இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம்!

நடிகர் மாதவன் நடிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பெரும் பங்காற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை ராக்கெட்டரி என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இவர் சாதித்த சாதனை என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

நடிகர் மாதவன் நடிப்பில் ராக்கெட்டரி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காகப் பெரிதும் உழைத்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் க்ரயோஜினிக் இன்ஜினை வடிவமைத்தவர். இதற்கு விகாஸ் இன்ஜின் எனப் பெயர் வைத்துள்ளார். இன்றுவரை இந்த இன்ஜின் இஸ்ரோவின் ராக்கெட்களில் இந்த இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த செய்தியில் ராக்கெட்கள் எப்படிச் செயல்படுகிறது எத்தனை வகையான ராக்கெட் இன்ஜின்கள்கள் இருக்கிறது. விகாஸ் இன்ஜின் ஏன் ஸ்பெஷல் உள்ளிட்ட விபரங்களைக் காணலாம்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

நாம் கார் மற்றும் பைக்களில் பைக்களில் பயன்படுத்தும் என்ஜின் எரிபொருளை பயன்படுத்தி கம்பஷனை நடத்துகிறது. இந்த எரிசக்தியைவைத்துத் திருப்புதல் விசையை உருவாக்குகிறது. இந்த திருப்புதல் விசையை நாம் வாகனங்களில் வீல்களுக்கு கடத்தி அதன் மூலம் ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு நகர்கிறோம். ராக்கெட் இன்ஜின் என்பது கம்பஷன் மூலம் ஊந்துதல் சக்தியை உருவாக்கி ராக்கெட்டை நகர வைக்கிறது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

ராக்கெட் இன்ஜின் என்பது கிட்டத்தட்ட விமானங்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின் தான். ஆனால் விமானங்களில் கம்பஷனிற்காக தேவைப்படும் ஆக்ஸிஜனை விமான இன்ஜின் காற்றிலிருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால் விண்வெளியில் ஆக்ஸிஜன் இருக்காது என்பதால் ராக்கெட் இன்ஜின்கள் தனியாக ஆக்ஸிடைசைனை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

ராக்கெட் இன்ஜினை பொருத்தவரை மொத்தம் 4 விதமான ராக்கெட் இன்ஜின்கள் உள்ளன Solid Fuel, Liquid Fuel, Hybrid, Electric thrust, இவை நான்கும் வெவ்வேறு தன்மையைக் கொண்டது. பொதுவாக ஒரு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்றால் இந்த 4 வகையான இன்ஜின்களும் பயன்படுத்தப்படும். ஒவ்வொருவரும் எப்படிச் செயல்படும் எதற்காக அதைப் பயன்படுத்துவார்கள் எனக் காணலாம்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

Solid Fuel இன்ஜின் என்பது ராக்கெட்டிலேயே அதிக பவர்ஃபுல் இன்ஜின் இது ராக்கெட்டை பூமியிலிருந்து வெளியே கொண்டு செல்ல உதவும், பொதுவாக ராக்கெட்டின் முதல் நிலையில் இந்த இன்ஜின் பயன்படுத்தப்படும். இது ஒரே ஒரு எரிபொருளைக் கொண்டு இயங்கும் இன்ஜின். இந்த இன்ஜினின் தன்மை என்னவென்றால் ஒரு முறை ஆன் செய்யப்பட்டு விட்டால் அதன் எரிபொருள் தீரும் வரை தொடர்ந்து செயல்படும். இதைச் செயல் பாட்டை கட்டுப்படுத்த முடியாது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

நாம் பொதுவாக ராக்கெட் கிளம்பும் போது பார்க்கிறோம் அல்லவா ராக்கெட்டின் கீழ் பகுதியில் தீ பிடித்து ராக்கெட் மேலே செல்கிறது அல்லவா அதை இந்த இன்ஜின் தான் செய்கிறது. இந்த இன்ஜின் ராக்கெட்டை குறிப்பிட்ட தூரம் வரை எடுத்துச் சென்று,விட்டுவிடும் பின்னர் ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் கழட்டிவிடப்படும். அதன் பின்னர் இந்த இன்ஜின் கடல் பகுதியில் விழுந்துவிடும்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

