ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

கார்களின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இடம்பெற்றுள்ளது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

கார்களை விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இயக்குவதற்காக பல்வேறு கண்ணாடிகளை வழங்குகின்றனர். காரின் உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரர் மற்றும் பக்கவாட்டில் இருபுறமும் இருக்கும் சைடு வியூ மிரர் ஆகியவற்றின் பயன்பாடுகள் நமக்கு நன்றாக தெரியும். சைடு வியூ மிரர்களுக்கு உள்ளே வழங்கப்படும் மற்றொரு சிறிய கண்ணாடியின் பயன்பாடு குறித்து கூட சமீபத்தில் நாங்கள் கூறியிருந்தோம்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

சைடு வியூ மிரர்களுக்கு உள்ளே வழங்கப்படும் சிறிய கண்ணாடிகளுக்கு பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் என்று பெயர். காரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களை ரியர் வியூ மிரர் மற்றும் சைடு வியூ மிரர் மூலம் டிரைவரால் பார்க்க முடியாது. எனவே சாலை விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

ஆனால் பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் இந்த பிரச்னையை சரி செய்ய உதவுகின்றன. காரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களை இந்த மிரர்கள் மூலம் பார்க்க முடியும். சரி, ஒரு சில பழைய கார்களில் பின் பக்க விண்டுஷீல்டின் மீதும் ஒரு கண்ணாடி வழங்கப்பட்டிருக்கும். பழைய கார்களில் நீங்கள் இதனை பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

ஆனால் தற்போதைய நவீன கார்களில் இந்த கண்ணாடி வழங்கப்படுவதில்லை. பழைய கார்களில் ஏன் இந்த கண்ணாடி வழங்கப்பட்டது? தற்போதைய கார்களில் ஏன் வழங்கப்படுவதில்லை? என்ற கேள்விகளுக்கான பதிலை நாங்கள் இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பொதுவாக பிரம்மாண்ட தோற்றம் கொண்ட பெரிய எஸ்யூவி கார்களில்தான் பின் பக்க விண்டுஷீல்டின் மீது முன்பு கண்ணாடியை வழங்கி வந்தனர். எஸ்யூவி கார்கள் உயரமாகவும், நீளமாகவும் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே காரின் உட்புறத்தில் உள்ள ரியர் வியூ மிரர் மூலமாக, பின் பகுதியை அவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

குறிப்பாக பின் பகுதியில் கீழே ஏதேனும் பொருட்கள் இருந்தால் ரியர் வியூ மிரர் மூலம் நாம் பார்க்க முடியாது. காரை ரிவர்ஸ் எடுக்கும்போதும், பார்க்கிங் செய்யும்போதும் இது பிரச்னைகளை ஏற்படுத்தும். பின் பகுதியில் கீழே என்ன இருக்கிறது? என்பதை பார்க்க முடியாது என்பதால், அங்கு இருக்கும் பொருட்களின் மீது கார் மோதி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

அதே சமயம் குழந்தைகள் யாராவது விளையாடி கொண்டிருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும். இது போன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகதான் பின் பக்க விண்டுஷீல்டின் மீது கண்ணாடி வழங்கப்பட்டது. காரின் டெயில்கேட்டிற்கு கீழே உள்ள ஒட்டுமொத்த பகுதியையும் இந்த கண்ணாடி கவர் செய்து காண்பிக்கும்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

இந்த காட்சிகள், காரின் உட்புறத்தில் உள்ள ரியர் வியூ மிரரில் எதிரொலிக்கும். இதன் மூலமாக பின் பகுதியில் கீழே என்ன இருக்கிறது? என்பதை நீங்கள் தெளிவாக பார்க்கலாம். எனவே காரை ரிவர்ஸ் எடுக்கும்போதும், பார்க்கிங் செய்யும்போதும் நீங்கள் பாதுகாப்பாக செயல்பட முடியும். பழைய எஸ்யூவி கார்களில் ஏன் இந்த கண்ணாடி வழங்கப்பட்டது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

சரி, தற்போது வரும் எஸ்யூவி கார்களில் ஏன் இந்த கண்ணாடி வழங்கப்படுவதில்லை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இன்றை காலகட்டத்தில் கார்கள் மிகவும் அதிநவீனமாக மாறி விட்டன. கார்களில் பயணம் செய்பவர்களின் சௌகரியத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏராளமான வசதிகள் தற்போது வழங்கப்படுகின்றன.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

இதன் காரணமாகதான் தற்போது வரும் எஸ்யூவி கார்களில் பின் பக்க விண்டுஷீல்டின் மீது கண்ணாடிகள் வழங்கப்படுவதில்லை. அதாவது இன்றைய சூழலில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ள பெரும்பலான எஸ்யூவி கார்களில் ரியர் வியூ கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இந்த ரியர் வியூ கேமராக்கள் கண்ணாடிகளை வழக்கற்று போக செய்து விட்டன.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

தற்போதைய அதிநவீன கார்களின் பின் பகுதியில் கேமரா வழங்கப்படுகிறது. காரின் பின்னால் என்ன நடந்து கொண்டுள்ளது? என்னென்ன பொருட்கள் இருக்கின்றன? என்பதையெல்லாம் இந்த கேமரா நமக்கு மிகவும் தெளிவாக காட்டும். காரின் கேபினில் இருக்கும் திரையில், இந்த காட்சிகளை எல்லாம் நம்மால் பார்த்து கொள்ள முடியும்.

ஸ்டைலுக்காக அல்ல... காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

எனவே அதற்கு ஏற்ப ரிவர்ஸ் எடுப்பது, பார்க்கிங் செய்வது ஆகியவற்றை செய்து கொள்ளலாம். ரியர் வியூ கேமராக்கள் வழங்கப்படுவதன் காரணமாகவே, இன்றைய எஸ்யூவி கார்களின் பின் பக்க விண்டுஷீல்டின் மீது கண்ணாடிகளுக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. இருந்தாலும் இந்த கண்ணாடிகள் பழைய எஸ்யூவி கார்களுக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்கின என்பதை மறுக்க முடியாது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is the use of mirrors on rear windshield of suvs we explain
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X