வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

நீங்கள் வாகனத்தை வாங்கும் போது அதன் குதிரைத் திறன் முக்கியமா? அல்லது டார்க் முக்கியமா? எதைப் பார்த்து வாங்க வேண்டும் என் விரிவான விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

ஆட்டோமொபைல் துறையில் உள்ள பலருக்குள் நீண்டநாட்களாக நடக்கும் விவாதம் ஒரு இன்ஜினிற்கு எது முக்கியம்? குதிரை திறனா? டார்க்கா? ஒரு இன்ஜினின் திறனை குறிப்பிட வேண்டும் என்றால் இந்த இரண்டு அம்சங்களைத் தான் குறிப்பிட வேண்டும். இதை வைத்துத் தான் அந்த இன்ஜினின் திறனைக் கண்டறிய முடியும். அப்படி என்றால் இந்த இரண்டில் எது மிகவும் முக்கியம் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

உண்மையில் இந்த குழப்பத்திற்கு நீங்கள் விடை காண வேண்டும் என்றால் முதலில் குதிரைத் திறன் என்றால் என்ன? டார்க் என்றால் என்ன? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள் முதலில் அதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். குதிரைத் திறன் என்றால் ஒரு வாகனத்தை இழுத்துச் செல்ல பழைய காலங்களில் குதிரைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

அதன்படி கணக்கில் தற்போது இந்த இன்ஜின் இயங்கினால் எத்தனை குதிரைகள் இழுத்துச் செல்லும் திறனை இந்த இன்ஜின் வழங்கும் என்பது தான் குதிரைத் திறன், அடுத்ததாக டார்க் என்றால் திருப்புதல் விசை, ஒரு பொருளைத் திருப்புவதற்கு எவ்வளவு விசை தேவைப்படுகிறது அதற்கு எவ்வளவு பெரிய கம்பி தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிடுவதே டார்க்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஒரு ஸ்ரூவை கழட்டுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அந்த ஸ்க்ரூ திரும்புவதற்கு நீங்கள் எவ்வளவு விசையை கொடுக்கிறீர்கள் எவ்வளவு அளவிலான ஸ்க்ரூ டிரைவரை கொண்டு அதைத் திருப்ப முயல்கிறீர்கள் என்பதை வைத்து அந்த ஸ்ருவிற்கு எவ்வளவுடார்க் தேவைப்படுகிறது என்பது முக்கியம்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

சரி இப்பொழுது குதிரைத் திறன் எதற்கு உதவுகிறது, டார்க் எதற்கு உதவுகிறது எனக் காணலாம். குதிரைத் திறன் என்பது கார் வேகமாகப் பயணிக்க உதவுகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் கார்கள் வேகமாகப் பயணிக்க வேண்டும் என்றால் அதிகமாகக் குதிரைத் திறன் வேண்டும். இதுவே டார்க் என்பது நிற்கும் நிலையில் உள்ள காரை வரைவாக நகர வைப்பதற்கு உதவும் அதாவது காருக்கான உந்துதல் சகதியை கொடுப்பது தான் டார்க்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

ஒரு வாகனம் எந்த இடையூறுமில்லாமல் வேகமாக செல்லாவதற்காக டிசைன் செய்யப்பட்டது என்றால் அதில் குதிரைத் திறன் அதிகமாக இருக்கும். அல்லது ஆஃப் ரோடு அல்லது மற்ற லோடுகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றால் அதிக டார்க் தேவைப்படும். நீங்கள் வாகன விளம்பரங்களைப் பார்த்தால் கார்கள் போன்ற பயணிகள் வாகனங்களுக்குக் குதிரைத் திறன் என்பது விளம்பத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். அதுவே டிராக்டர், டிரக் போன்ற வாகன விளம்பரங்களில் டார்க் குறித்த விபரம் முக்கிய இடம் பெறும். அதன் பயன்பாட்டிற்கு எது முக்கியம் என்பதை வைத்து மக்கள் வாங்குவார்கள் என்பதற்காக இதை விளம்பரங்களில் குறிப்பிடுகின்றனர்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

