இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

தடுப்பூசி போட்டு கொண்டால், கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் உள்ளது. ஏனெனில் ஒரு சமயத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்டு வந்த கார் இன்று அத்தியாவசியமாக மாறி விட்டது. கார் இல்லாத குடும்பங்கள் பல அசௌகரியங்களை சந்திக்கும் சூழல் தற்போது இருக்கிறது. இதனால் எப்படியாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என பலரும் நினைக்கின்றனர்.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

இப்படிப்பட்ட சூழலில் காரை பரிசாக வழங்கும் சூப்பரான திட்டம் ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் புத்தம் புதிய கார். ஆனால் இந்த திட்டம் நமது இந்தியாவில் கிடையாது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்தான் இந்த புதிய திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் 5 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டு ஓய்ந்த பின், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் வேகம் எடுத்தன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தாலும், அதனை செலுத்தி கொள்ள மக்கள் தயங்கினர். ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்பட்ட பின்பு நிலைமை மாறியது.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

தடுப்பூசி செலுத்தி கொள்ள பலரும் ஆர்வமாக முன்வந்தனர். ஆனால் இன்னமும் கூட தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பலருக்கும் தயக்கம் உள்ளது. குறிப்பாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் அதிரடியான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

இந்த திட்டத்தின்படி மாஸ்கோவில் குடியிருக்கும் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால், புதிய காரை பரிசாக பெறும் போட்டியில் பங்கேற்க முடியும். மாஸ்கோ உள்பட ரஷ்யா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமடைந்துள்ளன.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

எனவேதான் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஜூன் 14 (நேற்று) முதல் வரும் ஜூலை 11ம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள், காரை பரிசாக பெறும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

ஒவ்வொரு வாரமும் 5 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இதன்படி 4 வாரங்களுக்கு மொத்தம் 20 கார்கள் பரிசாக வழங்கப்படும். ஒரு காரின் மதிப்பு ஒரு மில்லியன் ரூபிள்கள் (ரஷ்ய கரன்சி) ஆகும். நமது இந்திய மதிப்பில் கணக்கிட்டால், ஒரு காரின் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய். எனவே மாஸ்கோ நகரில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பலர் ஆர்வமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊர்க்காரங்க ரொம்ப லக்கி... தடுப்பூசி போட்டு கொண்டால் கார் பரிசு... ஒரு காரின் விலை இத்தனை லட்சமா?

இந்த திட்டத்தின்படி, தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு எண்கள் உடைய டிக்கெட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு வாரமும் சில எண்கள் தேர்வு செய்யப்படும். இந்த எண்களை கொண்ட டிக்கெட்களை வைத்திருப்பவர்களுக்கு புத்தம் புதிய கார் பரிசாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியோ மாஸ்கோ மக்களுக்கு கொண்டாட்டம்தான்!

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What A Gift: Moscow Mayor Offers Free Cars To Spur People To Get Covid-19 Vaccine: Full Details Here. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X