Liquid Fuel இன்ஜின் என்பது ஒரே நேரத்தில் இரண்டு விதமாகத் திரவ வடிவில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு இயங்கும் இன்ஜின் அதில் ஒரு எரிபொருள் வழக்கமான எரிபொருளாகவும், மற்றொன்று எதை எரிய உதவும் ஆக்ஸிடைஸராகவும் செயல்படும். பூமியிலிருந்து குறிப்பிட்ட அளவு மேலே சென்று விட்டால் ஆக்ஸிஜன் இருக்காது அதனால் அங்கு எரிவது என்பது நடக்காது. அதையும் தாண்டி இதைச் செயல்பட வைக்கவே ஆக்ஸிடைசர்கள் பயன்படுத்தப்படுகிறது க்ரயோஜினிக் இன்ஜின் இப்படியான ஒரு இன்ஜின் தான் இதைப் பற்றி முழு விபரங்களை இதே செய்தியில் பின்னர் காணலாம்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இந்த Liquid Fuel இன்ஜின் முற்றிலும் கட்டுப்படுத்தக்கூடியது. இதன் திறனைக் கட்டுப்படுத்தி ராக்கெட் பயணிக்கும் வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். இது தேவையில்லை என்றாலும் ஆஃப் செய்துவிட்டு பின்னர் ஆன் செய்யவும் முடியும். விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்ய இந்த இன்ஜின் பயன்படுகிறது. இது விண்வெளியில் மணி நேரம் மட்டுமல்ல நாள் கணக்கில் பயணிக்கவும் பயன்படுகிறது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

அடுத்ததாக Hybrid இன்ஜின், இது ஒரே நேரத்தில் Solid Fuel & liquid Fuel ஆகிய 2 வகையான எரிபொருளைக் கொண்டு இயங்கும், இந்த இன்ஜின் Solid Fuel இன்ஜினில் உள்ள குறைகளையும், liquid Fuel இன்ஜினில் உள்ள குறைகளையும் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ அனுப்பும் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இந்த இன்ஜின் பயன்படுத்தப்படவில்லை.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

கடைசியாக எலெக்டரிக்கல் த்ரஸ்ட் இன்ஜின், எலெக்ட்ரிக் சக்தியைக் கொண்டு உந்து சக்தியை உருவாக்கும் இன்ஜின். இந்த இன்ஜின் பொதுவாக சாட்டிலைட்கள் தன் பாதையில் பயணம் செய்வதற்காகப் பயன்படும். இது நேரடியாகச் சூரிய சக்தி மூலம் எரிசக்தியை உருவாக்கி அதன் பயன்படுத்திப் பயணிக்கும். இது தொடர்ந்து மாதக் கணக்கிலும் ஆண்டுக் கணக்கிலும் பயணிக்கும் திறன் கொண்டது. இதன் உந்து சக்தி குறைவாக இருப்பதால் விண்வெளியில் குறைந்த எடை கொண்ட பொருளை நகர்ந்து செல்ல மட்டுமே இது பயன்படும்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இதில் நம்பி நாராயணன் இந்திய வான்வெளி ஆராய்ச்சிக்காக உருவாக்கியது Liquid Fuel வகையில் தயாரிக்கப்பட்ட க்ரயோஜினிக் இன்ஜின். பொதுவாக Liquid Fuel என்றால் திரவ வடிவிலான எரிபொருளைக் கொண்டு இயங்கும் இன்ஜின் ஆனால் க்ரயோஜினிக் இன்ஜின் என்றால் அது வாயு வடிவில் உள்ள எரிபொருளைத் திரவ வடிவாக மாற்றிப் பயன்படுத்துவது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இப்படிப் பயன்படுத்துவதால் அதிகமான எரிபொருள் கிடைக்கும் இதன் மூலம் நீண்ட தூரம் பயணிக்க முடியும். நம்பி நாராயணன் வடிவமைத்த இந்த இன்ஜினிற்கு அவரது குரு விக்ரம் சாராபாயின் பெயரைச் சுருக்கி விகாஸ் எனப் பெயரிட்டார். இந்த இன்ஜின் தான் இன்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இன்ஜின் இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட செயல்படாமல் போனதில்லை எல்லாமுறையும் வெற்றிகரமாக இயங்கியுள்ளது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இந்த இன்ஜினை இவர் 1970களில் வடிவமைத்தார். இது வைக்கிங் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆரம்பக் கட்டத்தில் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்த இன்ஜினை தயாரிக்க சில உதிரிப் பாகங்களை வாங்கினர். தற்போது இஸ்ரோவை முற்றிலுமாக இந்த இன்ஜினை தயாரிக்கும் திறனைப் பெற்றுவிட்டது. இந்த இன்ஜின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி 1 மற்றும் 2 ஆகிய ராக்கெட்களின் 2ம் நிலை இன்ஜினாகவும், ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்டில் கோர் இன்ஜினாகவும் செயல்பட்டுள்ளது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இந்த இன்ஜினை தயாரித்த நம்பி நாராயணன் 1994ம் இந்தியாவின் ராக்கெட் ரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்பனை செய்துவிட்டார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதை உடைத்துத் தான் ஒரு நிரபராதி என நிரூபணம் செய்தார். ஆனால் இவர் இந்தியா விண்வெளி துறைக்கு ஆற்றிய பங்கைப் பற்றி நிச்சயம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இவர் 1941ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த நாகர்கோவில் பகுதியில் பிறந்தார். பின்னர் மதுரையில் இன்ஜினியரிங் படித்த இவருக்கு 1966ம் ஆண்டு இஸ்ரோவில் டெக்னிக்கல் அசிஸ்டெண்டாக வேலை கிடைத்தது. பின்னர் அமெரிக்காவில் நாசாவின் ஃபெல்லோஷிப்பில் இவர் பிரின்ஸ்டன் பல்கலைழககத்தின் லிக்யூட் புரேபல்ஷன் குறித்துப் படித்தார்.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

