மும்பை விமானத்தில் பயணிகளுக்கு மூக்கு வழியாக ரத்தம் வந்த சம்பவம்... உண்மை காரணம் இது தான்..!

மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்பூர் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு கேபின் பிரஷர் குறைவு காரணமாக மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்தது. விமானி செய்த சிறிய தவறால் தான் இந்த சம்

By Bala

மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்பூர் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு கேபின் பிரஷர் குறைவு காரணமாக மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்தது. விமானி செய்த சிறிய தவறால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? கேபின் பிரஷர் என்றால் என்ன? இதற்கு பின்னால் உள்ள தொழிற்நுட்பம் என்ன வாருங்கள் இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூரை நோக்கி 9W697 என்ற விமானம் சுமார் 166 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்டது. இது போயிங் 737 ரக விமானம். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமானத்தின் உள்ளே கேபின் பிரஷர் குறைந்தது. இதனால் பயணிகள் பலர் அவதிப்பட்டனர்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

சிலருக்கு மூக்கு, காது வழியாக ரத்தம் வழிய துவங்கியது. பலருக்கு காது வலி ஏற்பட்டது. எனவே உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ்க்கை விமானி திறந்து விட்டார். அத்துடன் அந்த விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே எமர்ஜென்ஸியாக தரையிறக்கப்பட்டது.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

விமானத்தில் பயணித்த 166 பயணிகளும், 5 ஊழியர்களும் பத்திரமாக தரையிறங்கினர். இது குறித்து விசாரணை நடந்த போது, விமானி கேபின் பிரஷரை கட்டுப்படுத்தும் சுவிட்சை ஆன் செய்ய மறந்து விட்டார் என்பதும், அதனால்தான் விமானத்தில் கேபின் பிரஷர் இல்லாமல் போனதும் தெரியவந்தது.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

விமானி செய்த சிறு தவறால் விமானத்தில் இருந்த ஒட்டுமொத்த பயணிகளுக்கும் பெரும் அவதி ஏற்பட்டது. அப்படி என்றால் விமானத்தில் கேபின் பிரஷர் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்றா? கேபின் பிரஷர் என்றால் என்ன? கேபின் பிரஷர் குறைந்ததால், பயணிகளின் காது மற்றும் மூக்குகளில் ரத்தம் வழிந்தது ஏன்? என்பதற்கான விடைகளை கீழே பார்க்கலாம்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

நம் பூமியில் இருக்கும் போது தேவையான அளவிற்கு ஆக்ஸிஜன் இருக்கிறது. அதனால் நாம் சுவாசிப்பதற்கு சிரமம் இருக்காது. ஆனால் மலை பிரதேசங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என நாம் கேள்விபட்டிருப்போம் அது போல தான் இதுவும்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே போகும். குறைவான காற்று அழுத்தத்தால் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் பிரிந்து செல்லும். இதனால் சுவாசிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

பொதுவாக இந்த காற்றின் அழுத்தம் கடல் மட்ட பகுதிகளில் சீராக இருக்கும். மேலே செல்ல செல்ல ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கொண்டேதான் இருக்கும். இதனால்தான் மலை பிரதேசங்களில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

மலை பிரதேசங்களிலேயே சுவாசிக்க சிரமம் ஏற்பட்டால் விமானம் பறக்கும் உயரத்தில் பிரஷர் மிகவும் குறைவாகதான் இருக்கும். இந்த இடங்களில் மனிதனால் உயிர் வாழவே முடியாது. இவ்வாறு ஆக்ஸிஜன் காற்றில் இருந்து குறைந்தால் உடலில் ரத்த ஒட்டங்களில் மாற்றம் ஏற்படும்.

இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடலில் உள்ள காது, மூக்கு போன்ற துவாரங்கள் வழியாக ரத்தம் வெளியேற முற்படும். இதன் காரணமாகவே விமானத்தில் இருந்த பலருக்கு காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வரத்துவங்கியது.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

பொதுவாக விமானங்களில் கேபினிற்குள் பிரஷரை கட்டுப்பாடுடன் வைத்திருக்க சில தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் எல்லா கதவுகளும் மூடப்பட்டவுடன் கேபினிற்குள் வரும் காற்றையும், கேபினில் இருந்து வெளியேறும் காற்றையும் கட்டுப்படுத்தும் கருவி இயக்கப்படும்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

இந்த கருவி இயக்கப்பட்டவுடன் கேபினிற்குள் காற்றின் அளவு சீராக இருக்கும். விமானம் பறக்கும் போது வெளியில் எவ்வளவு குறைவான காற்றின் அழுத்தம் இருந்தாலும் கேபினிற்குள் காற்றின் அழுத்தம் குறையாமல் இருக்கும்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

பொதுவாக விமானம் பறக்கும் போது, கேபினிற்குள் பிரஷரை கட்டுப்படுத்தும் கருவி பழுதானாலோ அல்லது விமானத்தின் கதவு சரியாக அடைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது விமானத்தில் உள்ள ஜன்னல்களில் ஓட்டை இருந்தாலோ இந்த பிரச்னை ஏற்படலாம்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

ஆனால் நேற்று மும்பையில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை விமானி கேபின் பிரஷரை கட்டுப்படுத்தும் கருவியை இயக்கவே மறந்துவிட்டார். பொதுவாக இந்த கருவியானது, விமானத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு விமானம் புறப்பட தயாராக இருக்கும் போது இயக்கப்படும். பின் விமானம் தரையிறங்கியதும்தான் இதன் இயக்கம் நிறுத்தப்படும்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

விமானம் பறக்கும்போது இந்த கருவியை இயக்க துவங்க கூடாது. ஏன் என்றால் இந்த கருவி இயங்க துவங்கும்போது கேபினிற்குள் என்ன பிரஷர் இருந்ததோ அதே பிரஷர்தான் விமான பயணம் முழுவதிலும் நீடிக்கும்.

மும்பை விமானம் கேபின் பிரஷர் குறைவு காரணம்

அதனால் விமானம் பறக்கும் போது இந்த பிரஷரை கட்டுப்படுத்தும் கருவியை இயக்கினால் குறைந்த பிரஷரே காற்றில் இருக்கும். இதனால் விமானிகள் விமானத்தை இயக்கும் முன் கண்டிப்பாக கேபின் பிரஷர் கருவியை இயக்க வேண்டியது முக்கியம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
What is cabin pressure in flights? how it works. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X