அரசு தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்.. மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை.. இப்போவாது செஞ்சாங்களே!

சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு சில விஷமிகள் பொதுமக்களின் தரவுகளை அரசின் பொது வலை தளங்களில் திருடி தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம்.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், முன்னதாக பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல அதிரடிகளை அது அது மேற்கொண்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பையேற்ற மோடி அரசு, நாட்டையே உறைய வைக்கின்ற வகையில் சிஏஏ சட்ட சீர்திருத்தத்தை கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்துள்ளது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

இந்த சட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் வேறொரு நாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லீம் மற்றும் இலங்கை தமிழ் மக்களை மட்டும் வெளியேற்றும் வகையில் இருக்கின்றது.

இதனால், சிறுபான்மையினராக நாடு முழுவதும் இருக்கும முஸ்லீம் மக்கள் அற வழியில் போராட்டங்களைத் தொடுத்து வருகின்றனர். இருப்பினும், போலீஸாரின் தடியடி, விஷமிகளின் உட்புகுதல் போன்ற காரணங்களால் ஆங்காங்கே வன்முறையும், கலவரங்களும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

மறுபுறம் சிஏஏ-விற்கு ஆதரவாக குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மக்கள், முஸ்லீம் மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை அடித்து, உடைத்து கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு சமீபத்தில் அரங்கேறிய வடக்கு டெல்லி கலவரமே முக்கிய சான்று. இந்த கலவரத்தின்போது போலீஸாரின் கண் முன்னிலையிலேயே பல முஸ்லீம் மக்கள்கள் அடித்தே கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், போலீஸார் சிலரும் இதில் காயமுற்று இறந்துள்ளனர்.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

இவ்வாறு, சூழ்நிலை அசாதாரணமானதாக இருக்கும் வேலையில் ஒரு சில விஷமிகள் அரசின் திறந்தநிலையில் இருக்கும் பொது தளங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் தரவுகளை திருடி வருவதாக அதிர்ச்சி மிகுந்த தகவல் வெளியாகியிருக்கின்றது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

குறிப்பாக, வாஹன் போன்ற திறந்த தளங்களைப் பயன்படுத்தி விஷம செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் உறைய வைக்கின்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதன் வாஹன் தளத்தில் சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

வாஹன் தளம் குறிப்பிட்ட வாகனத்தின் பதிவெண்ணை உள்ளிடுவதன் மூலம் அந்த வாகனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்கும். இதில் ஒளிவு, மறைவு பெரியளவில் இருக்காது. இத்தகைய சூழ்நிலையில், சில விஷமிகள் இந்த தகவல்களை திருடி அறுவறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

ஆகையால், இந்த திறந்த நிலையை தவிர்க்கும் விதமாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கையின்படி, உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் பாதியளவு மட்டுமே தெரியும். ஆகையால், முழுமையாக குறிப்பிட்ட நகரின் தகவல் வெளிப்படையாக அறிந்து கொள்ளவது தவிர்க்கப்பட்டுள்ளது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

வாஹன் தள புகைப்படம்

இவ்வாறு, உரிமையாளர்களின் பெயர்களை மறைப்பதன் மூலம் தரவு தளத்தை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தவோர்களின் வருகை தவிர்க்கப்படும். மேலும், மக்களின் தனியுரிமையும் பாதுகாக்கவும் முடியும்.

சமீபகாலமாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக மற்றும் ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த போராட்டங்களை முக்கிய காரணமாக கொண்டு இந்த நடவடிக்கையை அமைச்சகம் உடனடியாக கையாண்டுள்ளது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

சில சமூக விரோதிகள் வாஹன் தரவு தளத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்களின் அடையாளங்களை கண்டறிந்து வன்முறையில் ஈடுபட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கண்டறிந்த இணைய சுதந்திர அறக்கட்டளைக் குழு மத்திய அமைச்சர் நிதின் கட்காரியைத் தொடர்புகொண்டு முறையிட்டதன்பேரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

இந்த குழுவானது, தலைநகர் புதுடெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் உரிமைகள் வக்கீல் குழுவாகும்.

