2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தைக் கலக்கிய வின்டேஜ் கார்கள்

குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழா நிறைவு விழாவில் கார் கண்காட்சி நடந்தது. அதில் பழங்கால கார்கள் எல்லாம் கலந்து கொண்டன. இந்த கார் கண்காட்சி குறித்த விபரம் அதில் கலந்து கொண்ட கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குற்றால சீசன் காலத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாரல் திருவிழா நடத்தப்படும். அப்பொழுது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போட்டிகள் நடத்தப்படும், மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பார்கள். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காரணமாகச் சாரல் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டு சாரல் திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

விழாவின் கடைசி நாளன்று (12ம் தேதி) பழைய கார்களின் கண்காட்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 1910ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட பல தரப்பட்ட கார்கள் அணி வகுப்பில் கலந்து கொண்டன. இந்த அணிவகுப்பில் கார்கள் எல்லாம் குற்றாலம் பகுதியைச் சுற்றி வந்தன. இந்த பதிவில் அந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு கார் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் உசேன் வழங்கிய விபரங்களைக் கீழே காணப்போகிறோம்.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஆஸ்டின் ஏ40

இந்த கார் 1956ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆஸ்டின் மோட்டார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. பெட்ரோல் இன்ஜின் காரான இது 4 சிலிண்டருடன் 3 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் வித்தியாசமான கியர் பேட்டனை கொண்டுள்ளது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

சோமர் சேட் ஆஸ்டின்

இந்த காரும் இங்கிலாந்தின் ஆஸ்டின் மோட்டார் நிறுவனத்தின் 1950ம் ஆண்டு தயாரானது. இது பெட்ரோல் இன்ஜின் கார். இந்த காரை சோமர்சேட் கார் என்றும் அழைக்கிறார்கள். இந்த காரும் 4 சிலிண்டர் இன்ஜின் கொண்டது இது 3 எச்பி பவரை வெளிப்படுத்தும்

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

Wolseley

இங்கிலாந்தைச் சேர்ந்த Wolseley மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த கார் இது இந்த கார் 1140 சிசி இன்ஜின் திறன் கொண்டது. இந்த கார் 1937ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இந்த கார் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ப்ளே மவுத்

இந்த காரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ப்ளேமவுத் நிறுவனத்தால் கடந்த 1930ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கார் அமெரிக்காவிற்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் இந்தியா வந்தது. இந்த காரை ஒரு காலத்தில் மைசூர் மகாராஜா பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த உண்மைத் தன்மை தெரிவில்லை. ஆனால் இந்த கார் உலகில் உள்ள சில பழமையான கார்களில் இதுவும் ஒன்று.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஆஸ்டின் பேபி

இந்த காரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஸ்டின் நிறுவனத்தில் 1918ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கார்களின் வீல்கள் எல்லாம் ஃபோர்க்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற பழமையான கார் இது தான். இந்த காரில்ஹெட்லைட்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் உருவாக்கப்படும் போது இதில் விளக்கு எரிய வைத்து வெளிச்சம் ஏற்படுத்தக் கருவி பொருத்தப்பட்டது. இதுவும் இந்த காரில் தற்போது வரை இருக்கிறது. ஆனால் அதை ஆல்டர் செய்து பல்ப் பொருத்தியுள்ளனர்.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

மோரீஸ் 8

இந்த கார் அமெரிக்காவைச் சேர்ந்த மோரீஸ் நிறுவனத்தால் 1948ம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. இந்த கார் இந்தியாவிற்கு சில எண்ணிக்கையில் மட்டும் கொண்டு வரப்பட்டது. அதில் சிலவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த கார் இரண்டு டோர்களுடன் மட்டும் வரக்கூடியது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

பென்ட்லீ

பென்ட்லீ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கார் இது 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கார் மிகவும் அரிய வகை கார் இந்தியாவிலேயே தற்போது ஓரிரு கார்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த கார் 12 சிலிண்டர் இன்ஜின் உடன் உள்ள கார் நீண்ட தூரப் பயணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கார் இது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஆஸ்டின் சம்மீ

இந்த காரும் இங்கிலாந்தின் ஆஸ்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 1917ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கார் மிகவும் பழமையான காராக இருக்கிறது. நூற்றாண்டுகளைத் தாண்டியும் இந்த கார் இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த காரை ஸ்டார்ட் செய்ய காரின் முன்புறம் ரோட்டேட்டர் இருக்கும்.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

