மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மார்கெட்டில் உள்ள 3 விதமான ஹைபிரிட் வாகனங்கள் என்னென்ன ஒவ்வொன்றிற்கும் என்ன வித்தியாசம் எனக் கீழே காணலாம் வாருங்கள்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

இன்று உலகம் முழுவதும் மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக்வாகனங்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. ஆனால் அதை விட மக்கள் விரும்புவது ஹைபிரிட் கார்கள் தான் இந்தியாவில் இந்த வகை கார்கள் அதிகம் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பல கார்கள் இந்த ஹைப்பிரிட் தொழிற்நுட்பத்தில் வரும் என எதிர்பார்க்கலாம்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

அது என்ன ஹைபிரிட் தொழிற்நுட்பம் அது எப்படி இயங்குகிறது? எனக் காணலாம் வாருங்கள். ஹைபிரிட் தொழிற்நுட்பம் என்பது நாம் தற்போது பயன்படுத்தி வரும் பெட்ரோல் இன்ஜின் உடன் கூடுதலாக எலெக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டு பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பம் இதில் 3 வகையான தொழிற்நுட்பங்கள் இருக்கிறது. மைல்டு ஹைபிரிட், ஸ்டிராங்க் ஹைபிரிட், பிளக்- இன் ஹைபிரிட் இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம் எனக் காணலாம்

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

மைல்டு ஹைபிரிட் (MHEV)

மைல்டு ஹைபிரிட் என்பது பெட்ரோல் அல்லது டீசலில்இயங்கும் காருடன் அதற்குத் துணையாகச் சேர்ந்து எலெக்டரிக் மோட்டாரையும் இணைப்பது ஹைபிரிட். இந்த தொழிற்நுட்பத்தில் பிரதானமாக பெட்ரோல்/டீசல் இன்ஜினே இயங்கும், கார் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இயங்க துவங்கும் போது அதற்கு சப்போர்ட் செய்யும் வகையில் எலெக்ட்ரிக் மோட்டார் இயங்கும் குறிப்பிட்ட அந்த வேகத்திற்கு மேல் கார் அதிக வேகத்தில் செல்ல இந்த எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படும்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

ஆனால் அதற்கு பெட்ரோல்/ டீசல் பயன்பாடு அதிகரிக்காது. உதாரணமாக 50 கி.மீ வேகத்தில் கார் செல்லும் போது எலெக்டரிக் மோட்டார் இயங்க துவங்குகிறது என்றால் கார் 70 கி.மீ வேகத்தில் பயணிகத்துவங்கும். ஆனால் 50 கி.மீ வேகத்தில் செல்லும் போது எவ்வளவு பெட்ரோல்/டீசல் செலவானதே அதே அளவு தான் தற்போதும் செலவாகும் அதிகமாகக் கிடைக்கும் வேகம் எலெக்டரிக் மோட்டாரிலிருந்து கிடைக்கிறது என அர்த்தம் இந்த எலெக்டரிக் மோட்டாருக்கான பேட்டரியை தனியாக சார்ஜ் செய்யத் தேவையில்லை இது காரின் இயக்கத்தின் போதே சார்ஜ் செய்துகொள்ளும்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

முழு/ ஸ்டிராங்க் ஹைபிரிட் (HEV/SHEV)

இது நேரடியாக மைல்டு ஹைபிரிட் இன்ஜினிற்கு எதிராக டிசைன் செய்யப்பட்ட வாகனம். இந்த வாகனம் ஆன் செய்யப்படும் போது பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் இன்ஜினும் சேர்ந்து ஸ்டார் ஆகி விடும் ஆனால் கார் குறிப்பிட்ட வேகத்திற்குமேல் செல்லும் போது தான் காரின் பெட்ரோல்/ டீசல் இன்ஜின் நேரடியாகக் காரை இயங்கும். அதுவரை எலெக்ட்ரிக் இன்ஜினில் மட்டும் இயங்கும்

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

உதாரணமாக கார் ஸ்டார் செய்யப்பட்டு 30 கி.மீ வேகம் வரை எலெக்டரிக்கில் மட்டும் இயங்கும். அதற்கு மேல் வேகம் செல்லும்போது பெட்ரோல்/டீசல் இன்ஜின் செயல்படத் துவங்கிவிடும். மேலும் காரின் வேகம் குறைந்தால் பெட்ரோல்/டீசல் இன்ஜின் இயக்கத்தை நிறுத்திவிடும் எலெக்டரிக் இன்ஜின் மட்டும் இயங்கும்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

இதனால் கார் ஊருக்குள் பயணிக்கும் போது பெட்ரோல்/டீசல் செலவாகாது. வேகமாகப் பயணிக்கும் போது மட்டும் செலவாகும் என்பதால் பெட்ரோல். டீசல் பயன்பாடும் குறையும், அதே நேரத்தில் வேகமாகச் செல்லும் போது மட்டும் பெட்ரோல்/டீசல செலவு ஆவதால் அதன் மைலேஜூம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆப்ஷன் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் உள்ள வாகனங்களில் மட்டுமே இருக்கும். மேலும் இந்த காரின் பேட்டரியும் தானாக சார்ஜ் செய்து கொள்ளும்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

பிளக் இன் ஹைபிரிட் (PHEV)

பிளக் இன் ஹைபிரிட் என்பது கிட்டத்தட்ட முழு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் தான் இயங்குகிறது. ஆனால் அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் இந்த வாகனம் எலெக்ட்ரிக் மோட்டரிலேயே நீண்ட தூரம் இயங்கும் திறன் கொண்டது. முழு ஹைபிரிட்டில் குறைந்த தூரம் மட்டுமே பேட்டரியில் இயங்க முடியும். பேட்டரியின் திறன் குறைந்துவிட்டால் நேரடியாக பெட்ரோ/டீசல் இன்ஜின் செயல்பாட்டிற்கு வந்துவிடும்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

ஆனால் இந்தபிளக்கின் தொழிற்நுட்பத்தில் 150 கி.மீ வரை பேட்டரியிலேயே இயங்க முடியும். இதனால் ஒருவர் நகர்ப் பகுதியில் தினசரி பயன்பாட்டை பேட்டரியிலும் வெளியூர்களுக்குச் சென்றால் ஹைவேயில் மட்டும் பெட்ரோல்/டீசல் இன்ஜினை பயன்படுத்த முடியும். இந்த வாகனத்தை பயன்படுத்த பேட்டரியை தனியாக பிளக் மூலம் சார்ஜ் ஏற்ற வேண்டும். இந்த காரும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் மட்டுமே இயங்கும்.

மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என் வித்தியாசம்?

முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை

* முழு மற்றும் ஹைபிரிட் கார்களின் பேட்டரியை தனியாக சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை

* மைல்டு எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை எலெக்டரிக் பவரில் மட்டும் தனியாக இயங்கும் திறன் கிடையாது.

* முழு மற்றும் பிளக் இன் எலெக்ட்ரிக் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே சேர்ந்து இயங்கும்.

* முழு மற்றும் பிளக் இன் எலெக்டரிக் வாகனங்கள் தனியாக எலெக்ட்ரிக்கில் இயங்கினாலும் பெட்ரோல் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையில் இருக்கும் என்பதால் சிறிதளவு பெட்ரோல், டீசலும் செலவாகும்

* முழு ஹைபிரிட் வானகத்தை ஸ்டிராங்க் ஹைபிரிட் வாகனங்கள் எனவும் அழைக்கிறார்கள்.

Most Read Articles
English summary
What is the Difference Between Full Hybrid Mild Hybrid and Plug in Hybrid Cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X