தொடர்ந்து, முறைகேடாக வாஹன் தளத்தைப் பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் சிலவற்றையும் அந்த குழு அமைச்சகத்திடம் ஒப்படைத்திருக்கின்றது. இதனால், சூழ்நிலை சற்றே தீவிரமானதாக இருக்கின்றது என்பதனை உணர்ந்த மத்திய அரசு உடனடியாக உரிமையாளர்களின் தரவு முழுவதுமாக தெரியாதபடி மறைத்துள்ளது.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

இந்த நடவடிக்கையை வாஹன் மட்டுமின்றி சாரதி தளத்திலும் மத்திய அமைச்சகம் மேற்கொண்டிருக்கின்றது. நாடு முழுவதும் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம் சகோதர மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கருத்துக்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கும் வகையில் இருக்கின்றது. இதுபோன்று தரவுகளைத் திருடுவது பேராபத்தை விளைவிக்க வழி வகுக்கும்.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

முன்னதாக இந்த தரவுகளை ஆன்லைன் புரோக்கர்கள் மட்டுமே திருடி வந்தனர். நம்மில் பலர் இணையத்திலோ அல்லது தேவையில்லாத அழைப்புகளின் மூலம் நிச்சயம் குறிப்பிட்ட இந்த பிரச்னைகளைச் சந்தித்து இருப்போம் என நம்புகின்றோம்.

அதாவது, நாம் அமேசான், ஃபிளிப்கார்ட் அல்லது இணையத்தின் ஊடாக ஏதேனும் ஓர் உபயோகப் பொருளைப் பற்றித் தேடியிருப்போம். அதை நாம் வாங்குகின்றோமோ, இல்லையோ இருப்பினும் ஒரு கனம் அதைப் பார்த்து விட்டு மட்டும் வந்திருப்போம்.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

பின்னர், நம்முடைய வழக்கமான வேலையைச் செய்யவும் ஆரம்பித்திருப்போம். இதையடுத்து, சில நிமிடங்கள் கழித்து நமது செல்போனில் வேறேதேனும் ஆப்பினை பயன்படுத்தும்போது, நாம் தேடிச்சென்று பார்த்த பொருளின் விளம்பரம் பாப்-அப் மானிட்டராக அல்லது பரிந்துரைக்கப்பட்ட விளம்பரம் என்ற பெயரில் தோன்றும்.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

இதைப் பலர் பார்த்தும் பார்க்காமல் கடந்திருக்கலாம், ஒரு சிலர் நாம் கூகுளில் தேடியது எப்படி இந்த ஆப்பில் தோன்றுகின்றது என யோசித்திருக்கலாம்.

இந்த விஷயத்தைதான் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் பல இணையதளங்கள் இவ்வாறு நாம் தேடும் பொருளைப் பற்றிய தகவலை மற்ற நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கின்றன. இத்தகைய நிகழ்வு, வெறும் இணையத்தைச் சார்ந்து மட்டுமே அரங்கேறவில்லை.

அரசு பொது தளத்தில் தரவுகளை திருடும் விஷமிகள்... மத்திய அரசு எடுத்த பலே நடவடிக்கை... இப்போவாவது இதை செஞ்சாங்களே..!

மாறாக, சேம்பிள் கொடுக்கின்றோம் என்ற பெயரில் ஃபீட்பேக் ஃபார்மை ஃபில் பன்னுங்க என்று கூறுவதிலும் இத்தகைய சிக்கல் இருக்கின்றது.

நாம் அந்த ஃபீட்பேக் ஃபார்மில் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு சிலர் குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது அழைப்புகளின் மூலமோ மார்க்கெட்டிங் செய்வர். இந்த நிலையில், தீவிரவாத தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சிலர் பொது தளங்களைப் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

பாதுகாப்பு காரணம் காட்டி தற்போது இந்த தகவல்களை மத்திய அரசு மறைத்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சொற்ப வருவாய்க்காக பல கோடி இந்தியர்களின் தகவல்களை மத்திய அரசு விற்பனைச் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

உங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் அறிந்த ஒரு டெலிமார்க்கெட்டர், உங்களை இன்னும் ஒரு சில தினங்களில் அழைக்கலாம். அதில், நீங்கள் ​​ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், வாகன பதவி மற்றும் ஓட்டுநர் உரிமத்தின்போது, உங்களைப் பற்றி நீங்கள் வழங்கிய அனைத்து தகவல்களையும் இந்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்யத் தொடங்கியுள்ளது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதனை வருவாய் ஈட்டும் விதமாக இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதாவிற்கான ஒப்புதல் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

