மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

மரகத நாணயம் படத்தை போல் நிஜ வாழ்க்கையில் திகில் ஏற்படுத்தி வரும் லாரிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

உங்களில் பலரும் மரகத நாணயம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறோம். இரும்பொறை அரசனின் பாதுகாப்பில் இருக்கும் மரகத நாணயத்தை தொட்டவர்களை, டிரைவர் இல்லாத லாரி ஒன்று விரட்டி விரட்டி கொலை செய்யும். துருப்பிடித்த அந்த பழைய லாரி திரையில் வரும் காட்சிகள், திகில் கூட்டுவதாக இருக்கும்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

ஆனால் நிஜ வாழ்க்கையில் சாலையில் பயணிக்கும் சாதாரண லாரி நம்மை கொன்று விடுமோ? என இங்கே நிறைய பேர் பயந்து கொண்டுள்ளனர். ஆம், சாலையில் பயணிக்கும்போது லாரியை பார்த்து விட்டால், அவர்களுக்கு திடீரென பயம் தொற்றி கொள்ளும். அப்படி பயப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் நீங்கள் செமியோகோபோபியா-வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

லாரிகளை பார்த்தால் திடீரென உண்டாகும் இனம் புரியாத பயத்திற்கு பெயர்தான் செமியோகோபோபியா (Semiochophobia). நம்மில் பலரும் செமியோகோபோபியா-வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். லாரிக்கு அருகே, லாரிக்கு முன்னால் மற்றும் லாரிக்கு பின்னால் வாகனம் ஓட்டும்போது, அவர்களுக்கு திடீரென பதற்றம் அதிகரிக்கும்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

சில சமயங்களில் லாரி தொலைவில் இருந்தாலும் கூட பயப்படுவார்கள். லாரிகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளே, செமியோகோபோபியா பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. அத்துடன் லாரிகளின் அதிக எடை மற்றும் பிரம்மாண்ட தோற்றமும் கூட, ஒரு சிலருக்கு செமியோகோபோபியா பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

லாரிகளுடன் ஒப்பிடும்போது கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மிகவும் எடை குறைந்தவை மற்றும் உருவத்தில் மிகவும் சிறியவை. எனவே இயல்பாகவே ஒரு சில கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு, லாரிக்கு அருகே வாகனம் ஓட்டும்போது பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. லாரிகளால் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

பொதுவாக லாரிகளின் ஓட்டுனர்களால் அனைத்து நேரங்களிலும் உங்களை பார்க்க முடியாது. அதாவது லாரிகளுக்கு பிளைண்ட் ஸ்பாட் அதிகம். பின்னால் மற்றும் அருகில் வரும் வாகனங்களை காண லாரி ஓட்டுனர்களுக்கு வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் உதவுகின்றன. ஆனால் இந்த ரியர் வியூ மிரரில், சில பகுதிகள் கவர் ஆகாது.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

அத்தகைய இடங்களை லாரி ஓட்டுனர்கள் திரும்பிதான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட இடங்கள்தான் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன. எனவே ஒரு சில சமயங்களில் லாரி டிரைவர்கள், உங்களை பார்க்காமலேயே லாரியை திருப்பி விடுவார்கள். ஏராளமான சாலை விபத்துக்களுக்கு இது மிக முக்கியமானதொரு காரணமாகும்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

இதுபோல் லாரிகளால் அதிக விபத்து ஏற்படுவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கை முழுவதும் லாரிகளை பார்த்து பயந்து கொண்டே இருக்க முடியாது. எனவே லாரிகளுடன் எப்படி சாலையை பகிர்ந்து கொள்ள வேண்டும்? என்பதை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். லாரிகள் மீதான பயத்தில் இருந்து மீண்டு வரவும், பாதுகாப்பான பயணத்திற்கும் இந்த செய்தி உங்களுக்கு உதவும்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

லாரிகளுடன் சாலையை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும்?

லாரிகளுக்கு என தனியாக சாலை இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தற்போதைக்கு வாய்ப்பில்லை. குறிப்பாக இந்தியாவில் அத்தகையை திட்டங்கள் வருவதற்கு மிக நீண்ட காலம் ஆகலாம். எனவே லாரிகளுடன் சாலையை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்வதுதான் தற்போது இருக்கின்ற வழி.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

லாரிகள் உடனான மோதலை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. லாரிகள் உருவத்தில் பெரியவை என்பது நமக்கு தெரியும். எனவே அவை நகர்வதற்கு அதிக இடம் தேவைப்படும். அத்துடன் லாரியை நிறுத்துவதற்கு அதிக நேரமும், அதிக தொலைவும் தேவைப்படும். லாரிகள் தோற்றத்தில் பெரிதாக இருப்பதால், நீங்கள் அவற்றை கடப்பதற்கும் அதிக நேரமும், தொலைவும் தேவைப்படும்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

அத்துடன் லாரிகளின் பிளைண்ட் ஸ்பாட் அதிகம். இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து கொண்டு நாம் செயல்படுவது அவசியம். அப்படி நடந்து கொண்டால், லாரிகள் உடனான விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே லாரிகளுக்கு அருகில் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தால், கீழ்க்கண்ட வழிமுறைகளை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்
 • ஒரு லாரி உங்களை கடந்து செல்ல முயற்சி செய்தால், உங்கள் வேகத்தை குறைந்து விடுங்கள். லாரி கடந்து செல்வதற்கு அனுமதியுங்கள்.
 • லாரியின் பிளைண்ட் பகுதியில் பயணம் செய்யாதீர்கள். லாரி டிரைவர் உங்களை தெளிவாக பார்க்க வேண்டும். அப்படியான இடத்தில் வாகனத்தை ஓட்டுங்கள்.
 • மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்
  • லாரிகள் வளைவதற்கு அதிக இடம் தேவைப்படும். எனவே நீங்கள் லாரிக்கு அருகிலோ அல்லது பின்னாலோ இருந்தால், உடனடியாக நகர்ந்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் லாரி திரும்புவதற்கு தேவைப்படும் இடத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
  • மரகத நாணயம் படத்தை போல் நிஜத்தில் திகில் ஏற்படுத்தும் லாரி! இரும்பொறை அரசனை பார்த்ததாக நடுங்கும் வாகன ஓட்டிகள்

   போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல்

   இவற்றுடன் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றுங்கள். செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமுறை மீறல்களை தவிர்த்து விடுங்கள். இது உங்களுடைய பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Is Semiochophobia? How To Share The Road With Trucks? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X