பெண் அளித்த புகார் எதிரொலி... "அபராதம் செலுத்திவிட்டேன்" - இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்...

போலீஸார் வழங்கிய அபராதத்தை செலுத்திவிட்டதாகக் கூறி பிரபல நடிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பெண் அளித்த புகார் எதிரொலி...

பிரபல இந்தி திரைப்பட நடிகரான விவேக் ஓபராய் மீது அண்மையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை புகார் எழும்பியது. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, விவேக் ஓபராயும், அவரது மனைவியும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விலையுர்ந்த பைக்கில் ஜாலி ரைடு சென்றனர். அப்போது, இருவரும் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணியாமல் பயணித்திருந்தனர்.

பெண் அளித்த புகார் எதிரொலி...

இந்த விதிமீறல் மக்கள் மத்தியிலும், விவேக் ஓபராயின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிர் காக்கும் தலைக்கவசத்தை ரைடர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகளும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது விதியாகும். இதேபோன்று, உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாஸ்க் அணிவதையும் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

பெண் அளித்த புகார் எதிரொலி...

ஆனால், இவ்விரு விதிகளையும் விவேக் ஓபராய் மற்றும் அவரது மனைவி இருவரும் ஜாலி ரைடின் போது கடைபிடிக்கவில்லை. இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, இது ஓர் தவறான முன்னுதாரணம் என நெட்டிசன்கள் பலர் சாட தொடங்கினர்.

பெண் அளித்த புகார் எதிரொலி...

மேலும், சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோவைச் சுட்டிக் காட்டிய பெண் சமூக நல ஆர்வலர் ஒருவர், விவேக் ஓபராய் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் வழங்கிய உத்தரவின்பேரில் விவேக் ஓபராய் மீது மும்பை நகர போக்குவரத்து போலீஸார் வழக்ககு பதிந்தனர்.

இதையடுத்து அவருக்கான இ-செல்லாணை அனுப்பி வைத்தனர். ஹெல்மெட்டை அணியாததற்கான அபராத செல்லாண் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. மாஸ்க் அணியாததற்கான எந்தவொரு நடவடிக்கையும் அவர்மீது எடிக்கப்படவில்லை. தான், அபராதத்தைச் செலுத்திவிட்டதாகக் கூறி விவேக் ஓபராய் வெளியிட்டிருக்கும் வீடியோவும் இதனை உறுதி செய்கின்றது.

பெண் அளித்த புகார் எதிரொலி...

முன்னதாக ஜாலி ரைடுகுறித்த வீடியோவையும் விவேக் ஓபராயே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, அவர் மீது சர்ச்சை புகாரை எழுப்ப காரணமாக அமைந்தது. இந்த நிலையிலேயே தனக்கு போலீஸார் விதித்த அபராதத்தை செலுத்தி விட்டேன் கூறி கட்டணத்தைச் செலுத்தியதற்கான நகலை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார், நடிகர் விவேக் ஓபராய்.

பெண் அளித்த புகார் எதிரொலி...

அந்த வீடியோவில், சூப்பர் பைக்குகளான பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ கே1600 ஜிடிஎல் ஆகிய இரு பைக்குகளையும் தான் வைத்திருப்பதாக காண்பித்திருக்கின்றார். நடிகர் விவேக் ஓபராய் ஓர் மிகப்பெரிய இருசக்கர வாகன பிரியர் ஆவார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ அமைந்திருக்கின்றது.

இவரிடத்தில் ஏராளமான சூப்பர் மற்றும் பிரீமியம் ரக பைக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவ்வாறு, அவர் வைத்திருக்கும் ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக இந்த அபராதத்தை அவர் செலுத்தியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vivek Oberoi Shares New Video About His Challan For Helmetless Riding. Read In Tamil.
Story first published: Saturday, February 27, 2021, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X