பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இந்தியாவில் அமலில் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பாதுகாப்பு ஹெல்மெட் மட்டும்தான்.

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

இதனால்தான் டூ வீலர்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. ஒரு சில சமயங்களில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற பிரபலமான மனிதர்கள் கூட ஹெல்மெட் அணியாமல் சென்று சர்ச்சைகளில் சிக்கி கொள்கின்றனர்.

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹெல்மெட் அணியாமல் பிரியங்கா காந்தியை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம் போன்ற ஒரு சில மாநிலங்களில் நிலைமை கையை மீறி சென்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தாராபுரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவிக்க முயற்சித்தார். இந்த நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது.

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

எனினும் பிரியங்கா காந்தியின் இந்த முயற்சிக்கு போலீசார் தடை கல்லாக இருந்தனர். காவல் துறையினரால் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். எனவே பிரியங்கா காந்தி காரில் இருந்து அதிரடியாக இறங்கினர். அத்துடன் அவர் நடக்கவும் தொடங்கினார். ஆனால் அப்போதும் கூட பிரியங்கா காந்தியை தடுக்கவே போலீசார் முயன்றனர்.

MOST READ: மோடி அரசின் உருப்படியான யோசனை... பெட்ரோல், டீசல் செலவு குறைய போகுது... மகிழ்ச்சி கடலில் மக்கள்...

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

எனினும் போலீசாரின் முயற்சியை மீறி பிரியங்கா காந்தி சென்றார். இதன்பின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகியான தீரஜ் குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் ஏறி பிரியங்கா காந்தி பயணித்தார். ஆனால் அவர்கள் இருவரும் அப்போது தலை கவசம் அணியவில்லை. எனவே ஸ்கூட்டர் உரிமையாளரான தீரஜ் குஜ்ஜார் மீது போலீசார் தற்போது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

MOST READ: நடுநடுங்க வைக்கும் வீடியோ... நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட கார்-பைக்... எவ்வளவு வேகம் தெரியுமா?

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

அவருக்கு போக்குவரத்து போலீசார் 6,300 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக போக்குவரத்து நாடு முழுவதும் தற்போது போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். எனவே டூ வீலர்களில் பயணிக்கும்போது எக்காரணத்தை கொண்டும் ஹெல்மெட் அணிய மறக்க வேண்டாம்.

MOST READ: கணவன், மனைவியின் சூப்பர் கண்டுபிடிப்பு... சும்மா நச்சுனு இருக்கு... என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க!!

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

அபராதங்களை செலுத்துவதில் இருந்து இது உங்களை பாதுகாப்பதோடு, சாலை விபத்துக்கள் நேர்ந்தால் உங்கள் உயிரையும் காப்பாற்றும். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சாலை விபத்தில் சிக்கினால், தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. சில சமயங்களில் இது அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமாகி விடுகிறது.

ஆனால் ஹெல்மெட் அணிந்தால் தலையில் காயம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். எனவே நீங்கள் தலை கவசம் அணிந்து செல்வதோடு, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரையும் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்படி அறிவுறுத்துங்கள்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் தவறு செய்தாலும் கூட போலீசாரும், அதிகாரிகளும் தற்போது பாரபட்சமில்லாமல் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு அதிகாரிகள் சமீபத்தில் அபராதம் விதித்து அதிரடி காட்டினர். முற்றிலும் வித்தியாசமான ஒரு காரணத்திற்காக விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வரும் நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தனது லக்சூரி காரை குடி தண்ணீரை பயன்படுத்தி கழுவியுள்ளார். இந்த சம்பவத்திற்காக, அவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இதுகுறித்த, வீடியோவை ஏஎன்ஐ ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டாலே, அதன் கூடவே அழையா விருந்தாளியாக தண்ணீர் பிரச்னையும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்னை தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

அதிலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது குடிநீர் பிரச்னை, பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களுமே தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு, தண்ணீர் பிரச்னை தற்போது இந்தியா முழுவதும் தலைவிரித்தாடி கொண்டுள்ளது.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இதற்கு அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், நீர் நிலைகளை சரிவர தூர்வாராமல், பாதுகாக்காமல் விட்டதும் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனாலேயே, பல நீர்நிலைகள் தற்போது, காய்ந்து குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரையே தங்களின் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருகின்றனர்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

சில பகுதிகளில் இதுகூட கிடைக்காமல், பிற பகுதிகளையும், தண்ணீர் லாரிகளையும் தங்களின் அன்றாட தேவைக்கான நீருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, நாடே குடி தண்ணீர் பிர்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், விராட் கோஹ்லியின் சொகுசு காரை கழுவ குடிநீர் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியானது.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

விராட் கோஹ்லி ஓர் கார் பிரியர் என்பது நாம், அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், விராட்டின் கராஜில் பல லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டிருந்தது. அதிலும், அவரிடத்தில் ஆடி நிறுவனத்தின் கார்களே அதிகமாக இருக்கின்றன.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