மேலும், பாராளுமன்றத்தின் மேல் சபையில் சமீபத்தில் நடைபெற்ற அமர்வில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, வாகன பதிவு தரவுகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டும் திட்டத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்திருந்தார்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இந்நிலையில், ஏற்கனவே 87 தனியார் நிறுவனங்கள் மற்றும் 32 அரசு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வாஹன் மற்றும் சாரதி ஆகிய தகவல் சேகரிப்பு தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக இந்தியா டுடே ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

வாஹன் மற்றும் சாரதி ஆகிய இரு தளங்களும், நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களால் பராமரிப்பு மற்றும் தகவல்கள் சேகரித்தல் செய்யப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது முதல்முறையாக கடந்த 2011ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆகையால், தற்போது நாட்டில் இயங்கும் அனைத்து இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் குறித்த தகவலையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதில், வாஹன் என்பது வாகனங்கள்குறித்த அனைத்து தகவல்களையும், சாரதி என்பது ஓட்டுநர் உரிமத்தின்போது வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அவ்வாறு, வாஹன் மென்பொருளில் வாகனம் பதிவு செய்தல், வரி, ஃபிட்னஸ், அமலாக்கம் (செல்லாண்) மற்றும் பெர்மிட் உள்ளிட்ட தகவலையும், சாரதி தரவுத்தளம் ஓட்டுநர் உரிமங்கள், கட்டணம், நடத்துனரின் உரிமம் மற்றும் சில விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

தற்போது, இந்த அனைத்து தகவல்களையும்தான் இந்திய அரசு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்து வருகின்றது. இவ்வாறு, விற்பனைச் செய்ததில் இதுவரை மத்திய அரசு எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளது என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இருப்பினும், இந்த தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள, மத்திய அரசு ரூ. 3 கோடி கட்டணமாக வசூலிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை ரூ.65 கோடி வரை வருவாய் ஈட்டியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. அதேசமயம், இதனை 87 தனியார் நிறுவனங்களும், 32 அரசு நிறுவனங்களும் தற்போது பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அதேபோன்று, இந்த இரு தகவல் தளங்களிலும் எவ்வளவு எண்ணிக்கையிலான தரவுகள் இருக்கின்றன என்ற தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால், வாஹன் தளத்தில் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்களின் தகவல்கள் இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இதேபோன்று, சாரதி தளத்திலும் சுமார் 15 கோடி ஓட்டுநர் உரிமதாரர்களின் தகவல்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதுகுறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவர் கைப்பட மடல் ஒன்றை எழுதி மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில்,

"மொத்த தரவு பகிர்வு கொள்கை மற்றும் செயல்முறை திட்டம், அரசின் வாஹன் மற்றும் சாரதி தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றது. இத்திட்டத்தின்முலம், 2019 மற்றும் 2020 நிதியாண்டு வரை ரூ. 3 கோடி செலுத்தி தரவு பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் உள்பயன்பாட்டிற்காக அணுகினால் சிறப்பு சலுகையில் குறைவான தொகையில் இதற்கு அனுமதி வழங்கப்படும்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அவ்வாறு, ரூ. 5 லட்சம் என்ற தொகையில், அதே காலக்கெடுவுடன் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். இந்த புதிய தரவு தளங்கள் தேசிய குற்றப் பிரிவு பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, வாகன திருட்டு மற்றும் வாகனம் சார்ந்த குற்றச் சம்பவங்களின்போது போலீஸாருக்கு உதவியாக இருக்கும்" என அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள், இத்திட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், அதற்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கையின்மூலம், வாகனம் பற்றிய அனைத்து தகவலையும் உள்ளடக்கிய 28 துறைகளின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இதில், வாகனத்தின் பதிவு எண், வாகனத்தின் முகவரி, கடன் விவரங்கள், காப்பீட்டு விவரங்கள் மற்றும் காரைப் பற்றிய பல முக்கியமான தகவல்களும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிமத்தின்போது வழங்கிய தனிநபரின் புகைப்படமும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதனால், வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் பலரின் தகவல்கள் எந்தவொரு பாதுகாப்புமின்றி தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தரவுகளை வாங்கும் தனியார் நிறுவனங்கள், பல வழிகளில் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அதேபோன்று, மத்திய அரசின் இத்திட்டத்தின்மூலம், உற்பத்தியாளர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்குறித்த அனைத்து தகவலையும் அறிந்துகொள்வதற்கும், அவரை குறிவைப்பதற்கும், தரவுகள் வாங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து முழுமையான தகவல் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vahan Database To Display Partially Concealed Names Of Vehicle Owners: Ministry Of Transport. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X