காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தற்போது விற்பனைக்கு வரும் அனைத்து புதிய கார்களிலும் ஆக்ஸிஜன் சென்சார் (Oxygen Sensor) பொருத்தப்பட்டிருக்கும். 1980ம் ஆண்டுக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான கார்களிலும் ஆக்ஸிஜன் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். ஓ2 (O2) சென்சார் என்ற பெயரிலும் ஆக்ஸிஜன் சென்சாரை அழைக்கின்றனர்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் எமிஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தின் (Emissions Control System) ஒரு பகுதியாக ஆக்ஸிஜன் சென்சார் செயல்படுகிறது. இன்ஜின் மேனேஜ்மெண்ட் கம்ப்யூட்டருக்கு (Engine Management Computer) இது தகவல்களை வழங்குகிறது. முடிந்தவரை இன்ஜினை திறன்மிக்கதாக இயங்க வைப்பதற்கு ஆக்ஸிஜன் சென்சார் பயன்படுகிறது.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் முடிந்தவரை எமிஷனை கட்டுப்படுத்துவதும் இதன் பணியாகும். பொதுவாக காரின் இன்ஜின் எரிபொருளை எரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த பணிகளில் ஆக்ஸிஜனின் பங்களிப்பும் இருக்கிறது. காற்றும் (ஆக்ஸிஜன்), எரிபொருளும் சரியான விகிதத்தில் இருப்பது மிகவும் அவசியம். 14.7:1 என்பதுதான் மிகவும் சரியான விகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் எரிபொருளின் வகையை பொறுத்து சரியான விகிதம் மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சரியான விகிதம் என்பது எரிபொருளில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் கார்பனின் அளவை பொறுத்தது. இந்த சரியான விகிதத்தை காட்டிலும் காற்று குறைவான அளவில் இருந்தால், எரிதல் நடைபெற்ற பிறகு எரிபொருள் மீதியாகி இருக்கும்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதனை ரிச் மிக்ஸர் (Rich Mixture) என்கின்றனர். இந்த ரிச் மிக்ஸர் ஆபத்தானது. ஏனெனில் எரிக்கப்படாத எரிபொருள் மாசுபாட்டை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சரியான விகிதத்தை விட காற்று அதிகமாக இருந்தது என்றால், ஆக்ஸிஜனின் அளவு அதிகம் என அர்த்தம். இதனை லீன் மிக்ஸர் (Lean Mixture) என்கின்றனர்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ரிச் மிக்ஸரை போல், லீன் மிக்ஸரும் மோசமானதுதான். ஏனெனில் அதிக நைட்ரஜன் ஆக்ஸைடு மாசுபடுத்திகளை லீன் மிக்ஸர் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சில சமயங்களில் இன்ஜினின் மோசமான செயல்பாட்டிற்கும், இன்ஜின் சேதமடைவதற்கும் கூட இந்த லீன் மிக்ஸர் காரணமாக இருக்கலாம்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதுதான் ஆக்ஸிஜன் சென்சாரின் பணி. எக்ஸாஸ்ட் பைப்பில் ஆக்ஸிஜன் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். ரிச் மிக்ஸர் மற்றும் லீன் மிக்ஸரை கண்டறியும் திறன் ஆக்ஸிஜன் சென்சாருக்கு உண்டு. இதன்படி ரிச் மிக்ஸர் அல்லது லீன் மிக்ஸரை ஆக்ஸிஜன் சென்சார் கண்டறிந்தால், அது குறித்த தகவலை இன்ஜின் மேனேஜ்மெண்ட் கம்ப்யூட்டருக்கு அனுப்பும்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த தகவலுக்கு ஏற்ப இன்ஜினுக்குள் நுழையும் எரிபொருளின் அளவு அட்ஜெஸ்ட் செய்யப்படும். ஒரு காருக்கு ஆக்ஸிஜன் சென்சார் ஏன் தேவை? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும் என நம்புகிறோம். ஆக்ஸிஜன் சென்சார் செயல்படாமல் போய்விட்டால், இன்ஜின் மேனேஜ்மெண்ட் கம்ப்யூட்டரால், காற்று/எரிபொருள் விகிதத்தை சரியாக கணக்கிட முடியாது.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதன் காரணமாக உங்கள் காரின் செயல்திறன் பாதிக்கப்படும். அத்துடன் அதிக எரிபொருளும் செலவு ஆகும். எனவே அனைத்து கார்களிலும் ஆக்ஸிஜன் சென்சார் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்றைய அதிநவீன கார்கள் சரியாக செயல்படுவதற்கு பல்வேறு சென்சார்கள் உதவி செய்து கொண்டுள்ளன.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதில், ஆக்ஸிஜன் சென்சாரும் ஒன்று. ஆனால் ஆக்ஸிஜன் சென்சார் பற்றி யாராவது பேசினாலோ அல்லது அதைப்பற்றி படித்தாலோ அது என்ன ஆக்ஸிஜன் சென்சார்? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்து வந்திருக்கலாம். ஆனால் அந்த சந்தேகமும், குழப்பமும் தற்போது உங்களுக்கு நிவர்த்தியாகி இருக்கும் என்று நம்புகிறோம்.

காரின் ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு சில கார்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சென்சார்களும் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு சில கார்களில் 2 ஆக்ஸிஜன் சென்சார்கள் கூட இருக்கும். ஆக்ஸிஜன் சென்சார்களை சரியான நேரத்தில் மாற்றுவதன் மூலம் உங்கள் கார் எப்படி செயல்படுகிறது? என்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is an oxygen sensor here s everything you need to know
Story first published: Monday, January 24, 2022, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X