ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் சாலை விதிகளை பெரும்பாலானோர் பின்பற்றாதது முக்கிய காரணம்.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

இதற்காகவே கடுமையான கெடுப்பிடிகளுடன் அரசாங்கம் சமீபத்தில் மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி அதிகளவிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இதனை சிலர் அலட்சியமாகவே எடுத்து கொள்கின்றனர்.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

அப்படி தான் தடை செய்யப்பட்ட சாலையில் நுழைந்த எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை போக்குவரத்து போலீசார் உதவியுடன் சட்டம் ஒழுங்கு போலீசார் ஒருவர் அடித்து நொறுக்கும் சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

சவாரியுடன் வந்த ரிக்‌ஷாக்களில் இருந்த பயணிகளை வெளியேற்றிய போலீசார் ரிக்‌ஷாவின் ஹெட்லைட் மற்றும் கன்சோல் பகுதி முழுவதையும் பொது மக்கள் முன்னிலையில் வெறித்தனமாக நொறுக்கியுள்ளனர். போலீசாரின் நோக்கம் இந்த ரிக்‌ஷாவை ஓட்டுனர் இனி இந்த தடை செய்யப்பட்ட சாலையில் இயக்க கூடாது என்பதுதான்.

இது அவர்களின் முதல் செயல்பாடாக இருக்க கண்டிப்பாக வாய்ப்பே இல்லை. அதாவது, முதல் முறையாக நுழைந்தபோது சில வார்த்தைகள் திட்டி அபராதம் அல்லது எச்சரிக்கையுடன் அனுப்பியிருப்பர். அதற்கு அடுத்த சில நாட்களுக்கும் இவ்வாறே செய்ய ஒரு கட்டத்தில் ரிக்‌ஷாக்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் இறங்கி இருப்பர்.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

இதையும் மதிக்காமல் இந்த சாலையில் ரிக்‌ஷாக்களை இயக்கியதன் வெளிப்பாடு தான் இந்த அடித்து நொறுக்கும் நிகழ்வு. ரிக்‌ஷாவை ஓட்டுனர் அடித்து நொறுக்கிய பின்பு தள்ளி கொண்டு தான் செல்ல வேண்டும் என்பதற்காக ஹெட்லைட், கன்சோல் பகுதி என ப்ரேக்கிங் அமைப்பு வரை முழுவதையும் காலி செய்துவிட்டனர். இது இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவை பார்த்தாலே தெரிய வருகிறது.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

ஆனால் போலீசார் ஓட்டுனரை ஒன்றும் செய்யவில்லை. இதிலிருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்தால் இந்த விதி மீறல் தீர்க்கப்படாது, அவர்களது வாகனத்தில் கை வைத்தால் தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர். இதேபோல் விதிகளை மீறி, பஸ்ஸில் பயணித்த கல்லூரி மாணவிகளை ஒட்டுனர் கியர் மாற்ற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்தேறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பெற இங்கே க்ளிக் செய்யவும்.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை மட்டும் இவ்வாறு அடித்த நொறுக்க காரணம், இவை மிகவும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடியவை. இவற்றால் அந்த சாலையில் இயங்கும் அனைத்து வாகனங்களும் வேகம் குறைவான இயக்கத்திற்கு தள்ளப்படுகின்றன. இந்த ரிக்‌ஷாக்கள் மேற்கு வங்காளத்தில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் இயங்க தடை செய்யப்பட்டுள்ளன.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

சட்டம் கடுமையானால் தான் தவறுகள் குறையும் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வாகன ஓட்டிக்கள் தான் என்றால் போக்குவரத்து போலீசார் அனைவரும் சரியாக நடந்து கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. சமீபத்தில் கடலூரில் என்ஜின் இல்லாமல் தள்ளிக்கொண்டு வந்த பைக்கிற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதன் முழுமையான தகவல்களை பெற இங்கே க்ளிக் செய்யவும்.

ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

மெதுவாக செல்லும் எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை போலீசார் இவ்வாறு ஓட்டுனர் கண் முன்பே அடித்து நொறுக்கும் சம்பவம் மற்ற ரிக்‌ஷா ஓட்டுனர்களிடமும் ஒருவித பீதியை ஏற்படுத்துள்ளது. வாகன ஓட்டிக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போலீசாரும் நேர்மையாக நடந்து கொண்டால் பாதுகாப்பான நம்பிக்கையான சாலை போக்குவரத்தை பொது மக்களுக்கு வழங்க முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Watch cops intentionally breaking up electric rickshaws for wrong entry
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X