இன்டர்சிட்டி பயணங்களுக்காக விரைவில் அறிமுகமாகிறது வந்தே மெட்ரோ! இது வந்தே பாரத்தின் மினி வெர்ஷனாக்கும்!

இன்டர்சிட்டி பயணங்களுக்கான வந்தே பாரத் ரயிலின் மினி வெர்ஷன் வந்தே மெட்ரோ அடுத்த ஆண்டு அறிமுகமாக இருப்பதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வந்த பாரத் ரயில்கள் இனி இன்டர்சிட்டி இணைப்பு ரயில்களாகவும் இயங்க இருக்கின்றன. இதன் வருகை 2024 ஆம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில்கள் 'வந்தே மெட்ரோ' என அழைக்கப்படும். வழக்கமான வந்தே பாரத் ரயில் 16 கோச்சுகளைக் கொண்டிருக்கும். ஆனால், வந்தே மெட்ரோ 8 கோச்சுகள் கொண்டதாக இருக்கும்.

வந்தே மெட்ரோ

வந்தே பாரத்தின் மினி வெர்ஷன்

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் வந்த பாரத்தின் மினி வெர்ஷனாக இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் இருக்கும். இவை அதி விரைவு ரயிலாக செயல்படும். விரைவான பயணத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற ரயிலாக இது இருக்கும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோல் ரயில்களைபோல் இது பயன்பாட்டில் இருக்கின்றன. உதாரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளையும், அதே சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டையை இணைக்கும் வகையிலும் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்டர்சிட்டி பயணங்களை விரைவில் மேற்கொள்ளலாம்

இதுமாதிரியான ஓர் ரயிலாகவே மினி வந்தே பாரத் ரயில்கள் இயங்க இருக்கின்றன. இவற்றையே அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய ரயில்வேத்துறை அமைச்சகம் திட்டம் போட்டு உள்ளது. நாடு முழுவதும் இந்த ரயிலை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் பிளான் போடப்பட்டு இருக்கின்றது. ஆகையால், வந்தே மெட்ரோ ரயில்களில் வெளியூர்களுக்கு மட்டுமல்ல இன்டர்சிட்டி பயணங்களையும் விரைவில் மேற்கொள்ள முடியும் என்பது தெரிகின்றது.

வந்தே மெட்ரோ

இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் அலுவலகம், பள்ளி மற்றும் வணிக ரீதியாக விரைவான பயணங்களை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். நடப்பாண்டிலேயே வந்தே மெட்ரோ ரயில்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகற் நிறைவடைய இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். சமீபத்திய பட்ஜெட் கூட்ட தொடருக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

அடுத்த ஆண்டிற்குள் உருவாக்க பணிகள் தொடங்கிவிடும்

மேலும், அடுத்த ஆண்டில் உருவாக்க பணிகளை விரிவாக்கம் செய்யவும் திட்டம் போட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இத்துடன், இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் விண்கலம் போன்ற விரிவான பயண அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் 16 கோச்சுகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை போலவே வந்தே மெட்ரோ ரயில்கள் சென்னையில் அமைந்துள்ள இன்டெக்ரல் கோச் ஃபேக்டரியில் தயாரிக்கப்பட இருக்கின்றன.

வந்தே மெட்ரோ

ஐசிஎஃப்-ல பணிகள் தீவிரமாக நடக்குது

வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎஃப்-இல் மட்டுமின்றி மஹாராஷ்டிராவின் லத்தூர், ஹரியானாவின் சோனிபட், உபி-யின் ரேபரேலி ஆகிய இடங்களிலும் தயாரிக்கப்படும் ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலும் நேற்றைய தின பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறை மேம்பாட்டிற்காக ரூ. 2.4 லட்சம் கோடியும், புதிய ரயில் வழித்தட திட்டங்களுக்காக ரூ. 79 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மட்டுமே மத்திய நிதி அமைச்சர் 2023 பட்ஜெட்டில் தாக்கலின்போது அறிவித்திருந்தார்.

வரி உயர்வு

இதுதவிர, சாலை உள்ளிட்ட போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கியும், புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இதுமட்டுமில்லைங்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை குறைக்கும் பொருட்டு 60 சதவீதமாக இருந்த சுங்க வரி விதிப்பு 70 சதவீதமாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக (அதிக வரி விதிப்பால்) மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, ஹூண்டாய் மற்றும் கியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் குறிப்பிட்ட சில சொகுசு கார் மாடல்களை சிபியூ, சிகேடி வாயிலாக நாட்டில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விலையில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட இருக்கின்றது. இந்த நிலை சொகுசு கார் விரும்பிகளைத் தற்போது பலமடங்கு வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. பெரும் பணக்காரர்கள் இனி எந்தவொரு ஆடம்பர வாகனத்தை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு பெரும் தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. இது ஆடம்பர கார் விரும்பிகள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vande metro train to be launched in 2024
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X