மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்ட்டேக் (FASTag) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால், மத்திய அரசு பாஸ்ட்டேக்கை கட்டாயம் செய்துள்ளது. ரொக்கமாக பணம் செலுத்தினால், டோல்கேட்களில் வாகனம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

சில சமயங்களில், அதுவும் குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் தொடங்கும் மற்றும் முடிவடையும் சமயங்களில் வாகனங்கள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பாஸ்ட்டேக் பயன்படுத்தினால், அவ்வாறு நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும். எனவே வாகன ஓட்டிகளின் நேரம் மிச்சமாகும்.

MOST READ: நல்ல மனுஷன்யா... சொந்த ஊர் செல்ல சைக்கிளை திருடிய தொழிலாளி... மனசு கேட்காமல் என்ன செய்தார் தெரியுமா?

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

அத்துடன் காத்திருக்கும் நேரத்தில் வாகனங்கள் தேவை இல்லாமல் ஆன் செய்து வைக்கப்பட்டிருப்பதால், எரிபொருள் வீணாவதும் பாஸ்ட்டேக் மூலமாக தவிர்க்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. மேலும் பாஸ்ட்டேக் மூலமாக காகித பயன்பாடும் குறைக்கப்படுகிறது. இப்படி பாஸ்ட்டேக் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

ஆர்எஃப்ஐடி (Radio Frequency Identification - RFID) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு பாஸ்ட்டேக் இயங்குகிறது. ஏற்கனவே ரீசார்ஜ் செய்யப்பட்ட பாஸ்ட்டேக் அட்டையை, உங்கள் வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் பொருத்தி கொள்ள வேண்டும். அதனுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து, நீங்கள் டோல்கேட்டை கடக்கும்போது கட்டணம் எடுத்து கொள்ளப்படும்.

MOST READ: விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

தேவைப்படும் நேரங்களில் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். கடந்த மே மாத தொடக்கம் வரை நாடு முழுவதும் மொத்தம் 1.68 கோடி பாஸ்ட்டேக் அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது பாஸ்ட்டேக் கட்டாயம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

ஆனால் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக்குகளுக்கான பிரத்யேக லேனில் நுழைந்து விட்டால், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி செல்லாத அல்லது செயல்படாத பாஸ்ட்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

MOST READ: கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடிஜி-யின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ''பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள் மற்றும் செல்லாத அல்லது செயல்படாத பாஸ்ட்டேக் அட்டை கொண்ட வாகனங்கள் இனி இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். வாகனத்தின் வகையை பொறுத்து, அதற்கு இணையான இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்'' என்றனர்.

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

இதற்கான அறிவிப்பு நேற்று (மே 17ம் தேதி) வெளியிடப்பட்டது. எனினும் பாஸ்ட்டேக் மூலமாக ஏராளமான நன்மைகள் இருந்தாலும், காத்திருக்கும் நேரம் குறையவில்லை என்று சில வாகன ஓட்டிகள் புலம்பியதை கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

MOST READ: போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க

மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

வாகன இயக்கத்திற்கும், பயணங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சாலைகளில் வாகன போக்குவரத்து முடங்கி கிடக்கிறது. இதனால் தற்போதைய நிலையில் டோல்கேட்களில் பெரிதாக காத்திருக்க வேண்டிய சூழல் இல்லை. ஆனால் அதற்கு முன்பு பாஸ்ட்டேக் காரணமாக டோல்கேட்களில் காத்திருக்கும் நேரம் உயர்ந்து விட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vehicles With Invalid Or Non-functional FASTag To Be Charged Double Toll Fee. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X