விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

விவிஐபி, அமைச்சர்களுக்கு கார் டிரைவராக இருப்பது என்பது கடினமான காரியம். இந்திய பிரதமர்களின் கான்வாயில் இருந்த கார்களின் டிரைவர்கள் எப்படி பயிற்சி பெற்றனர்? என்பதை இந்த செய்தியில் காணலாம்.

By Arun

விவிஐபி, அமைச்சர்களுக்கு கார் டிரைவராக இருப்பது என்பது மிகவும் கடினமான காரியம். எனினும் அதற்கான தகுதிகள் என்ன? இந்திய பிரதமர்களின் கான்வாயில் இருந்த கார்களின் டிரைவர்கள் எப்படி பயிற்சி பெற்றனர்? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

சுதந்திரத்திற்கு பிறகு ஏறக்குறைய ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) கழித்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கார் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை தெரியாதவர்கள் யாரும் நிச்சயமாக இருக்க முடியாது.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

அம்பாஸிடர், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கார் மட்டுமல்ல. இந்தியாவில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த ஒரே காரும் இதுதான். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அம்பாஸிடர் கார், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அரசு வாகனமாக பல ஆண்டுகள் சேவை செய்துள்ளது.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

பல பேன்ஸி நியூ ஏஜ் கார்கள் வந்து விட்டாலும் கூட, நமது நாட்டின் விவிஐபிக்கள் பலரும் இன்னமும் அம்பாஸிடர் காரில் பயணிப்பதை விரும்பவே செய்கின்றனர். அம்பாஸிடர் காரை பராமரிப்பது எளிது, விசாலமான இட வசதி, சௌகரியம் என இதற்கு பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பலரும் விரும்புவதற்கான ஒரு பொதுவாக காரணமும் உள்ளது. இந்த காரின் தனித்துவமான வெண்மை நிறம்தான் அது. அரசு அதிகாரிகளும், விவிஐபி கான்வாய்களும் பயணிக்கும்போது, கண்களை கவரும் வகையில் வெண்மை நிறமாக காட்சியளிக்கும்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அம்பாஸிடர் கார், 1958ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. பின்னர் கடந்த 2014ம் ஆண்டுதான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

அம்பாஸிடர் கார்களுக்கு பதிலாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களை, அடல் பிஹாரி வாஜ்பாய் கொண்டு வரும் வரை, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ காராகவும் அம்பாஸிடர்தான் இருந்து வந்தது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்கள், 1977ம் ஆண்டு தொடங்கி இன்று வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

அம்பாஸிடர் காருக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் கூட, பருமன், மிகவும் மெதுவாக இயங்கும் என ஒரு சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட குறைகள் கூறப்பட்ட அம்பாஸிடர் காரை வைத்து கொண்டு, பயிற்சி நடைபெற்ற வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வீடியோவில் பார்த்த 2 அம்பாஸிடர் கார்களும் அரசால் வழங்கப்பட்டவை. நமது முன்னாள் பிரதமர்களின் கான்வாயில் பயன்படுத்தப்பட்டவை என்பது இவற்றின் சிறப்பம்சம். விவிஐபிக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைபெற்ற பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

2 அம்பாஸிடர் கார்களும் வந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்கிறது (பயிற்சிக்காக தற்காலிகமாக குண்டு வெடிக்கப்பட்டது). அப்போது 2 டிரைவர்களும் ஒரே மாதிரியாகவும், விரைவாகவும் அம்பாஸிடர் காரை திருப்பி, விவிஐபியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றனர்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

அம்பாஸிடர் கார் மந்தமாக இயங்கும் என குறை கூறுபவர்கள், இந்த வீடியோவை பார்த்தால் என்ன சொல்வார்கள்? வேகமாக சென்று கொண்டிருக்கையில் 'ஹேண்ட் ப்ரேக் டர்ன்' ஸ்டண்ட் செய்து, தங்களின் திறன்களை காட்டிய அந்த டிரைவர்களுக்கும்தான் பாராட்டுக்கள் செல்ல வேண்டும்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

விவிஐபிக்களுக்கு கார் டிரைவராக இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு பலவிதமான பயிற்சிகளை பெற வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகளில் விரைவாக செயலாற்றும் 'ப்ரஸன்ஸ் ஆப் மைண்ட்' இருக்க வேண்டும்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான அம்பாஸிடர் கார்கள் பெட்ரோல் வேரியண்ட்களாகதான் இருந்தன. இதில், 1.8 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 4 சிலிண்டர் கேசோலின் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா?

இந்த மோட்டார் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 135 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் என விவிஐபிக்கள் பலர் இன்று புல்லட் புரூப் கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அம்பாஸிடரின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Source: Retro Classics India

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Want to drive bullet proof cars for Indian ministers? Read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X