விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

விமானங்களில் உணவு சுவையாக இருக்காது. அது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை மிகவும் அதிகம். எனவே விமானங்களில் சாப்பிடுவதை பலரும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் ஒரு சில செல்வந்தர்களும் கூட விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். சுவை நன்றாக இருக்காது என்பதுதான் இதற்கான காரணம்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

ஆம், உண்மைதான். விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்காது. நீங்கள் தரையில் சாப்பிடும் ஒரு உணவு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அதே உணவை விமானத்தில் சாப்பிட்டால் சுவை மிகவும் மோசமாக இருக்கும். எனவே விமானத்தில் சாப்பிடுவதை பலரும் விரும்புவதில்லை.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு விமான நிறுவனங்கள்தான் காரணம் என்ற பொதுவான எண்ணம் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நம் உடல்தான் இதற்கு காரணம். விமானங்களில் பயணம் செய்யும்போது, மனிதர்களின் சுவையை உணரும் திறனில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

விமானங்களில் உணவின் சுவை மிகவும் மோசமாக இருப்பதற்கு இதுதான் உண்மையான காரணம் ஆகும். விமானங்களில் மனிதர்களின் சுவையை உணரும் திறன், பல்வேறு காரணிகளால் மாற்றம் அடைகிறது. தரையில் இருக்கும் காற்றை காட்டிலும், விமானங்களின் கேபினில் இருக்கும் காற்று சுமார் 15 சதவீதம் வறண்டதாக இருக்கும் என்பது முதல் காரணி.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

ஒரு சில சமயங்களில் பாலைவனங்களில் இருக்கும் காற்றை விட, விமானங்களின் கேபினில் இருக்கும் காற்று வறண்டதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நமது சுவை மற்றும் வாசனையை உணரும் சக்திகள் நம்மிடம் இருந்து விலகி சென்று விடும். விமானங்களின் கேபினில் உள்ள காற்று மிகவும் வறண்டதாக இருப்பதால், நமது உடலில் நீரிழப்பு ஏற்படும். அத்துடன் வாய் வறண்டு விடும்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

இதன் காரணமாக நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களின் உணர்திறன் பாதிக்கப்படும். எனவே உணவு நமக்கு சுவையாக இருக்காது. அதேபோல் தரையில் இருப்பதை காட்டிலும், விமானங்களின் கேபினில் அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும் என்பது, விமானங்களில் நமது சுவையை உணரும் திறனில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இரண்டாவது காரணி ஆகும்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

உணவு நமக்கு சுவையாக இருக்க வேண்டுமென்றால், நாம் வாசனையை நுகர்வது மிகவும் முக்கியமானது. ஆனால் விமான கேபினில் அழுத்தம் குறைவாக இருப்பதால், நமது உடல் வாசனைகளை கண்டறிவதில் பிரச்னைகள் ஏற்படும். அதாவது குறைவான கேபின் அழுத்தம் காரணமாக, நமது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து விடும்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

இதன் விளைவாக உடலில் இருக்கும் ஆல்ஃபாக்டரி ரிசப்டர்கள் (Olfactory Receptors), வாசனைகளுக்கு எதிர்வினையாற்றும் விஷயத்தில் குறைந்த உணர்திறன் கொண்டதாக மாறி விடும். அதாவது உங்கள் உடல், வாசனையை உணரும் திறன் பாதிக்கப்படும். விமானங்களில் உணவு நமக்கு சுவை இல்லாததாக தோன்றுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

விமானங்களில் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதுதான், நமது சுவை உணரும் திறன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் மூன்றாவது காரணி ஆகும். உணவின் சுவைக்கும், சத்தத்திற்கும் என்ன தொடர்பு? என நீங்கள் நினைப்பது புரிகிறது. உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு சத்தம் ஒரு காரணம் என்பது வித்தியாசமாகவும் தோன்றலாம். ஆனால் இது உண்மைதான்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

ஏனெனில் இனிப்பு சுவைகளை பாராட்டும் நமது திறனை அதிக சத்தம் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது அதிக சத்தம் காரணமாக, இனிப்பு சுவைகளை உணரும் நமது திறன் பாதிக்கப்படுகிறது. விமானங்களில் உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான காரணங்கள்.

விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!

எனவே விமானங்களில் உணவு சுவையில்லாமல் இருப்பதற்கு, விமான நிறுவனங்கள் மட்டும் காரணமல்ல. நம் உடல்தான் மிக முக்கியமான காரணம். விமானத்தில் உணவின் சுவையை நாம் உணர்வதில் இப்படி பல்வேறு பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், அதற்கு மாற்று வழிகளை கண்டறிவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why airplane food tastes so bad we explain
Story first published: Wednesday, August 10, 2022, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X