சரி இப்பொழுது டார்க் மற்றும் குதிரை திறனை எப்படிக் கணக்கிடுகிறார்கள் எனக் காணலாம். டார்க் என்பது Nm Newton meter என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. இது எவ்வளவு தூரத்திற்குச் சுற்றும் கருவியிலிருந்து சுற்றக்கூடிய பொருளுக்கான ஆர்ம் இருக்கிறது என்ற நீளத்துடன் எவ்வளவு சக்தி அதற்குக் கொடுக்கப்படுகிறது என்பதைப் பெருக்கினால் வரும். அது அந்த பொருள் அமைக்கப்பட்டிருக்கும் புவியீர்ப்பு விசைக்கான வேகத்தைப் பொருத்து மாறுபடும்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

நாம் ஒரு இன்ஜினிற்கான டார்க்கை கணித்துவிட்டால் அதன் பின்னர் அந்த இன்ஜினிற்கான குதிரை திறனைக் கணிப்பது சுலபம் தான். நாம் ஒரு வாகனத்தின் டார்க்கை இன்ஜின் வேகத்துடன் பெருக்கி அதை 5252 ஆல் வகுத்தால் கிடைக்கும் விடையே அதன் குதிரைத் திறன்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

உதாரணமாக ஒரு வாகனம் 200 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது என்றால் 200ஐ4000 த்தால் பெருக்கி அதை 5252ல் வகுத்தால் நமக்கு 152.32 என்ற விடை கிடைக்கும் அதுதான் அந்த வாகனத்தின் குதிரை திறனாகும். அதாவது இதில் ஓரு சுற்றுக்கு 200 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது என்றால் 4000 சுற்றுக்கு எவ்வளவு திறனை வெளிப்படுத்துகிறது எனக் கணக்கிட வேண்டும்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

அதில் ஒரு குதிரைக்கு 5252 திறன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதை மொத்தமாகக் கிடைக்கும் திறனுடன் வகுக்கும் போது எவ்வளவு குதிரைத் திறன் கிடைக்கிறது என அர்த்தம். இந்தக்கணக்கீட்டை வைத்து ஒருவாகனத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப அதற்கு டார்க் முக்கியமா? அல்லது குதிரைத் திறன் முக்கியமா என்பதை முடிவு செய்து அதற்குத் தகுந்த உதிரிப்பாகங்களை வைத்து இன்ஜினை டிசைன் செய்வார்கள்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

இதன் காரணமாகத் தான். வயல்களில் டிராக்டர்கள் உழும் அளவிற்கு கார்களால் வயல் வெளிகளை உழுது போட முடியாது. அதே போல அதே கார் சாலையில் செல்லும் வேகத்திற்கு டிராக்டர்களால் செல்ல முடியாது. ஒரு வாகனத்தை டோ செய்து இழுக்க வேண்டும் என்றால் குதிரை திறனை விட டார்க் தான் முக்கியம்.

வாகனம் வாங்கும் போது அதிக குதிரைத் திறன், அதிக டார்க் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

நாம் வாகனம் வாங்கும்போது அதிக குதிரைத் திறன் கொண்ட கார்களை வாங்க வேண்டுமா? அதிக டார்க் திறன் உள்ள வாகனங்களை வாங்க வேண்டுமா என்றால் அது உங்கள் பயன்பாட்டைப் பொருத்து நீங்கள் அதிக எடைகளைத் தூங்கிச் செல்லும் அல்லது ஆஃப்ரோடு பயணத்திற்காக வாகனங்களை வாங்கினால் அதிக டார்க் திறனைத் தேவை. அதுவே அதிக தூரம் வேகமாகச் செல்ல வாங்கினால் அதிக குதிரைத்திறன் தேவை. நீங்கள் வைத்திருக்கும் வாகனத்தின் குதிரைத் திறன் மற்றும் டார்க் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
What is more important torque or horsepower for a vehicle
Story first published: Friday, July 15, 2022, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X