காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

காரை சர்வீஸ் செய்ய விடுபவர்கள் ஓட்டுவதற்காக டீலர்ஷிப்கள் ஏன் வாடகை கட்டணம் இல்லாமல் வேறு ஒரு காரை வழங்குகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

லோனர் கார் (Loaner Car) என்ற வார்த்தையை எங்கேயாவது கேள்விபட்டுள்ளீர்களா? உண்மையை சொல்வதென்றால் நம்மில் பலருக்கும் இந்த வார்த்தை இதற்கு முன்பு அறிமுகமாகியிருக்காது. மிக நீண்ட காலமாக சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரிவது சந்தேகம்தான்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

எனவே லோனர் கார் என்றால் என்ன? அது ஏன் உங்களுக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான டீலர்ஷிப்கள், மெக்கானிக் ஷாப்கள் ஆகிய இடங்களில் உங்களுக்கு லோனர் கார்களை வழங்குவார்கள்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

அதாவது நீங்கள் உங்களது காரை சர்வீஸ் செய்வதற்காக விட்டுள்ளீர்கள் என்றால், மாற்று ஏற்பாடாக உங்களுக்கு லோனர் கார் வழங்கப்படும். உங்களது கார் சர்வீஸ் செய்யப்படும் சமயத்தில், நீங்கள் வேறு எந்த காரும் இல்லாமல் சிரமங்களை எதிர்கொள்ள கூடாது என்ற காரணத்திற்காகவே லோனர் கார்கள் வழங்கப்படுகின்றன.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

உங்கள் காரை சரி செய்வதற்கு அதிக நாட்கள் ஆகும் என்றால், லோனர் கார்களை வழங்குவார்கள். பெரும்பாலும் டீலர்ஷிப்களில் லோனர் கார்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. லோனர் கார்களை நீங்கள் பெற்றால், அதற்கு தனியாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இதன் மூலம் உங்களது சொந்த கார் சர்வீஸ் செய்யப்படும் சமயத்தில் நீங்கள் போக்குவரத்திற்கு எந்த பிரச்னையையும் சந்திக்க மாட்டீர்கள்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

ஒரு சில சிறிய மெக்கானிக் ஷாப்களில் நீங்கள் காரை சர்வீஸ் செய்வதற்கு விடுகிறீர்கள் என்றால், அவர்களே உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு வந்து காரை எடுத்து கொள்வார்கள். மீண்டும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து காரை விட்டு விடுவார்கள். டீலர்ஷிப்களிலும் கூட இந்த வசதிகள் இருக்கவே செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

இருப்பினும் டீலர்ஷிப்களில் எப்போதும் தயார் நிலையில் ஒரு சில லோனர் கார்களையும் வைத்திருப்பார்கள். பெரிய நிறுவனங்களில் லோனர் கார் வசதி நிச்சயமாக இருக்கும். டீலர்ஷிப்களில் என்ன லோனர் கார் இருக்கிறதோ? அதை உங்களுக்கு வழங்குவார்கள். ஒருவேளை அவர்களிடம் நிறைய கார்கள் இருக்கிறது என்றால், உங்களது காரை போன்றே இருக்கும் வேறு ஒரு காரை தருவார்கள்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

இதன் மூலம் உங்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதாவது உங்களுக்கு ஓட்டுவதற்கு சிரமமாக இருக்காது. ஒரு சிலருக்கு புதிய கார்களை ஓட்டும்போது தயக்கமும், தடுமாற்றமும் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் உங்களது காரை போன்றே இருக்கும் வேறு ஒரு கார் என்றால் உங்களுக்கு சிரமம் இருக்காது.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

அதேபோல் வசதிகள் குறைவு போன்ற பிரச்னைகளும் ஏற்படாது. எனவே லோனர் கார் வசதி உங்களுக்கு பல்வேறு விதங்களில் பலன் அளிப்பதாகவே இருக்கும். ஆனால் லோனர் கார் விஷயத்தில் ஒரு சில டீலர்ஷிப்கள் சில சமயங்களில் ஒரு தந்திரத்தையும் கையாள்கின்றன. அதாவது அதிக வசதிகள் கொண்ட புதிய மாடல்களை அவர்கள் உங்களுக்கு லோனர் காராக வழங்குவார்கள்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

நீங்கள் வைத்திருக்கும் காரை விட அந்த லோனர் கார் பல்வேறு விதங்களில் மேம்பட்டதாக இருக்கும். எனவே அந்த காரை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்படும். இப்படி வாடிக்கையாளர்களின் ஆசையை தூண்டி விட்டு, விற்பனையை அதிகரித்து கொள்வதற்கும் லோனர் கார் வசதியை ஒரு சில டீலர்ஷிப்கள் பின்பற்றுகின்றன.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

இந்த ஒன்றை மட்டும் தவிர்த்து விட்டு பார்த்தால், லோனர் கார்கள் உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம்தான். உங்கள் மனதை உங்களால் கட்டுப்படுத்தி கொள்ள முடிந்தால் இதுவும் கூட ஒரு பிரச்னையே கிடையாது. இனிமேல் உங்களுக்கு லோனர் கார் தேவைப்பட்டால், டீலர்ஷிப்களில் தயக்கமில்லாமல் கேளுங்கள்.

காரை சர்வீசுக்கு விட்றவங்க ஓட்றதுக்கு வாடகை இல்லாம வேற ஒரு கார்... ஏன் தெரியுமா? டீலர்கள் செய்யும் தந்திரம்!

ஆனால் லோனர் கார் வழங்குவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உதாரணத்திற்கு 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே லோனர் கார்களை வழங்குவோம் என சில நிறுவனங்கள் விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கலாம். இதுபோன்ற விதிமுறைகள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is a loaner car important things you need to know
Story first published: Friday, January 14, 2022, 0:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X