ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

பார்ம் 28 மற்றும் பார்ம் 35 என்றால் என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அல்லது ஆர்டிஓ அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு, வாகன வரி வசூலிப்பு, வாகனங்கள் ஏற்படுத்தும் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு பணிகளை ஆர்டிஓ அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

அத்துடன் யூஸ்டு கார்கள் விற்பனையிலும் ஆர்டிஓ அலுவலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களின் சரிபார்ப்பு இல்லாவிட்டால், யூஸ்டு கார் விற்பனை சட்டப்பூர்வமானதாக கருதப்படாது. யூஸ்டு கார்களை விற்பனை செய்வதற்கு என குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன. அவற்றை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

யூஸ்டு கார்களை நீங்கள் விற்பனை செய்கிறீர்கள் என்றால், ஒரு சில படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் விற்பனையை வெற்றிகரமாக முடிக்க முடியும். இதன்படி பார்ம் 28 (Form 28), மற்றும் பார்ம் 35 (Form 35) உள்ளிட்ட படிவங்கள் தேவைப்படும். ஆர்டிஓ அலுவலகங்களில் இந்த படிவங்கள் கிடைக்கும். இந்த படிவங்கள் எதற்காக? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

பார்ம் 28 என்றால் என்ன?

ஆர்டிஓ அலுவலகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate - NOC) பெறுவதற்கு, நீங்கள் இந்த படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் விற்பனை செய்யும் வாகனத்தின் மீது வரிகள், அபராதங்கள் மற்றும் குற்றவியல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்பதை இந்த படிவம் உறுதி செய்கிறது.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

நீங்கள் யூஸ்டு கார்களை விற்பனை செய்யும்போது, பார்ம் 28-ன் மூன்று காப்பிகளை ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பிக்கும்போது, பதிவு சான்றிதழின் ஜெராக்ஸ் (ஆர்சி), அசல் பதிவு சான்றிதழ், காப்பீடு, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவை தேவைப்படலாம். ஆனால் இந்த ஆவணங்கள் தேவைப்படுவது ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்தை பொறுத்து மாறுபடலாம்.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

ஆர்டிஓ அலுவலகம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்துடன் இந்த ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின்னர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கும் சமயத்தில் நீங்கள் அங்கு சென்று உங்களுடைய தடையில்லா சான்றிதழை பெற்று கொள்ளலாம். பார்ம் 28 படிவத்தை நீங்கள் இங்கே டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

பார்ம் 35 என்றால் என்ன?

பார்ம் 28 ஆர்டிஓ அலுவலகங்கள் அளிக்கும் தடையில்லா சான்றிதழாக செயல்படும் நிலையில், பார்ம் 35 வங்கிகள் வழங்கும் தடையில்லா சான்றிதழாக செயல்படும். நீங்கள் கார் வாங்கியபோது எந்த வங்கி ஃபைனான்ஸ் செய்ததோ அந்த வங்கி இந்த தடையில்லா சான்றிதழை வழங்கும். விற்பனை நடைமுறைகளை முழுமையாக முடிப்பதற்கு பார்ம் 35 மிகவும் அவசியம்.

ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் வங்கி லோன் உதவியுடன் கார் வாங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த படிவம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உங்களது காரை விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தால், மேற்கண்ட படிவங்கள் மிகவும் அவசியம். இதுபோல் வேறு என்னென்ன படிவங்கள் தேவைப்படும்? என்பதை மற்றொரு செய்தியில் பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Is Form 28, 35 Of RTO? - Read More To Find Out. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X