சேவரலெட் இம்பாலா

சேவரலேட் நிறுவனம் கடந்த 1969ம் ஆண்டு தயாரித்த கார் இது இது மிகவும் அகலமான கார் இந்த கார் சாலையில் சென்றால் மற்ற வாகனங்கள் இந்த காரை முந்தி செல்வது என்பது மிகவும் சிரமம் இந்த கார் சொகுசு வசதிக்காகவும் நீண்ட தூர பயணத்திற்காகவும் அதி பவர்ஃபுல் காராக தயாரிக்கப்பட்டுள்ளது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

மினி மோக் - ஆஸ்டின்

ஆஸ்டின் நிறுவனம் 1972ம் ஆண்டு தயாரித்த கார் இது. இதற்கு மோக் என்று அந்நிறுவனம் பெயரிட்டது. இந்த கார் பார்க்கச் சிறிதாக இருப்பதால் மக்கள் இதை மினி மோக் என அழைக்கத் துவங்கினர். இந்த கார் சிறிய தூரப் பயணம் மற்றும் நகர்ப் புற பயணத்திற்காகவும் உருவாக்கப்பட்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

டோட்ஜ் சார்ஜர்

அமெரிக்காவைச் சேர்ந்த டோட்ஜ் நிறுவனம் கடந்த 1975ம் ஆண்டு இந்த காரை தயாரித்தது. இதற்கு டோட்ஜ் சார்ஜர் எனப் பெயர் வைத்தது. இது மிகவும் நீளமான கார் இந்த காரில் 5.2 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உலக அளவில் மொத்தமே 30 ஆயிரம் கார் மட்டுமே தயாரானது அதில் ஒன்று தான் இது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

அம்பாஸிட்டர் மார்க் 1

அம்பாஸிட்டர் காரை யாராலும் மறக்க முடியாது. பலரின் கனவு காராக இந்த அம்பாஸிட்டர் கார் தான் இருக்கிறது. இந்த அம்பாஸிட்டர் காரின் மார்க் 1 கார் தான் இது தான். இந்த கார் கடந்த 1959ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

பக் ஃபியட்

இந்த கார் ஃபியட் 1959ம் ஆண்டு உருவாக்கிய கார் இது. இது வெறும் 500 சிசி இன்ஜினை கொண்ட சிறிய கார் இதை ஃபியட் 500 என்றும் டாப்லினா என்றும் அழைப்பாளர்கள், இந்த காரில் பயன்படுவதுள்ள இன்ஜின் மிகவும் அறிய வகை இன்ஜின் ஆகும். வெறும் 18 ஆண்டுகளில் மொத்தம் 38 லட்சம் கார்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று சில கார்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ப்ளே மவுத்

இந்த காரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ப்ளேமவுத் நிறுவனத்தால் 1952ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கார் மிகப்பெரிய கார உருவாக்கப்பட்டது. சிலிண்டர் இன்ஜின் உடன் இந்த கார் தயாரிக்கப்பட்டது. நீண்ட தூரப் பயணத்திற்காக இந்த கார் தயாரிக்கப்பட்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

டோட்ஜ் கிங்ஸ்வே

இந்த காரை டோட்ஜ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே 1940ம் ஆண்டு தயாரித்தது. இது அந்த காலத்திலேயே குறைந்த விலை காராக அறியப்பட்டது. இந்த காரும் பெரிய நீளமான காராக வடிவமைக்கப்பட்டது. இதில் 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது தற்போது முற்றிலும் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டுள்ளது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஃபோர்டு ஜீப்

ஃபோர்டு நிறுவனம் தயாரித்த இந்த ஜீப் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த ஜீப் சிறப்பாக ஓடும் கண்டிஷனில் இருக்கிறது. மிலிட்டரி பயன்பாட்டிற்காக 2ம் உலகப்போர் சமயத்தில் 1942ம் ஆண்டு இந்த ஜீப் தயாரிக்கப்பட்டது. பின்னர் இது இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

