ஹெல்மெட்டை பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

உலகிலேயே அதிக சாலை விபத்துக்களும், அதிக உயிரிழப்புகளையும் சத்திக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சாலை விதிமீறல்கள்தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்பது தவிர்க்க முடியாததாக மாறி இருக்கிறது. மறுபுறத்தில் வாகனப் பெருக்கமும் அதிகரித்துள்ளதால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறி வருகிறது.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

இந்த சூழலில், சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் கடந்த செப்டம்பர் முதல் கடுமையான போக்குவரத்து அபராத விதிகள் அமலுக்கு வந்தன. அபாரதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டதுடன், சிறைத் தண்டனையும், இதனை நிறைவேற்றுவதற்கு போலீசாருக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

இதனால், நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்கத் துவங்கியதுடன், லட்சங்கள் வரை அபராதம் விதித்து வாகன ஓட்டிகளை மிரள வைத்தனர்.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

இந்த அபராத நடவடிக்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும் என கலவையான விமர்சனம் எழுந்தன. இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக நாடு முழுவதும் பல நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

மேலும், வாகனங்களில் சாதி அடையாளங்களுடன் வருபவர்கள், அலறல் சப்தத்தை வழங்கும் சைலென்சர் உள்ளிட்டவற்றுடன் சாலையில் வரும் பிறரை அச்சுறுத்தும் வகையில் செல்வோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

இதனால், சாலையில் செல்வோரின் பாதுகாப்பு ஓரளவு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், போக்குவரத்து விதிமீறலை தடுக்கிறேன் என்ற பெயரில் சில இடங்களில் போலீசார் அடாவடியாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தாக்குதல் நடத்துவது, குழந்தைகளுக்கு அபராதம் விதிப்பது போன்ற போலீசாரின் நடவடிக்கைகள் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

இந்த சூழலில், தரமற்ற ஹெல்மெட்டுகளை அணிந்து வருவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, பாதுகாப்பு தர முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

ஆனால், சிலர் ஹெல்மெட் என்ற பெயரில் ஒப்புக்கு மண் சட்டி போல தரமற்ற ஹெல்மெட்டுகளை மாட்டிக் கொண்டு வருவதும், போலீசார் நிற்கும் இடத்தை விட்டு நகர்ந்ததும் அதனை எடுத்து விடுவதும் வழக்கமாக வைத்திருந்தனர். இதுபோன்று தரமற்ற ஹெல்மெட்டுகளை மாட்டிக்கொண்டு பாவனை செய்வோர் மீதும் இப்போது கடுமையான நடவடிக்கை பாய்ந்து வருகிறது.

அந்த வகையில், மண்சட்டி போல தலையில் ஹெல்மெட் என்ற பெயரில் கவிழ்த்துக் கொண்டு வரும் தரமற்ற ஹெல்மெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கு ஒரு படி மேலே போய் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தரமற்ற ஹெல்மெட்டுகளை அணிந்து வருவோரின் ஹெல்மெட்டுகளை வலுக்கட்டாயமாக பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

அந்த வழியில் வந்த பலரின் ஹெல்மெட்டுகளை அவர் பிடுங்கி மண் சட்டி போல அடித்து நொறுக்குவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் எச்சரித்து அனுப்பினாலும், அவர்கள் அதே ஹெல்மெட்டுடன் திரும்ப திரும்ப வருவதை தவிர்க்க இந்த முறையை அந்த அதிகாரி கையாள்வதாக கூறப்படுகிறது. இந்த அதிகாரியின் செயலுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்!

பிற வாகனங்களைவிட இருசக்கரங்களில் சென்று விபத்தில் சிக்குவோருக்கு தலையில் அதிக காயம் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. உயிர்க்காக்கும் கவசமாக கருதப்படும் ஹெல்மெட் அணிவது கடமையாக கருதி ஒவ்வொருவரும் அணிந்து செல்வது நல்லது. குறிப்பாக, தரமான ஹெல்மெட்டுகளை வாங்கி அணிவதால் விலை மதிப்பற்ற உயிருக்கு கூடுதல் உத்தரவாதத்தை பெற முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Tamilnadu police is taking strict action on riders that wear a half face helmet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X