வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

வெறும் 15 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இத்தாலியை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஃபெராரி. என்ஸோ ஃபெராரி என்பவரால், கடந்த 1939ம் ஆண்டு ஃபெராரி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இடைப்பட்ட 81 ஆண்டுகளில் ஃபெராரி நிறுவனம் பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஃபெராரி நிறுவனம் தயாரித்து வரும் சூப்பர் கார்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இந்தியாவில் உள்ள சூப்பர் கார் பிரியர்கள் மத்தியிலும் ஃபெராரி மிகவும் விருப்பமான பிராண்டாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எப்படியாவது ஒரு ஃபெராரி காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் இங்கு ஏராளம். ஆனால் ஃபெராரி கார்களின் அதிகப்படியான விலை அந்த லட்சியத்தை அடைவதற்கு தடையாக உள்ளது.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

ஒரு வேளை உங்களிடம் போதுமான பணம் இருந்தாலும், நீங்கள் ஃபெராரி காரை வாங்கி மகிழ்ச்சியாக ஓட்ட முடியுமா? என்பது சந்தேகமே. ஏனெனில் ஃபெராரி போன்ற சூப்பர் கார்களை ஓட்டுவதற்கு, இந்தியாவில் உள்ள சாலைகள் உகந்ததாக இல்லை. அதிக விலை, சாலைகள் ஏற்புடையதாக இல்லாமை போன்ற காரணங்களால் இந்தியாவில் ஃபெராரி கார்களை பார்ப்பது அரிதான விஷயமாக உள்ளது.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இந்தியா மட்டுமல்லாது, வியட்நாம் போன்ற நாடுகளிலும் கூட இதே நிலைமைதான். ஆனால் வியட்நாமிலும் ஃபெராரி கார்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர் ஒன்று சேர்ந்து செய்துள்ள ஒரு காரியம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நண்பர்களான அவர்கள் மூன்று பேரும் உண்மையான ஃபெராரி காரை ஜெராக்ஸ் எடுத்தது போன்ற பிரதி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இதன் தோற்றம் பார்ப்பதற்கு உண்மையான ஃபெராரி காரை போலவே உள்ளது. அத்துடன் இந்த காரின் ஒரு சில அம்சங்கள், உண்மையான ஃபெராரி காரில் இருப்பதை போலவே இருக்கின்றன. ஆனால் இந்த காரை உருவாக்க அவர்கள் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 200 அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

உலகிலேயே விலை உயர்ந்த கார்களில் ஒன்றின் தங்கள் வெர்ஷனை இந்த குழுவினர் 15 ஆயிரம் ரூபாயில் உருவாக்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஃபெராரி கார்கள் உலகில் பலருக்கும் கனவாக இருந்து வரும் நிலையில், இந்த மூன்று பேர் குழு உருவாக்கியுள்ள காரின் வீடியோ உலகம் முழுக்க இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

வியட்நாம் நண்பர்கள் தங்கள் வீட்டிலேயே உருவாக்கியுள்ள இந்த காரில், உண்மையான ஃபெராரி காரை போன்ற சப்தமும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 'ஹோம்மேட்' காரை அவர்கள் உருவாக்கும் பணிகளில் ஈடுபதையும், ஓட்டுவதையும் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. 3 நிமிடங்கள் மற்றும் 7 வினாடிகளுக்கு அந்த வீடியோ ஓடுகிறது.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

முகநூலில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்த மூன்று நண்பர்களும், அட்டையுடன் உதவியுடன் காரின் பாடியை கட்டமைப்பதை பார்க்க முடிகிறது. ஃபெராரி காரின் பாடியை போன்றே இந்த காரின் பாடியையும் அவர்கள் உருவாக்கிய அதே நேரத்தில், ஹெட்லைட், பிரேக் லைட் மற்றும் ரியர்வியூ மிரர் ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இந்த காரின் பின் பகுதியில் ஃபெராரி லோகோ வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உண்மையான ஃபெராரி கார் போன்றே இந்த காரின் டோர்களும் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஃபெராரி காரின் பிரதியை முழுமையாக உருவாக்கி முடிக்க, இந்த வியட்நாம் நண்பர்களுக்கு மொத்தம் 2 வார காலம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

வியட்நாம் நண்பர்கள் உருவாக்கியுள்ள காரில், ரியர் வியூ கேமராவும் இடம்பெற்றுள்ளது. நீங்கள் இதற்கு முன் எப்போதாவது, கிக்ஸ்டார்ட் உடன் ஃபெராரி கார்களை பார்த்துள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த கார் கிக்ஸ்டார்ட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

தற்போது பைக்குகளிலேயே கிக்ஸ்டார்ட் வழக்கொழிந்து வருகிறது. அதற்கு பதிலாக செல்ஃப் ஸ்டார்ட் வசதி இரு சக்கர வாகனங்களை ஆக்கிரமித்து விட்டது. அப்படி இருக்கையில் இந்த ஃபெராரி காரின் பிரதியில், கிக்ஸ்டார்ட் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த காரில், வியட்நாம் குழு மோட்டார்சைக்கிள் இன்ஜினை பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகப்புகழ் பெற்ற கார் மாடல்களின் பிரதிகள், வீட்டிலேயே உருவாக்கப்படுவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாகவும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

Image Courtesy: Supercar Blondie

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vietnam: Three Friends Build A Ferrari For Just Rs 15,000 - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X