Just In
- 6 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழைய வாகனங்களுக்கு ஸ்கெட்ச்... ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி... ஆடிப்போன உரிமையாளர்கள்...
ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி காட்டியதால், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் ஆடிப்போயுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office - RTO), மொத்தம் 60,688 வாகனங்களின் பதிவு சான்றிதழ்களை (Registration Certificates - RC) தற்போது தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியுள்ளது. ஆர்டிஓ அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை ஆகும்.

இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழை புதுப்பிக்காத காரணத்தால், மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என வாகனங்களுடைய உரிமையாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தரப்பில் இருந்து பலமுறை நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே அவர்களின் பதிவு சான்றிதழ்களை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 6 மாத காலத்திற்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இன்னும் ஆறு மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை வாகன உரிமையாளர்கள் புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''விருப்பம் உள்ள வாகன உரிமையாளர்கள், 6 மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அவர்கள் அவ்வாறு செய்யும்பட்சத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர்களின் பதிவு சான்றிதழ்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆனால் இன்னமும் எங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அத்துடன் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தின் பழைய பதிவு சான்றிதழை, ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பதிவு சான்றிதழை மீண்டும் புதுப்பிக்காத வரை அவர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் இயக்க கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுகின்ற வகையில், சாலையில் அந்த வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படும்.

மேலும் மோட்டார் வாகன சட்டப்படி அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை தற்போது தலைவிரித்தாடி வருவதற்கு பழைய வாகனங்களும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பழைய டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவை வெளியிடும் புகை, காற்றின் தரத்தை சீர்குலைத்து விடுகிறது. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.