Just In
- 40 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- News
மறந்துடாதீங்க.. நம்ம முதல்வரே இளைஞரணியில் இருந்து வந்தவர் தான்! சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்
- Finance
கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... இந்த ஊர் பெண்கள் தான் டாப்
- Technology
Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
தெர்மாகோல் கதை எல்லாம் இல்லை... சாலையின் குறுக்கே ரப்பர் டியூப் ஏன் போடப்படுகிறது தெரியுமா?
வெளிநாடுகளில் சாலைகளில் போக்குவரத்தைக் கணக்கிடச் சாலைகளில் கருப்பு ட்யூப் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்ன விதமான தகவல்களை எல்லாம் இந்த கருவி செய்யும்? முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிக்கொண்டே செல்கிறது. பெருநகரங்களில் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. குறிப்பாகக் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மிகவும் அதிகமான அளவு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. இந்த போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்றால் ஒவ்வொரு ரோட்டிலும் எவ்வளவு போக்குவரத்து நடக்கிறது என்ற தெளிவான புரிதல் வேண்டும். அப்படி என்றால் ஒவ்வொரு பகுதியிலும் டிராபிக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வு குறிப்பிட்ட ரோட்டில் எந்த நேரத்தில் அதிகமான டிராபிக் இருக்கிறது. எந்த ரக வாகனங்கள் அதிகம் பயணிக்கின்றன. எவ்வளவு வேகத்தில் பயணிக்கின்றன. உள்ளிட்ட தகவல்கள் வேண்டும்.

இந்தியாவில் போக்குவரத்தைக் கணக்கிட 2 வகையான டெக்னிக்கைதான் பயன்படுத்துகிறார்கள். ஒன்று மேனுவல் டெக்னிக் மற்றொன்று ஆட்டோமெட்டிக் டெக்னிக், மேனுவல் டெக்னிக்கை பொருத்தவரை குறிப்பிட்ட ரோட்டில் கணக்கெடுப்பவர்கள் அமர வைக்கப்பட்ட சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பார்கள்.

இரண்டாவது முறை ஆட்டோமெட்டிக் டெக்னிக் அதிகமான போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளில் இப்படி ஆட்களை நிறுத்தி வைத்து மேனுவலாக கணக்கெடுப்பது என்பது கடினம். இந்தமாதரியான இடங்களில் ஆட்டோமெட்டிக் கேராக்கள் பொருத்தப்பட்டு டிராபிக் கண்காணிக்கப்படும். இதில் எந்த முறை சுலபமாக இருக்கும் என்பதைப் பொருத்து அதைப் பின்பற்றுவார்கள்.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் சாலை போக்குவரத்தை துல்லியமாக்கக் கணக்கெடுக்கும் கருவி ஒன்று இருக்கிறது. அது சாலை போக்குவரத்தில் உள்ள முக்கியமாகப் பல தகவல்கள் தானியங்கியாக துல்லியமாக்கக் கணக்கெடுக்கிறது. இதைப் பற்றித் தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

இந்த கருவிக்குப் பெயர் pneumatic road tube. இதுசாலையின் நடுவே குறுக்காகப் போடப்படுகிறது. சாலையில் இரு புறங்களிலும் இந்த டியூப் ஒரு கருவியுடன் இணைக்கப்படுகிறது. இப்பொழுது இந்த டியூப்பில்வாகனங்கள் ஏறுி செல்லும் போது எத்தனை வாகனங்கள் ஏறிச் செல்கிறது என்பதை இந்த டியூபின் அழுத்தத்தை வைத்து பக்கவாட்டில் இருக்கும் கருவி கணக்கிடும்.

இதில் இரண்டு வகையான கணக்கிட்டு முறை இருக்கிறது. சாலையில் ஒரே ஒரு ட்யூப் மட்டும் இருந்தால் சாலையில் எத்தனை வாகனங்கள் செல்கிறது? முதல் வாகனத்திற்குள் அடுத்த வாகனத்திற்கும் உள்ள நேர இடைவெளி எவ்வளவு? என்ற இந்த இரண்டு தகவல்கள் மட்டுமே கிடைக்கும். இதுவே இரண்டு ட்யூப் போட்டுக் கணக்கெடுக்கும் முறையில் எத்தனை வீல் கொண்ட வாகனங்கள் எத்தனை எண்ணிக்கையில் பயணிக்கிறது? மல்டி ஆக்ஸில் வாகனங்கள் எத்தனை? எந்த திசையிலிருந்து அதிகமாக வாகனங்கள் பயணிக்கிறது? எவ்வளவு வேகத்தில் வாகனங்கள் பயணிக்கிறது உள்ளிட்ட தகவல்களைப் பெறும்.

இந்த தொழிற்நுட்பம் இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில சாலைகளில் நிரந்தரமாகக் கணக்கெடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். சில சாலைகளில் தற்காலிகமாகப் பொருத்தப்படும். இது அந்த கணக்கெடுப்பிற்கான தேவைகளைப் பொருத்து இந்த கணக்கீடு நடைபெறும்.

இந்த கணக்கீட்டை வைத்து சாலையில் டிராபிக்கிற்கு ஏற்ப சாலையின் வசதி மேம்பாடு மற்றும் மாற்றுச் சாலை வசதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேனுவல் மற்றும் கேமரா மூலம் கணக்கெடுக்கப்படும் முறையில் போதுமான அளவு துல்லியம் இருக்காது. ஆனால் இந்த கருப்பு ட்யூப் மூலம் கணக்கெடுக்கும் முறையில் துல்லியமான கணக்கீடு முறை இருக்கும்.

இந்தியாவிலும் இந்த தொழிற்நுட்பம் வெகு சில இடங்களிலேயே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இடத்தில் மேனுவல் கணக்கீட்டு முறை தான் பின்பற்றப்படுகிறது. இந்த கருவியை வைத்து சாலை டிராபிக்களை கணக்கெடுத்தால் சாலை போக்குவரத்தை மேம்படுத்த சிறப்பாக உதவும்