காத்தையே கிழிக்க போகுது நம்ம வந்தே பாரத் ரயில்கள்... இனி ஒக்காந்துட்டு மட்டுமல்ல படுத்துட்டு போகலாம்..

220 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் கோச் உடன் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரயில் உருவாக்கம் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரைவில் வந்தே பாரத் ரயிலின் புதிய ஸ்லீப்பர் வெர்ஷன் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்களைக் காட்டிலும் அதிக சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் இந்த ரயில் இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தூர பயணங்களை அசதியில்லாமல் மேற்கொள்ள ஏதுவாக அதிக வசதிகளுடன் இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை உருவாக்க இருப்பதாக ரயில்வேஸைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

வந்தே பாரத் ரயில்

சுமார் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க பிளான் போடப்பட்டு இருக்கின்றது. இதில், 200 ஸ்லீப்பர் வெர்சனாகவும், 200 சீட்டர் வெர்சனாகவும் தயாரிக்கப்பட இருக்கின்றது. இதையும் ரயில்வேஸைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இதுமட்டும் இல்லைங்க ஸ்லீப்பர் வெர்ஷன் மணிக்கு 220 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவல் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயில்கள் அலுமினியத்தாலும், இருக்கை அமைப்பைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை உலோகத்தாலும் (ஸ்டீலால்) தயாரிக்க ரயில்வேஸ் திட்டம் போட்டு இருக்கின்றது. இத்தகைய வந்தே பாரத் ரயில்களே வெகு விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இவற்றை உருவாக்கும் பணிகளே தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயில்கள் எடைக் குறைவானதாக இருக்கவே அவை அலுமினியத்தால் உருவாக்கப்பட இருக்கின்றன.

வந்தே பாரத் ரயில்

இந்த யுக்தியே மணிக்கு 220 கிமீட்டர் வேகத்தை ஸ்லீப்பர் வந்தே பாரத்தில் சாத்தியமாக்க இருக்கின்றது. முதலில் சீட்டர் ரக வந்தே பாரத் ரயிலே தயாரிக்கப்பட இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ வேகமாக இருக்கும். இருப்பினும், பயன்பாட்டிற்கு வரும்போது அது மணிக்கு 130 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே இரண்டாம் கட்டமாக ஸ்லீப்பர ரக வந்த பாரத் ரயில் தயாரிக்கப்பட இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 220 ஆக இருந்தாலும், அது 200 கிமீ வேகம் வரை இயக்கப்பட இருக்கின்றது. இதில், இருக்கை அமைப்பைக் கொண்ட (சீட்டர் வெர்ஷன்) வந்தே பாரத் ரயில்கள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக களமிறக்கப்பட உள்ளது. இதேபோல், ஸ்லீப்பர் வெர்ஷன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கு மாற்றாக அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கட்டமாக வந்தே பாரத் ரயில்கள் களமிறக்கப்பட்டு பழைய ரயில்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட இருக்கின்றன.

வந்தே பாரத் ரயில்

புதிய ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்புதல் வெகு விரைவிலேயே கிடைத்துவிடும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பட்டு உருவாக்க பணிகள் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகின்றது. அனைத்து ரயில்களையும் உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என பலர் வந்தே பாரத் ரயிலை தயாரிக்க முன் வந்திருப்பதாக ரயில்வேத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா ஆகிய வழத் தடங்களில் முதலில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இவை பயன்பாட்டிற்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த வழித்தடங்களை அதிக பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது. சிக்னல் சிஸ்டத்தை மேம்படுத்துதல், மேம்பாலங்களை முறைப்படுத்துதல் மற்றும் பல முதன்மையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுதவிர விபத்தைத் தவிர்ப்பதகற்கான தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் இந்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் அடுத்த இரண்டுகளில் சென்னையில் உள்ள ஐசிஎஃப், மஹாராஷ்டிராவில் உள்ள லத்தூர் ரயில் தொழிற்சாலை மற்றும் ஹரியானாவில் உள்ள சோனபட் ஆகிய ரயில் உற்பத்தி ஆலைகளிலேயே புதிய வந்தே பாரத் ரயில்கள் 400-ம் தயாரிக்கப்பட இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vande bharat train designed to travel 220 kmph
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X