வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீதியில் இறங்கி அதிரடி காட்டினார். அவரது நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் சூழலில், இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

பொது சாலைகளில் விவிஐபி கான்வாய்கள் வரும்போது போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கமான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. விவிஐபி கான்வாய்கள் சிரமம் இன்றி எளிதாக கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல் அமைச்சர்கள் போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்களின் கான்வாய் வரும்போது இத்தகைய நடைமுறை பின்பற்றப்படும்.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

இந்த சூழலில் மேற்கு வங்க மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியின் கான்வாய் எளிதாக கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக கொல்கத்தா நகரில் உள்ள விஐபி சாலையில் போக்குவரத்தை காவல் துறையினர் நிறுத்தினர். ஆனால் அதன்பின் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற மம்தா பானர்ஜி, கடந்த வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில், ஏர்போர்ட்டில் இருந்து வந்து கொண்டிருந்தார்.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

அவரது கான்வாயில் மொத்தம் 9 வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. இதில், பெரும்பாலும் மஹிந்திரா பொலிரோ மற்றும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்கள்தான் இருந்தன. இந்த சூழலில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கான்வாய் ஸ்மூத் ஆக செல்ல வேண்டும் என்பதற்காக வழக்கம் போல காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தியிருந்தனர்.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

வழக்கமாக பின்பற்றப்படும் புரோட்டோகால் படி, முதல்வரின் கான்வாய் வரும்போது போக்குவரத்தை நிறுத்துவது என்பது மேற்கு வங்க மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்படும் என்பதால், இதுபோன்ற நடவடிக்கையை மம்தா பானர்ஜி பலமுறை எதிர்த்துள்ளார்.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

இந்த சூழலில் தனது கான்வாய் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக இம்முறையும் காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தியிருந்ததால், மம்தா பானர்ஜி கோபமடைந்தார். இதன்பின் இதற்கு காரணமான போலீசாரை அழைத்து அவர் திட்டினார். போக்குவரத்தை தடை செய்த போலீசாரை கண்டித்ததுடன் மட்டும் மம்தா பானர்ஜி நின்று விடவில்லை.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

உடனடியாக போக்குவரத்தை சீர் செய்யுங்கள் என அவர் காவல் துறையினருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அத்துடன் தனது கான்வாயை சாலையோரமாக நிறுத்தும்படியும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன்பின் போக்குவரத்து சீராகும் வரை அங்கேயே காத்திருந்து பணிகளை கண்காணித்து கொண்டிருந்தார்.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்த சமயத்தில் மம்தா பானர்ஜி தனது ஸ்கார்பியோ காரில் அமர்ந்திருந்தார். மிகவும் பொறுமையாக காத்திருந்து பணிகளை கண்காணித்தார். அதன்பின்தான் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சுமார் 5 நிமிடங்கள் அவர் அங்கு காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் இறங்கி மம்தா அதிரடி... எதற்காக என தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்... வைரல் வீடியோ

முன்னதாக மம்தா காரில் இருந்து இறங்கி வந்து சம்பந்தப்பட்ட போலீசாரை கண்டித்தாக கூறப்படுகிறது. இதன்பின் அவர் காரில் அமர்ந்து பணிகளை கவனித்தார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக சம்பவ இடத்தில் திரண்டிருந்த மக்கள் இதனை செல்போனில் படம் பிடித்தனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. விவிஐபி கான்வாய்கள் வரும் சமயத்தில் இதர வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. எனவே அவசரமான சூழல் மற்றும் ரெட் அலர்ட் கண்டிஷன் இல்லாத பட்சத்தில், மற்ற விவிஐபிகளும் இதனை பின்பற்றலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
West Bengal Chief Minister Mamata Banerjee Scolds Traffic Cops - Here Is Why : Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X