ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸால் மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே உலுக்கி வருகிறது. வல்லரசு என மார்தட்டி கொண்ட நாடுகள் கூட கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளன. இதற்கு அமெரிக்கா நல்ல உதாரணம். உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

அத்துடன் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது தெரியாமல், அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து போயுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவில் தற்போது மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஊரடங்கால், அமெரிக்காவின் ஒரு சில முக்கிய பகுதிகளில் தற்போது வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்ற சம்பவங்களை தடுப்பது அமெரிக்க போலீசாருக்கு தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. அதேசமயம் திருட்டு சம்பவங்களால் வாகன உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, அமெரிக்காவில் பெரும்பாலானோர் தற்போது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதில், ஒரு சிலரின் செடான்கள், எஸ்யூவிகள் மற்றும் பிக்அப் டிரக்குகள் கவனிப்பு இன்றி வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான வீதிகள் அமைதியாக காட்சியளிக்கின்றன. வாகன போக்குவரத்து குறைவாகவே இருக்கிறது. இருந்தபோதும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மே மாதத்தின் மத்திய பகுதி வரை, நியூயார்க்கில் 63 சதவீதமும், லாஸ் ஏஞ்சல்ஸில் கிட்டத்தட்ட 17 சதவீதமும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய பகுதிகளில் தற்போது வாகன கொள்ளை சம்பவங்கள் இந்த அளவிற்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் தவிர அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும் வாகன திருட்டு தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

வாகன திருட்டு இப்படி அதிகரித்து கொண்டிருந்தாலும், அமெரிக்காவில் மற்ற குற்ற சம்பவங்கள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிஸ்க் குறைவான குற்றம் என்பதால்தான், தற்போது வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் இருக்கிறது.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

அமெரிக்காவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் பலர், டோரை லாக் செய்யாமல், அப்படியே திறந்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர். மேலும் சாவியையும் வாகனத்திலேயே விட்டு செல்கின்றனர். இது திருடர்களின் பணியை எளிதாக்கி விடுகிறது. திருடும் எண்ணம் இல்லாதவர்களுக்கு கூட இதை பார்த்தால், திருட்டு எண்ணம் வந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

இதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகனங்களை திருடும் சம்பவங்களும் அமெரிக்காவில் அதிகளவில் நடக்கின்றன. இதற்கும் ஆதாரம் இருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்ட்டின் நகரில், கடந்த ஏப்ரல் மாதம் கொள்ளையடிக்கப்பட்ட 322 வாகனங்களில், சுமார் 72 சதவீத வாகனங்களின் சாவி அருகிலேயே இருந்துள்ளது.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

இதுகுறித்து அமெரிக்காவின் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''டிரைவர்கள் பலர் தற்போது தங்களது வாகனத்தை பயன்படுத்துவதில்லை. அத்துடன் வாகனத்தை அடிக்கடி 'செக்' செய்வதும் இல்லை. இதனை பயன்படுத்தி கொண்டு, கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இங்கு க்ரிமினல்கள் பலர் தற்போது வேலையில்லாமல் சுற்றி கொண்டுள்ளனர்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

அவர்களின் கைகளில் அதிக நேரம் இருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு பணமும் தேவைப்படுகிறது. மேலும் இன்டர்நெட்டும் கூட கொள்ளையர்களுக்கு உதவி செய்கிறது. வாகனங்களை எப்படி கொள்ளையடிப்பது? என்பதை ஒரு சிலர் யூ-டியூப்பில் தேடி தெரிந்து கொள்கின்றனர். இதன் மூலம் வாகன கொள்ளையில் அவர்கள் கை தேர்ந்தவர்களாக மாறி விடுகின்றனர்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

ஒரு சிலர் வெறும் பத்தே வினாடிகளில் வேலையை முடித்து விடுகின்றனர். கொள்ளையர்கள் வாகனங்களில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. சட்டென வேலையை முடித்து கொண்டு கிளம்பி விடுகின்றனர். மேலும் இரவு நேரங்களில்தான் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் என்பதும் இல்லை. பட்டப்பகலிலேயே சிலர் வாகனங்களை கொள்ளையடிக்கின்றனர்'' என்றனர்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

இதே பாணியில் இந்தியாவிலும் கூட வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. நீங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு எங்கே செல்வதாக இருந்தாலும், சாவியை மறக்காமல் கையோடு எடுத்து சென்று விடுங்கள். ஒரு சிலர் சாவியை எடுத்து செல்ல மறந்து விடுகின்றனர்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

சாவியை விட்டு சென்றால், எனது வாகனத்தை கொள்ளையடித்து கொள்ளலாம் என நீங்களே திருடர்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்தது போலாகி விடும். அத்துடன் வாகனம் லாக் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் ஒரு முறைக்கு இரு முறை 'செக்' செய்து கொள்ளுங்கள். கார் என்றால், விண்டோ கண்ணாடிகளை மறக்காமல் மேலே ஏற்றி விடவும்.

ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?

மேலும் வாகனங்களை பார்க் செய்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்யுங்கள். மேலும் டிராக்கிங் டிவைஸ்களை பயன்படுத்துவது குறித்தும் நீங்கள் பரிசீலிக்கலாம். என்னதான் எச்சரிக்கையாக இருந்தும் வாகனம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டால், அதனை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு டிராக்கிங் டிவைஸ்கள் உதவி செய்யும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vehicle Theft Spikes In U.S. Amid Covid-19 Crisis. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X