நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

இளைஞர் ஒருவர் நடுரோட்டில் போட்டு பைக்கை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் சமீபத்தில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டது.

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில்தான் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போலீசார் புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே சில இடங்களில் கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த புதிதில், அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

இந்த சூழலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவமும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது.

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

ஆனால் போலீசார் இந்த நடவடிக்கையால் அந்த இளைஞர் விரக்தியடைந்தார். இதன்பின் அவர் திடீரென தனது பைக்கை சாலையில் போட்டு உடைக்க தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளுக்கு பின்பாக அவர் தனது பைக்கை சாலையில் போட்டு அதன் மீது அமர்ந்து அழ தொடங்கி விட்டார்.

MOST READ: அதிர வைக்கும் சம்பவம்... காரை பிடித்து வைத்து கொண்டு 10 லட்சம் கட்ட சொல்லும் போலீஸ்... ஏன் தெரியுமா?

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

விரக்தியில் பைக்கை உடைத்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த இளைஞருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபராத தொகைகளை உயர்த்தியது தவறு என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.

MOST READ: உலகையே உலுக்கும் விமான விபத்துக்கள் ஏன் நடக்கிறது தெரியுமா? நடுங்க வைக்கும் பின்னணி...

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

அதே சமயம் விதிமுறைகளின் படி ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை.

MOST READ: சாக்கடையில் கவிழ்ந்த கார்... மனைவி மீது போலீஸில் கணவன் புகார்! எதற்காக என தெரிந்தால் சிரிக்க கூடாது

நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவேதான் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: Piyush Rai/Twitter

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uttar Pradesh Youngster Throws Bike, Breaks Down In Tears After Being Fined For Not Wearing Helmet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X