ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவை எதிர்த்து போராடிய இளைஞர்களை கேரளா போலீஸார் விரட்டிச்சென்று கைது செய்துள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெருகி வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுபோன்று, கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களை மாடிஃபை செய்து இயக்குவது என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

இதனை உறுதி செய்யும்விதமாக உச்சநீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில், "இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்வது குற்றம். அவ்வாறு, மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

வாகனங்களை மாடிஃபை செய்வதனால், அதன் உண்மையானத் தோற்றம் இழக்கப்படுவதுடன், சட்டத்திற்கு புறம்பான விதிமீறல்களில் ஈடுபடுவதற்கும் வழிவகை செய்கிறது. அந்தவகையில், பிறரிடம் இருந்து திருடப்படும் வாகனங்கள், அதன் உண்மையில் நிலையில் இருந்து மாற்றியமைக்கப்பட்டு, புது தோற்றம் அளிக்கப்படுகிறது. அவ்வாறு, திருடப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர் அருகில் சென்றாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அது மாற்றப்படுகிறது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

மேலும்,, இதுபோன்று களவாடப்படும் வாகனங்கள் மூலமாகதான், அனைத்து விதமான குற்றச் சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன. ஆகையால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாடிஃபை வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

இந்தியாவில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிகப்படியான மாடிஃபையாக ஹார்ன் மற்றும் சைலென்சர்கள் மாற்றப்படுகின்றன. அவ்வாறு, மாற்றப்படும் ஹார்ன் மற்றும் சைலென்சர்கள் அதிகளவிலான இரைச்சலை ஏற்படுத்துவதுடன், காற்று மாசினையும் ஏற்படுத்துகிறது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

மேலும், மாடிஃபை வாகனங்களில் இருந்து வெளிவரும் சப்தங்களால் சாலையில் செல்லும் சக பயணிகள், பாதசாரிகள் உட்பட பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால், இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்தியாவின் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், கேரள மாநிலத்தில் அதிக தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு, அண்மையில் அம்மாநில போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு போலீஸார், சாலையில் செல்லும் அனைத்து மாடிஃபை வாகனங்களையும் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் பதிவெண்ணை ரத்து செய்வது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாடிஃபை வாகனங்கள் குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் பக்கத்தின் மூலமாகவும் அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

பெரும்பாலான இளைஞர்கள் தங்களது மாடிஃபை செய்த வாகனங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாக் கொண்டுள்ளனர். அவ்வாறு, பதிவிடும் வாகனங்களின் புகைப்படங்களைக் கொண்டு, குறிப்பிட்ட வாகனங்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படு வருகின்றது. மேலும், அவர்களுக்கு சில நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

அதன்படி, மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை, ஆர்சி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு உண்மை நிலைக்குக் கொண்டுவந்து ஆர்டிஓ அலுவலகங்களில் காண்பிக்கப்படவேண்டும். மீறினால், வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு அவர்களின்மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

ஓடிச் சென்று இளைஞர்களை கைது செய்யும் போலீஸார்: எதற்கு தெரியுமா...? வீடியோ!

இந்நிலையில், மாடிஃபை வாகனங்களுக்கு எதிராக போலீஸார் கையாண்டு முறையை நிறுத்த வேண்டும் என மாடிஃபை வாகன உரிமையாளர் சிலர், கேரள மாநிலம், கொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் வாகனங்கள்மூலம் ரேலியாக சென்றும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும், போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய 15க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் இந்த கடுமையான நடுவடிக்கையால் மாடிஃபை வாகன பிரியர்கள் பெரும் அச்சத்தில் உரைந்துள்ளனர்.

Source: Bikers Heaven

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Police Arrests 15 Youth For Protesting Against Modified Vehicles. Read In Tamil.
Story first published: Tuesday, April 9, 2019, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X