போன் பேசி கொண்டே பைக்கில் சென்றவரை தடுத்த போலீஸ் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ

செல்போனில் பேசிக்கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த காவலரை தகாத வார்த்தைகளால் பேசி இளைஞர் ஒருவர் தாக்க முயற்சி செய்துள்ளார். அவர் அப்பகுதியில் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகன் என்பதால் இந்த செயலில் ஈடுபட்ட

By Balasubramanian

செல்போனில் பேசிக்கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த காவலரை தகாத வார்த்தைகளால் பேசி இளைஞர் ஒருவர் தாக்க முயற்சி செய்துள்ளார். அவர் அப்பகுதியில் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகன் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தான் செய்யும் சாலை விதிமீறலுக்கு செல்வாக்கை பயன்படுத்தும் நோய் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

கன்னியாக்குமரி மாவட்ட நாகர்கோவிலை சேர்ந்த பிரபல துணிக்கடைக்காரரின் மகன் ஸ்ரீநாத் இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் உயர்ரக பைக் ஒன்றில் செல்போனில் பேசிய படியே ஓட்டி கொண்டு வந்துள்ளது.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

இதை பார்த்த அங்கிருந்த காவலர் சுரேஷ் என்பவர் ஸ்ரீநாத்தை நிறுத்தி அதில் இருந்த சாவியை பிடுங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீநாத் காவலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

ஸ்ரீநாத், காவலர் சுரேஷிடம் தாகத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கவும் முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அருகில் உள்ள நேசமணி போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைவாகவந்த போலீசார் ஸ்ரீநாத்தை வல்லுகட்டாயமாக போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்றனர்.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

அவர் மீது காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவதூறாக பேசி தாக்க முயன்றது. உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீநாத் பைக்கில் வரும் போது ஹெல்மெட்டும் போடவில்லை.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் அதிகமாக நடந்து வருகிறது. ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தான் செய்யும் தவறுகளில் இருந்து தப்பி கொள்கிறார்கள்.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

சில போலீசார் நேர்மையாக நடக்க முயன்றாலும் அவர்களின் செல்வாக்கை கொண்டு நேர்மையாக நடக்க முயன்றவறை ஒரு வழி செய்து விடுகின்றனர். இந்த நடைமுறை இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பெரும் பகுதிகளில் இருக்கிறது.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது என்பது கவனச்சிதறலை ஏற்படுத்தும் அவ்வாறு வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்பட அதிகபட்ச வாயப்புகள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி பலர் விபத்தில் சிக்கிய சம்பவமும் ஆங்காங்கே நடந்துள்ளது.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

மேலும் சில மாநிலங்ளில் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடுமையான தண்டனைகள் வழங்கும் அளவில் அதை பெரும் குற்றமாக பார்க்கப்படவேண்டும்.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே சென்று விபத்தில் சிக்கிகுவதால் அவருக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

மேலே குறிப்பிட்டபட்ட செய்தியில் ஒருவரும் அவர் ஹெல்மெட் அணிந்து வரவில்லை என்பதை கவனிக்கவில்லை. பலர் அவர் செல்போனில் பேசிக்கொண்டுவந்தது, வேகமாக வந்தது, போலீசாரை தாக்க முயன்றது போன்ற சம்பவங்களை தான் அதிகமாக பேசி வருகின்றனர்.

செல்போனில் பேசி கொண்டு பைக் ஓட்டியவரை பிடித்த போலீஸை அடிக்க முயன்ற இளைஞர்- வைரலாகும் வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் பைக்கில் ஹெல்மெட் போடாமல் போன தம்பதி ஒருவரை போலீசார் எட்டி உதைத்தில் பைக் கீழே விழுந்து அந்த பெண் பலியாகினார். இச்சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பிற்கு பின் தமிழகத்தில் ஹெல்மெட் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம்.

இன்று தமிழகத்தில் போலீசார் ஹெல்மெட் குறித்த பரிசோதனையில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. இதனால் பலர் ஹெல்மெட் அணியாமலேயே பைக்கில் பயணம் செய்து வருவதாக பேசப்படுகிறது.

Source : Polimer News

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
wealthy man misbehave with tamilnadu police and try to attack him- Read in Tamil
Story first published: Monday, August 6, 2018, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X