செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

விமானத்தில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

விமானங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில், ஒரு சில விதிமுறைகள் உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். விமானம் டேக்-ஆஃப் செய்யப்படுவதற்கு முன்பு பயணிகள் அனைவரும் தங்களுடைய செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி வலியுறுத்தப்படுவதும் இதில் ஒன்று.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

விமானம் டேக்-ஆஃப் செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு சிலர் தங்களது செல்போனில் இருந்து அவசர அவசரமாக மெசேஜ் செய்வார்கள். ஏனெனில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் அறிவுறுத்துவார்கள். இதற்கு நாம் கீழ்படிய வேண்டியிருக்கும் என்பதுதான், அவசர அவசரமாக மெசேஜ் செய்வதற்கு காரணம்.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே விமானம் டேக்-ஆஃப் ஆவதற்கு முன்பு செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வது கட்டாயம் என சிலர் நினைத்து கொண்டிருக்கலாம். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்காக சில தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம். விமானத்தில் தனிப்பட்ட எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவதை கூட்டாட்சி விமான நிர்வாகம் (Federal Aviation Administration) முறைப்படி தடை செய்யவில்லை.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

பிறகு ஏன் செல்போன்களை ஆஃப் செய்யும்படி வலியுறுத்துகின்றனர்? என நீங்கள் நினைக்கலாம். ஏனெனில் செல்போன்கள் உள்பட கிட்டத்தட்ட அனைத்து எலெக்ட்ரானிக் டிவைஸ்களும், ரேடியோ அலைகளை உமிழும். இந்த ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணும், நேவிகேஷன் கருவியின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருந்தால், காக்பிட்டில் உள்ள ஏரோநாட்டிகல் உபகரணத்தில் இடையூறு ஏற்படலாம்.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

இதுதவிர நீங்கள் மிகவும் அதிகமான உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது செல்போன்கள் வலுவான சிக்னல்களை அனுப்பும். இதன் காரணமாக தரையில் நெட்வொர்க் நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அத்தகைய சிக்னல் குறுக்கீடு காரணமாக தற்போது வரை ஒரு விமான விபத்து கூட நிகழ்ந்தது கிடையாது.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

இன்னும் சொல்லப்போனால் ஏராளமான நிறுவனங்கள் தற்போது விமானங்களில் வை-ஃபை (Wi-Fi) சேவைகளையும் வழங்குகின்றன. இதற்கு ஒருவரின் டிவைஸ், ரேடியோ அலைகளின் மூலமாக கனெக்ட் செய்யப்பட வேண்டும். எனவே செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்ற விதிமுறை முன்னெச்சரிக்கை காரணமாக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

பெரும்பாலான விமான நிறுவனங்கள், எலெக்ட்ரானிக் டிவைஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கருதுகின்றன. குறிப்பாக விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யப்படும்போது, எலெக்ட்ரானிக் டிவைஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

ஏனெனில் விமான பயணத்திலேயே டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய இரண்டும்தான் மிகவும் முக்கியமான கட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரங்களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவேதான் இந்த நேரங்களில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Are You Asked To Switch Off Cell Phones And Electronic Devices During Take-off And Landing? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X