Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டேபிள் டாப் விமான ஓடுதளம்... ஆபத்துக்களும், சவால்களும்!
கோழிக்கோடு விமான ஓடுதளத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக, இதன் ஆபத்தான கட்டமைப்பு கொண்ட இதன் ஓடுதளமே குறிப்பிடப்படுகிறது.

'டேபிள் டாப்' ஓடுதளம் என்று குறிப்பிடப்படும் இந்த வகை விமான ஓடுதளங்கள் ஏற்கனவே பல நூறு உயிர்களை பலி வாங்கியிருப்பதுடன், ஒவ்வொரு முறையும் உயிர்களை காவு வாங்குவதற்கு தயாராகவே இருப்பது போன்ற கட்டமைப்பை வெளிவரத் துவங்கி இருக்கின்றன.

மங்களூர், கோழிக்கோடு மற்றும் மிஸோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக்யாங், ஹரியானாவில் குலு ஆகிய விமான நிலையங்களும் டேபிள் டாப் வகையிலானதாக உள்ளன. இதில், மங்களூரில் உள்ள விமான நிலையத்தில் 2010ம் ஆண்டு ஓடுபாதையிலிருந்து விலகி சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

பொதுவாக மழை நேரங்களில் சாதாரண விமான ஓடுபாதைகளில் விமானத்தை தரை இறக்குவது விமானிகளுக்கு மிக சவாலான பணியாக இருக்கும். ஓடுபாதையை கணிப்பதற்கு போதிய பார்வை திறன் இல்லாத நிலை, ஓடுபாதையில் மழை நீரால் ஏற்படும் வழுக்கும் தன்மை உள்ளிட்டவற்றை கணித்து மிக கவனமாக தரை இறக்க வேண்டி இருக்கிறது.

இதுபோன்ற பல்வேறு சவாலான சூழல் நிலவிய நேரத்தில்தான் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கியபோது மோசமான விபத்தில் சிக்கிவிட்டது. விமானத்தை தரை இறக்குவதற்கு தீவிர முயற்சி செய்து திட்டமிட்டே விமானி தரை இறக்கி இருக்கிறார்.

ஆனால், விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் திட்டங்கள், கணிப்புகளை பொய்யாக்கி விமானம் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கிவிட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த விபத்துக்கு அடிப்படை காரணமாக, டேபிள் டாப் வகை ஓடுதளமே கூறப்படுகிறது.

சாதாரண ஓடுதளங்களில் ஒருவேளை விமானங்கள் தவறி, ஓடுதளத்தைவிட்டு வெளியேறினால் கூட அருகில் இருக்கும் விசாலமான புல்வெளி பகுதியில் சென்று நின்றுவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், டேபிள் டாப் வகை ஓடுதளங்களில் இந்த வாய்ப்பு அறவே கிடையாது.

டேபிள் டாப் வகை ஓடுதளங்கள் மலைக் குன்றுகள் நிறைந்த பகுதி அல்லது மேடான நிலப்பகுதியின் மீது அமைக்கப்படுகிறது. இதனால், விமான ஓடுபாதை துவங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் பள்ளமான பகுதி அல்லது பெரும் பள்ளத்தாக்கு கொண்டதாக இருக்கின்றன. கோழிக்கோடு விமான ஓடுபாதையானது 2,860 மீட்டர் நீளம் கொண்டது.

உயரமான மேடை போன்று அமைக்கப்பட்டு இருக்கும் இந்த விமான ஓடுதளத்தை சுற்றி 35 ஆடி ஆழமான பகுதியை கொண்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சென்று முடிவில் உள்ள 35 அடி ஆழ பகுதியில் விழுந்ததுடன் அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கிவிட்டது. இதில், விமானம் இரண்டு துண்டாக உடைந்ததுடன், 18 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.

மிக சரியான இடத்தில் தரை இறக்கி, குறிப்பிட்ட இடத்திற்குள் விமானத்தை நிறுத்தினால் மட்டுமே விபத்தில்லாமல் பயணிகளை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க முடியும். கோழிக்கோடு விமான ஓடுபாதையில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737-800 விமானத்திற்கு குறைந்தபட்சம் 1,800 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதை தேவை.

ஆனால், போதிய நீளம் கொண்டதாக இருந்தாலும், மழை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று விபத்தில் சிக்கியதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், இந்த விமானத்தை இயக்கிய விமானிகள் மிகுந்த அனுபவசாலிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், மோசமான தட்பவெப்ப நிலைகளில் இதுபோன்ற விமான ஓடுபாதைகள் ஆபத்துக்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

கோழிக்கோடு விமான ஓடுபாதை ஆபத்தானது, விமானங்களை இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே விமான பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கருத்துக்களை மீறீ இயக்கப்பட்ட நிலையில், நேற்று மோசமான இந்த விமான விபத்தை இந்த ஓடுபாதை சந்தித்துள்ளதுடன், பல உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. இனியாவது, இதுபோன்ற விமான நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், பயன்பாட்டை நிறுத்தி, பாதுகாப்பான இடத்தில் ஓடுபாதை கட்டமைப்புடன் விமான நிலையங்களை நிறுவுவது அவசியமாகிறது. நகரிலிருந்து சில மணிநேர கூடுதல் பயணித்தாலும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது.