இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

இந்தியாவிற்கே முன்னுதாரணமான காரியம் ஒன்றை மம்தா பானர்ஜி அரசு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

மேற்கு வங்க போக்குவரத்து கழகம் மற்றும் பெங்கால் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மேற்கு வங்க போக்குவரத்து கழகத்தின் டீசல் பேருந்துகளை, சிஎன்ஜி மூலம் இயக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ''டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சிஎன்ஜி ஒரு சிக்கனமான தேர்வாக இருக்கும். மேலும் இதன் மூலமாக சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் கட்டுப்படுத்த முடியும்'' என்றார். மேற்கு வங்க போக்குவரத்து கழகம் தனது டீசல் பேருந்துகளை படிப்படியாக சிஎன்ஜி-க்கு மாற்றவுள்ளது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் மேலும் கூறுகையில், ''மேற்கு வங்க போக்குவரத்து கழகத்தின் டெப்போக்களில் சிஎன்ஜி ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளோம். அத்துடன் தனியார் பேருந்து உரிமையாளர்களையும், சிஎன்ஜி மூலம் பேருந்துகளை இயக்குவற்கு நாங்கள் ஊக்குவிக்கவுள்ளோம்'' என்றார்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

மேற்கு வங்க போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளுக்கான சிஎன்ஜி ஸ்டேஷன்கள் இன்னும் 6 மாதங்களில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ''இந்த தொழில்நுட்பம் தொடர்பாக தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஒரு டீசல் காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

ஆனால் டீசலில் இயங்கும் பேருந்துகளை சிஎன்ஜி-யில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கு இன்னும் அதிகம் செலவாகும். எனவே குறைவான செலவில் எப்படி பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்றலாம்? என்பதை ஆராய்ந்து வருகிறோம்'' என்றார். டெல்லியில் கடந்த காலங்களில் இப்படி பேருந்துகளை சிஎன்ஜிக்கு மாற்றியுள்ளனர்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

ஆனால் அதன்பின்னர் சிஎன்ஜி பேருந்துகளை நேரடியாகவே உற்பத்தியாளர்களிடம் இருந்து டெல்லி வாங்க தொடங்கி விட்டது. இதற்கிடையே மேற்கு வங்க போக்குவரத்து கழகம் மற்றும் பெங்கால் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

இதன்படி மேற்கு வங்க போக்குவரத்து கழகத்தின் டெப்போக்களில் பெங்கால் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சிஎன்ஜி ஸ்டேஷன்களை அமைத்து, பேருந்துகளுக்கு சிஎன்ஜி-யை சப்ளை செய்யும். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ''ஆரம்பத்தில் இருந்து எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... மம்தா பானர்ஜி அரசு செய்த தரமான சம்பவம்... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்...

இந்த வரிசையில் தற்போது சிஎன்ஜி பேருந்துகள் மீதும் எங்கள் கவனம் திரும்பியுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்'' என்றார். டீசல் பேருந்துகளில் இருந்து சிஎன்ஜி-க்கு மாறுவது உண்மையிலேயே சிறப்பான முடிவு. இதன் மூலம் பேருந்துகளை இயக்குவதற்கான செலவு குறையும் என்பதுடன், காற்று மாசுபாடு பிரச்னையும் குறைக்கப்படும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
West Bengal Transport Corporation Converting Diesel Buses To CNG. Read in Tamil
Story first published: Tuesday, June 22, 2021, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X