யாஸ் ஜீப் - ரஷ்யன்

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யாஸ் என்ற நிறுவனம் இந்த ஜீப்பை தயாரித்துள்ளது இந்த ஜீப் போர் காலத்தில் தான் பயன்படுத்தப்பட்டது. ஹிட்லர் படையினர் இந்த ஜீப்பை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஜீப் ரேடியேட்டர் சிஸ்டத்தை கொண்டது. அதனால் போர்க் களத்தில் தண்ணீர் இல்லாமல் அதிக சூடாகி ஆங்காங்கே நின்றுவிடும். போர்க் களத்தில் தண்ணீர் கிடைக்காமல் வீரர்கள் தவித்துள்ளனர். அதனால் ஹிட்லர் இந்த ஜீப்களை போர்களிலிருந்து நீக்கிவிட்டு ரேடியேட்டர் இல்லாத வாகனங்களைத் தயாரிக்க உத்தரவிட்டார் என்பது வரலாற்றுத் தகவல்

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

அம்பாஸிட்டர்

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1958ம் ஆண்டு தயாரித்த அம்பாஸிட்டர் கார் இது. இது அம்பாஸிட்டர் மார்க் 2 கார். இந்த காரும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

டுக்கர் ஃபியட்

இந்த கார் 1957ம் ஆண்டு ஃபியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த கார் பிரிமியர் பத்மினி காருக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார் இந்த காரை ஃபியட் 1100 என்றும் அழைப்பார்கள். அந்த காலத்திலேயே பல மார்டன் டெக்னாலஜிகளை கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டது. இந்த கார் வெறும் ரூ7500க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

காண்டஸா

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த கான்டஸா கார் மிகவும் பிரபலமான கார். 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த கார் பழைய சினிமாக்களில் அறிமுகமாகியிருக்கும். இந்த கார் 1975ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்த காரை பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் பெரிய அந்தஸ்து படைத்த நபராகக் கருதப்படுவார்கள்.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

கவ்லே மோரீஸ்

இங்கிலாந்தைச் சேர்ந்த மோரீஸ் நிறுவனம் கடந்த 1915-1958 முதல் பல்வேறு கார்களை கவ்லே மோரீஸ் என்ற பெயரில் வெளியிட்டது. அப்படி வெளியான ஒரு கார் தான் இது. இந்த கார் 1930ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கார் 4 சிலிண்டர் இன்ஜின் உடன் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஃபோர்டு ஆங்கிலா

இங்கிலாந்து ஃபோர்டு நிறுவனம் சிறிய குடும்பம், குடும்பமாக வெளியே செல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட தான் இந்த ஃபோர்டு ஆங்கிலா இந்த கார் 1945ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கார் மிகவும் பிரபலமானது. அதிக அளவில் விற்பனையான கார். பல குடும்பத்தினர் இந்த காரை வாங்கி பயன்படுத்தினர். கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த கார் இடது பக்க டிரைவ் சிஸ்டத்தை கொண்டது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஹில்மேன் மின் எக்ஸ்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹில்மேன் நிறுவனம் கடந்த 1946ம் ஆண்டு தயாரித்த இந்த காரின் பெயர் மின் எக்ஸ், இந்த கார் அப்பொழுது நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தும் காராக இருந்தது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

டோட்ஜ் பிரதர்ஸ் லாரி

டோட்ஜ் நிறுவனம் கார்களை தயாரித்தது போல டோட்ஜ் பிரதர்ஸ் நிறுவனம் கனரக வாகனங்களைத் தயாரித்தது. அந்நிறுவனம் தயாரித்த லாரி தான் இது. 1925ம் ஆண்டு இந்த லாரி தயாரிக்கப்பட்டது. அந்த காலத்தில் இதை பஸ்ஸாக பயன்படுத்தினர். பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டிச் செல்ல பயன்படுத்தினர். இன்று இது கேராவேனாக மாற்றப்பட்டு லாரிக்குள்ளேயே பாத்ரூம், உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் , மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தை கலக்கிய வின்டேஜ் கார்கள் . . .

ஸ்டூட் பேக்கர்

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஸ்டூட் பேக்கர் இந்நிறுவனம் அந்நாட்டு போலீஸ் பயன்பாட்டிற்காக 1930களில் உருவாக்கிய லாரி தான் இது. இது போலீசார் கைதிகளைக் கூட்டிச் செல்ல பயன்படுத்தப்படும் வாகனம். இன்றும் இது போன்ற வாகனம் இருந்தாலும் இதன் முகப்பு அமைப்பு வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vintage car show in courtrallam saaral thiruvizha know full details of each car
Story first published: Saturday, August 13, 2022, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X