எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது... ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி?

ரோல்ஸ் ராய் நிறுவனத்தின் பாந்தோம் காரில் குடை வழங்கப்படுகிறது. இந்த குடையைத் தனியாக வாங்க முடியும் என்றாலும் அது ரோல்ஸ் ராய்ஸ் காரின் உரிமையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

கார்களிலேயே விலையுயர்ந்த காராக பார்க்கப்படுவது ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். இந்நிறுவனத்தின் கார்களுக்கு தனி மவுசு இருக்கிறது. நீங்கள் நினைத்தபடி எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க முடியாது. அந்நிறுவனம் அதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூட ஒரு தகுதியை வைத்திருக்கிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

அந்த அளவிற்கு அந்த காரில் என்ன ஸ்பெஷல் என்றால் அந்த கார் முழுவதும் கைகளாலேயே தயார் செய்யப்பட்டும் கார். உலகின் தலை சிறந்த கைவினை தயாரிப்பு என்றால் அது ரோல்ஸ் ராய்ஸ் எனச் சொல்லி விடலாம். இங்கிலாந்தின் குட்வுட் என்ற பகுதியில் மட்டும் தான் இந்த கார் தயாராகிறது. உலகம் முழுவதும் உள்ள பணக்கார வாடிக்கையாளர்களுக்காக இந்த கார் தயாராகிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

இந்நிறுவனம் ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்நிறுவனம் பல கார்களை தயாரித்து வருகிறது. அதில் முக்கியமானது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் கார் தான் சிறப்பு நிறைந்த கார் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இந்த கார் தான் இந்த காருக்கு மார்கெட்டில் செம மவுசு இருக்கிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

இந்த காரில் சமீபத்தில் இந்த காரில் பிரைவசி சூட் என்ற அப்டேட் வந்துள்ளது. அதன்படி இந்த காரின் டிரைவர் சீட் பகுதியும், பின் பக்க சீட் பகுதியும் எலெக்ட்ரோக்ரோமிக் கிளாஸ்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பின்பக்க சீட்டில் அமர்ந்து பேசுபவர்களின் சத்தம் முன்பக்க சீட்டிற்குக் கேட்காது. அதே நேரம் பின்பக்க சீட்டில் இருப்பவர்கள் டிரைவருக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அதற்காக இன்டர்காம் வசதி இந்த காரில் இருக்கிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

இது போகப் பின்பக்க சீட்டில் இருப்பவர்களுக்கு 12 இன்ச் மானிட்டர் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவைஸாக பயன்படுத்த முடியும். இது போக வெளியிலிருந்து காருக்குள் நடப்பதைப் பார்க்காமல் இருக்ககர்டன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் பல அப்டேட்களை பெற்றாலும் இந்த காரின் ஆரம்பத்தில் உள்ள ஒரு அம்சம் இன்றும் மாறாமல் அப்படியே தொடர்கிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

அட ஆமாங்க இந்த காரின் அறிமுகத்தில் பலரைக் கவர்ந்த விஷயம் இந்த காரின் கதவில் கொடுக்கப்பட்டுள்ள குடை தான். இந்த காரில் எத்தனை அப்டேட்கள் வந்தாலும் இந்த குடை விஷயம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு இந்த காரின் குடையில் பல்வேறு வண்ண கலர் குடைகளைப் பொருத்தும் ஆப்ஷன்கள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதன் ஹேண்டிலும் லேசான மாற்றங்களைப் பெற்றன.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

இந்த குடை பெரும்பாலும் அதில் உள்ள பயணிகள் மழைக் காலங்களில், மழையில் நனையாமல் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அழகாகச் செல்ல இது பயன்படும். குடை ஒரு சாதாரண விஷயம் தானே இதில் என்ன இருக்கிறது. என நீங்கள் நினைக்கலாம், உலகில் வேறு எந்த காரிலுமே குடை என்பது ஒரு அம்சமாக இல்லை. இந்த காரில் மட்டுமே குடையை வைக்கத் தனி பகுதி வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்குபவர்கள் பலர் பணக்காரர்களாக இருப்பதால் அவர்கள் சொகுசு வசதியை எதிர்பார்ப்பார்கள் என்பதால் இந்த வசதியை வழங்கியுள்ளது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

இதில் முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்திய உலகிலேயே காஸ்ட்லியான குடைகளில் ஒன்று இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரில் உள்ள குடை. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த குடையை விற்பனை செய்கிறது. ஒரு குடை 700 அமெரிக்க டால் அதாவது ரூ55 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

ரூ4 கோடிக்கு கார் வாங்குபவர்களுக்கு ரூ55 ஆயிரத்திற்குக் குடை என்பது சாதாரண விஷயம் தான் அதனால் இந்த காரை வாங்குபவர்கள் எல்லாம் எந்த குடையையும் சேர்த்து வாங்கி விடுகிறார்கள். பொதுவாகக் கடைகளில் ரூ100-200க்கு விற்பனையாகும் குடையில் உள்ள அதே அம்சங்கள் தான் இந்த குடையிலிருந்தாலும் இதைவிட மிக அதிகம்.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

சரி விலை மிக அதிகம் இருந்தாலும் பரவாயில்லை இந்த குடையை நாம் வாங்கலாமா என்றால் முடியாது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் இதை அதன் கார் உரிமையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்கிறது. மற்றவர்கள் இந்த குடையை எவ்வளவு கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. கார் உரிமையாளர்கள் மட்டும் வாங்கிக்கொள்ள முடியும்.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

அப்படி என்ன இந்த குடையில் ஸ்பெஷாலிட்டி இருக்கிறது என்றால் இந்த குடையில் கைப்பிடியின் கீழே உள்ள வடிவமைப்பு ரோல்ஸ் ராய்ஸ் லோகோவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு குடியை மடக்கி கதவில் மாட்டியிருக்கும் போது பட்டன் போல அழுத்தினால் குடை வெளியே வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது . . . ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள குடைக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா ?

இது மட்டுமல்ல குடை ஈரமாக அந்த காரின் கதவிற்குள் வைக்கப்பட்டாலும் உள்ளேயே அதைக் காய வைக்கும் தொழிற்நுட்பமும் அந்த கதவில் இருக்கிறது. இந்த குடையில் ரோல்ஸ் ராய்ஸ் லோகோ குடையின் கைபிடியின்கீழ் பகுதியில் மட்டும் தான் தான் இருக்கும் வேறு பகுதிகளில் இருக்காது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மொத்தம் 6 விதமான கலர்களில் வெளியாகிறது. டார்க் ஸ்பைஸ், மேன்டரின், பிளாக், முகல்லோ ரெட், நேவி ப்ளு, மற்றும் டெய்லர்டு பர்பிள் ஆகிய நிறங்களில் விற்பனையாகிறது.

Most Read Articles

English summary
What is the specialty in rolls Royce phantom umbrella
Story first published: Friday, August 12, 2022, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X