அந்தவகையில், விராட்டிடம், பிஎம்டபிள்யூ 7 செரீஸ், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி எஸ்5, ஆடி ஆர்எஸ்5, ஆடி ஆர்8, ஆடி ஏ8எல் உள்ளிட்ட பல்வேறு கார்கள் உள்ளன. இதில், ஓர் லக்சூரி காரை சாலையில் வைத்து கழுவிய குற்றத்திற்காக தான் விராட்டின் பணியாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில்தான் விராட் கோஹ்லி வசித்து வருகிறார். இங்கு தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விராட்டின் பணியாளர் ஒருவர் அவரது காரை கழுவதற்கும், வீட்டுன் முகப்பு பகுதியை சுத்தம் செய்வதற்காகவும் குடிநீரைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இதுகுறித்து, குருகிராம் பகுதி நகராட்சி அதிகாரி யஸ்பல் யாதவ் கூறியதாவது, "தற்போது தண்ணீர் பஞ்சம் நாடு முழுவதும் அதிகமாக நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோஹ்லியின் வீட்டில், குடிநீர் வீணாக்குவதாக புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, தண்ணீரை வீணாக்கிய அவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும் தனி நபருக்கு தற்போது ஆயிரம் ரூபாயும், நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற, விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

விராட் கோஹ்லி, தான் குடிப்பதற்காக ரூ. 600 மதிப்புள்ள குடிநீரைப் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த அதிர்ச்சியில் இருந்தே அவரது ரசிகர்கள் மீளாத நிலையில், புதிய சிக்கலாக சொகுசு கார்களை சுத்தம் செய்ய குடிநீரை பயன்படுத்தியது, மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்த சூழலில் தன்னிடம் உள்ள ஆடி கார்களில் ஒன்றை விராட் கோஹ்லி தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். என்னங்க சொல்றீங்க? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்ட விராட் கோஹ்லியின் கார் எது? அதன் விலை என்ன? என்பது போன்ற அனைத்து தகவல்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இந்தியாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வரும் இவர் ஆடி நிறுவனத்தின் இந்திய தூதராகவும் விளங்குகிறார்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இதனால் விராட்டின் கார்கள் கலெக்‌ஷனில் ஆடி கார்கள்தான் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் இந்த கார்களில் பழைய மாடல்களை விற்க விராட் திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது தனது ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்த காரின் விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சிறிது அதிகம் தான் என்றாலும் இந்த ஆடி காரானது அதிக திறன் வாய்ந்த டபிள்யூ12 என்ஜினை கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கார், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் தற்சமயம் ஹரியானாவில்தான் உள்ளது.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த காரை வேறொருவரிடம் இருந்து விராட் கோலி விலைக்கு வாங்கினார். இந்த கார் இதுவரை 8,000 கிமீ தூரம் இயங்கியுள்ளது. இது ஓடோமீட்டர் காட்டும் அளவாகும். இந்த காரின் முதல் உரிமையாளர் யார் என்பது தெரியவரவில்லை.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இரண்டு உரிமையாளர்களை கடந்த பின்னும் கிட்டத்தட்ட ஷோரூமில் உள்ளதை போன்று நல்ல நிலையிலேயே இந்த ஆடி கார் உள்ளது. கீறல்கள் கூட எதுவும் பட்டதாக தெரியவில்லை. இந்த ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடலில் அதிக முறை உலா வந்துள்ள விராட், ஒருமுறை டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சிக்காகவும் ஓட்டி சென்றுள்ளார்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

ஏற்கனவே கூறியதுபோல் மிகவும் சக்திவாய்ந்த வெர்சன் காராக விளங்கும் இந்த மாடலில் பெரிய 6.3 லிட்டர் டபிள்யூ12 என்ஜினை ஆடி நிறுவனம் பொருத்தியுள்ளது. டபிள்யூ-ஓரியண்டேஷனுக்காக 12 சிலிண்டர் அமைப்பை இந்த என்ஜின் பெற்றுள்ளது. அதாவது இரு 'V' இன்ஜின்கள் இணைந்து ஒரு 'W' என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,200 ஆர்பிஎம்-ல் 500 பிஎச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்-ல் 625 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஓலாங் க்ரே நிறத்தில் வெளிப்புறத்தை கொண்டுள்ள இந்த காரின் உட்புறங்கள் போலோக்னா சாம்பல் நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தை போன்று இந்த காரின் உட்புறமும் புதிய காரின் உணர்வையே தருகிறது.

இந்த ஆடி காரின் விற்பனை விளம்பரத்தில் காருக்கான ரூ.75 லட்சம் விலையுடன், சான்றிதழ் கட்டணம் மற்றும் பதிவு கட்டணமாக விலையில் 1 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் போக்குவரத்து கட்டணங்களும் இந்த காரை வாங்குப்பவரிடம் இருந்து வசூலிக்கப்படவுள்ளது.

புதிய ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடல் கார் சந்தையில் ரூ.2.4 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆடி கார் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான தருணம். அதுமட்டுமில்லாமல் இந்த காரின் முந்தைய உரிமையாளர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்பது கூடுதல் விளம்பரம் தானே.

Source: Cartoq

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uttar Pradesh: Priyanka Gandhi Travelled In Scooter Without Helmet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X