எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

போலீஸ்காரர்கள் இரண்டு பேர் எல்கேஜி பசங்களை போல் பொது வெளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதற்கான காரணத்தை கேட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் அனைத்திலும் தற்போது ஒரு வீடியோ காட்டு தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையோரமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது. அதன் அருகே இரு போலீஸ்காரர்கள் சீருடையில் கட்டி புரண்டு சண்டையிட்டு வருகின்றனர்.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

அவர்கள் இருவரை தவிர மூன்றாவதாக ஒரு போலீஸ்காரரும் அந்த வீடியோவில் உள்ளார். சண்டையிட்டு கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்களையும் அவர் விலக்கி விட முயன்று கொண்டிருந்ததை போல் தெரிகிறது. அந்த வழியாக சென்ற அனைவரும் போலீஸ்காரர்கள் சீருடையில் சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

அவர்களில் சிலர் இந்த சண்டையை செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் பகிர தொடங்கினர். இதன் எதிரொலியாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த வீடியோ சென்றது. எனவே இது தொடர்பான விசாரணையை அவர்கள் உடனடியாக முடுக்கி விட்டனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பித்தூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

அத்துடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட போலீஸ்காரர்கள் இரண்டு பேரின் பெயர் ராஜேஷ் சிங், சுனில் குமார் என்பதும் தெரியவந்தது. வீடியோ வைரல் ஆனதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் வைரலாக பரவி வரும் வீடியோவில் மூன்றாவதாக இருந்த போலீஸ்காரர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன. அவை உங்களுக்கு சிரிப்பையும் வரவழைக்கலாம். அல்லது காவல் துறையினர் இப்படியா நடந்து கொள்வது? என்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். டொயோட்டா இன்னோவா காரின் முன் இருக்கைதான் போலீஸ்காரர்களின் இந்த குடுமிப்பிடி சண்டைக்கு காரணம்!!

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

டொயோட்டா இன்னோவா காரை பற்றிய அறிமுகமே தேவையில்லை. இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவாவும் ஒன்று. வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா கார் இன்னமும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் சௌகரியமான இருக்கைகளும் முக்கியமான காரணங்களில் ஒன்று.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

இதன் காரணமாகதான் டாக்ஸி ஆபரேட்டர்கள் பலரும் டொயோட்டா இன்னோவா காரை விரும்புகின்றனர். டூர் செல்பவர்களுக்கு ஏற்ற காராக டொயோட்டா இன்னோவா திகழ்ந்து வருகிறது. இதுதவிர இந்தியாவின் பல்வேறு மாநில போலீசாரும் ரோந்து பணிகளுக்கு டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்தி வருகின்றனர்.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

இதில், உத்தரபிரதேச மாநில காவல் துறையும் ஒன்று. சம்பவத்தன்று ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் உள்ளிட்ட போலீசார் வழக்கம் போல டொயோட்டா இன்னோவா காரில் ரோந்து சென்றுள்ளனர். ஆனால் அதன் முன் இருக்கையில் யார் அமர்வது? என்பது தொடர்பாக ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்

ஆரம்பத்தில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு மட்டும்தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் தகராறு முற்றி கைகலப்பு வரை சென்று விட்டது. இதன் விளைவாகதான் ஸ்கூல் பசங்களை போல் அவர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் போலீஸ்காரர்களின் சண்டை வீடியோவை நீங்கள் கீழே ஜாலியாக கண்டு களிக்கலாம்!!

முன் இருக்கையில் யார் அமர்வது? என்பது தொடர்பான தகராறில் காவலர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் தற்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேசாமல் முன் இருக்கையில் யார் அமர வேண்டும்? பின் இருக்கையில் யார் அமர வேண்டும்? என்பது தொடர்பாக கடுமையான விதிகளை அமலுக்கு கொண்டு வந்து விடலாமா? இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uttar Pradesh Cops Fight For The Front Seat Of Patrol Toyota Innova: Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X