75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்த நபர் செய்த ஒரு காரியத்தின் காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

இந்தியாவை சேர்ந்த ஒருவர், ஹோண்டா கோல்டுவிங் ட்ரைக் (Honda Goldwing Trike) பைக்கை, கடந்த ஆண்டு இறக்குமதி செய்தார். இந்தியாவை பொறுத்தவரையில் இது அரிதிலும் அரிதான பைக்குகளில் ஒன்றாகும். தற்போது பொது சாலையில் கேமரா கண்களில் அந்த பைக் சிக்கியுள்ளது. அந்த பைக்கை ஓட்டிக்கொண்டு வந்த நபர் காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை வாங்கினார்.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

பைக் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பைக்கை ஓட்டி வந்த நபர் கடைக்கு சென்று காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கி வந்தார். ஹோண்டா கோல்டுவிங் ட்ரைக் பைக் மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு பைக்கில் வந்தவரை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

அத்துடன் பலர் அந்த பைக்கை தங்கள் கைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கவும் செய்தனர். சமூக வலை தளங்களில் அந்த காணொளி தற்போது வேகமாக பரவி கொண்டுள்ளது. பாதசாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த சிறிய காணொளியில், ஹோண்டா கோல்டுவிங் ட்ரைக் பைக் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

அப்போது ஒருவர் பையில் காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கி வருகிறார். இதன் பின்னர் அவர் ஹோண்டா கோல்டுவிங் ட்ரைக் பைக்கின், பொருட்களை வைப்பதற்கான பகுதியை திறந்து, தான் வாங்கி வந்தவற்றை உள்ளே வைக்கிறார். இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதையும் நம்மால் காணொளியில் காண முடிகிறது.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

ஹோண்டா கோல்டுவிங் ட்ரைக் போன்ற அரிய பைக்குகளில் வந்து காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்குவது என்பது இந்தியாவை பொறுத்தவரையில் எப்போதாவது நடக்க கூடிய விஷயம்தான். ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் இது போன்ற காட்சிகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஏனெனில் அங்கு இத்தகைய பைக்குகளை ஏராளமானோர் வைத்துள்ளனர்.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அரிதிலும் அரிதாக ஒரு சிலரிடம்தான் இத்தகைய பைக்குகள் உள்ளன. எனவே அவர்கள் சர்வ சாதாரணமாக வந்து காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்குவது, இங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தற்போது பரவி வரும் காணொளியில் நாம் காணும் ஹோண்டா கோல்டுவிங் ட்ரைக் பைக்கில், 1,832 சிசி, 6-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது. இது எடை மிகுந்த பைக் என்பதால், ரிவர்ஸ் கியரும் இடம்பெற்றுள்ளது. ஓட்டுபவர் பைக்கை எளிதாக கையாள்வதற்கு இது உதவி செய்யும். அத்துடன் 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கையும் இந்த பைக் பெற்றுள்ளது. ஒரு சில கார்களை விடவும் இது பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

பாபு ஜான் என்பவர்தான் இந்த பைக்கின் உரிமையாளர். கடந்த ஆண்டு இந்த பைக் சாலையில் தென்பட்ட சமயத்தில், இணையத்தில் அவர் பிரபலமானார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அவர் இந்த பைக்கை இறக்குமதி செய்தார். ஆனால் சுங்க துறை அதிகாரிகள் இந்த பைக்கை அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர்.

இதனால் பைக்கை விடுவிப்பதற்காக, 24 லட்ச ரூபாய் வரியாக செலுத்தப்பட்டது. இந்த பைக்கின் விலை 38 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. கூடுதல் வரியாக மட்டும் 24 லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில், இந்த பைக்கின் ஒட்டுமொத்த மதிப்பு 75 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு விலை உயர்ந்த பைக்கை காய்கறி வாங்க பயன்படுத்துவது, இந்தியாவில் உண்மையில் ஆச்சரியமான விஷயம்தான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vegetable Shopping On A Rs 75 Lakh Bike - Viral Video. Read in Tamil
Story first published: Wednesday, October 28, 2020, 19:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X