயிருக்கு ஆபத்து, ஒட்டுமொத்தத்தில் தண்ட செலவு... தேவையில்லாத கார் ஆக்சஸெரீஸ்கள்...
தேவையில்லாத கார் ஆக்சஸெரீஸ்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.

யூ-டியூப் வீடியோக்களை நீங்கள் அதிகம் பார்க்க கூடியவர் என்றால், கார் ஆக்சஸெரீஸ்கள் மீது நிச்சயம் அதிக ஆர்வம் உடையவர்களாகதான் இருப்பீர்கள். ஏனென்றால், யூ-டியூப் வீடியோக்களில் கவர்ச்சிகரமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களை காட்டுகின்றனர். இதன் மூலம் எந்த காரின் விலை குறைந்த அடிப்படை வேரியண்ட்டையும், விலை உயர்ந்த டாப்-வேரியண்ட் போல் மாற்றுகின்றனர்.

ஆனால் இந்த ஆக்சஸெரீஸ்கள் அனைத்தும் உண்மையில் பயன்தரக்கூடியவையா? என்றால், நிச்சயம் கிடையாது. யூ-டியூப்பில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களில் காட்டப்படும் அனைத்து ஆக்சஸெரீஸ்களும், நமது காரிலும் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், நிச்சயமாக இந்த செய்தியை இறுதி வரை கட்டாயம் படிக்க வேண்டும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிரயோஜனம் இல்லாத ஆக்சஸெரீஸ்கள் மற்றும் மாடிஃபிகேஷன்கள் குறித்து இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த ஆக்சஸெரீஸ்கள் மற்றும் மாடிஃபிகேஷன்களை நீங்கள் தவிர்த்து விட்டால், உங்களுக்கு பல்வேறு வழிகளில் பலன் கிடைக்கும். அத்துடன் உங்கள் பணமும் மிச்சமாகும். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

1. பெரிய ஸ்பாய்லர்கள்
நீங்கள் அடிக்கடி ரேஸ் டிராக்கிற்கு செல்லக்கூடியவரா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் 'இல்லை' என்றால், உங்கள் காரில் பெரிய ஸ்பாய்லர் இருப்பதில் அர்த்தமே இல்லை. பெரிய ஸ்பாய்லர்களுக்கு உங்கள் பணத்தை செலவழிப்பது வீண் வேலை. உங்கள் காருக்கு உண்மையில் பெரிய ஸ்பாய்லர் தேவையா? என்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.

ஆக்சஸெரீ பேக்கேஜ் என்ற பெயரில் டீலர்ஷிப் ஊழியர்கள் இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை உங்கள் தலையில் கட்டுவதற்கு முயற்சி செய்யலாம். ஆனால் நீங்கள் தெளிவாக இருப்பது அவசியம். பெரிய ஸ்பாய்லர்கள் இழுவை திறனை அதிகரிக்கும்தான். ஆனால் உங்கள் காரின் மைலேஜ் குறைய அது ஒரு காரணமாகி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

2. புல்பார்கள்
உண்மையில் புல்பார்கள் தேவையில்லாத ஆக்சஸெரீ. இந்தியாவை பொறுத்தவரையில், காரில் புல்பார்கள் பொருத்தியிருப்பது சட்ட விரோதம் ஆகும். ஆம், இந்தியாவில் புல்பார்கள் தடை செய்யப்பட்டுள்ளன. முன்பகுதியில் புல்பார் பொருத்துவதன் மூலம், காரை பாதுகாக்கிறோம் என நீங்கள் நினைக்கலாம். அது உண்மையும் கூட.

ஆனால் அதே நேரத்தில் இப்படி செய்வதன் மூலம் பாதசாரிகளின் உயிருக்கு நீங்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். புல்பார்களை பொருத்தி காரின் எடையை மேலும் அதிகரிப்பதை காட்டிலும், வலுவான கட்டுமான தரம் கொண்ட காரில் நீங்கள் முதலீடு செய்யலாம் என்பது எங்களுடைய கருத்து.

3. பிரஷர் ஹாரன்கள்
புல்பார்களை போலவே, பிரஷர் ஹாரன்களை பொருத்தியிருப்பதும் சட்ட விரோதம்தான். ஒருவேளை பிரஷர் ஹாரன்கள் சட்டப்பூர்வமானதாக இருந்திருந்தாலும் கூட, அவற்றை பொருத்தியிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை நீங்கள் பயன்படுத்தினால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது வீண் செலவு என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள். இதுதவிர அதிக இரைச்சலை கேட்கும் பாதசாரிகளுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பிரஷர் ஹாரன்கள் என்பது முற்றிலும் தேவையே இல்லாத ஆக்சஸெரி. எனவே எக்காரணத்தை கொண்டும் பிரஷர் ஹாரன்களுக்கு உங்கள் பணத்தை செலவிட வேண்டாம்.

4. பெரிய/சிறிய வீல்கள் & டயர்கள்
வழக்கமான அளவை விட பெரிய அல்லது சிறிய வீல்கள் மற்றும் டயர்களை பயன்படுத்துவதை ஆக்சஸெரீ என்பதை விட மாடிஃபிகேஷன் என சொல்லலாம். இப்படி செய்வது தேவையில்லாத ஒன்றுதான். பெரிய டயர்களை பயன்படுத்துவது தற்போது பலராலும் செய்யப்படும் வழக்கமான ஒரு நடைமுறையாகி விட்டது. ஆனால் ஒரு சிலர் ராட்சத டயர்களை பயன்படுத்துகின்றனர்.

இது காரின் சஸ்பென்ஸன் அமைப்பிற்கு பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சிறிது காலம் சென்ற பின் நீங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் காரில் இப்படி மாடிஃபிகேஷன் செய்வது சட்ட விரோதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இதனையும் தேவையில்லாத ஆக்சஸெரீ/மாடிஃபிகேஷன்களின் பட்டியலில் சேர்த்துள்ளோம்.