பின்னர் இந்தியா வந்த இவர் மீண்டும் இஸ்ரோவில் இணைந்தார். அது வரை சாலிட் புரோபல்ஷனையே நம்பி இருந்த இஸ்ரோவில் இவர் முதலில் 1970களில் 600 கிலோ எடை கொண்ட சிறிய லிக்யூட் புரோபல்ஷன் இன்ஜினை வெற்றிகரமாக உருவாக்கினார். இதைப் பின்னர் இது விகாஸ் இன்ஜின் எனப் பெரிய வடிவில் உருவாக்கப்பட்டது. இது தான் இன்று வரை ராக்கெட்டில் பயன்படுத்தப்படுகிறது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள விசாவை சரி பார்க்கும் இடத்தில் மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் ஃபவூஸியா ஹாசன் ஆகிய 2 பெண்கள் சந்தேகத்திற்கு உள்ளாகுகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தங்கியிருந்த இடத்தில் சோதனை நடக்கிறது. சோதனையில் தேவநாகரியில் எழுதப்பட்ட ஒரு டைரி போலீசிற்குக் கிடைக்கிறது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இதில் ரஷீதா என்பவர் மாலத்தீவு தேசியப் பாதுகாப்பு கமிட்டியின் ஒரு உறுப்பினர் என்பதும், இவருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றும் சசிகுமாரின் என்பவர் தொடர்பு இருந்ததும் ரஷீதா அடிக்கடி மலாத்தீவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்று வந்ததும் தெரிய வந்தது. இதற்கிடையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் இவர்கள் இந்தியாவில் விண்வெளி தகவல்களைத் திருடிச்செல்ல வந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு வந்தது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

பின்னர் நம்பி நாராயணன் மற்றும் சசிகுமாரின் ஆகியோர் இந்தியாவின் லிக்யூட் புரோபல்ஷன் இன்ஜினின் வரைபடத்தைப் பல நாடுகளுக்குப் பணத்திற்காக விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ரஷ்யா, பாகிஸ்தான், பிரேசில் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் 1994ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கும் கோட்டில் நடந்தது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

கோட்டில் நம்பி நாராயணன் நிரபராதி என்பது நிரூபணமானது. இவருக்குக் கேரள அரசு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.கேரள அரசு ரூ1.30 கோடி பணத்தை நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது. மேலும் எவ்வாறு போலியாக ஜோடிக்கப்பட்டது. இதற்குப் பின்னால் யார் இருக்கிறார். ஏன் வேண்டுமென்றே நம்பி நாராயணன் மாட்டி விடப்பட்டார் என விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தான் இவர் முற்றிலுமாக நிரபராதி என கோர்ட் தீர்ப்பளித்தது உத்தரவிட்டது.

எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா ? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம் !

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை மத்திய அரசு இவருக்கு அறிவித்தது. இந்த விருது இவர் விகாஸ் இன்ஜினை உருவாக்கியதற்காக இவருக்கு வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாற்றை மையாகக் கொண்டே நடிகர் மாதவன் நடிப்பில் ராக்கெட்டரி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What are the types of rocket engines why Vikas engine is special
Story first published: Friday, July 1, 2022, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X