செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் உள்ளிட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

இந்தியாவின் யூஸ்டு கார் மார்க்கெட் மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது. செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் சாதாரண மாருதி கார் முதல் ரோல்ஸ் ராய்ஸ் லக்ஸரி கார் வரை அனைத்து வகையான கார்களும் கிடைக்கின்றன. புதிய கார்களை வாங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு செகண்ட் ஹேண்ட் கார்கள் ஒரு வரப்பிரசாதம்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

நம்மை போன்ற சாதாரண நபர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதில் வியப்பேதும் இல்லைதான். ஆனால் செல்வ செழிப்பில் திளைத்து வரும் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் சிலர் கூட யூஸ்டு கார்களை வாங்குகின்றனர் என்பது ஆச்சரியமான ஒரு செய்திதான். இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் போன்றவர்கள் இதற்கு ஒரு உதாரணம்.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

ஆம், உண்மைதான். விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரபலங்களும் கூட செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கியுள்ளனர். அப்படி செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கியுள்ள பிரபலங்கள் யார் யார்? செல்வ செழிப்பில் திளைத்து வரும் அவர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதற்கு என்ன காரணம்? என்பதை இனி பார்க்கலாம்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

யுவராஜ் சிங்

மிக சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் ஸ்டைல் மிகவும் பிரபலம். யுவராஜ் சிங்கிடம் லம்போர்கினி முர்சியலாகோ எல்பி640-4 (Lamborghini Murcielago LP640-4) கார் ஒன்று உள்ளது. பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz) எனப்படும் மிகவும் புகழ்பெற்ற லக்ஸரி யூஸ்டு கார் டீலரிடம் இருந்துதான் யுவராஜ் சிங் இந்த காரை வாங்கினார்.

MOST READ: 5 நிமிடத்தில் சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் காரில் வைரசை அழிக்க புது வழி!

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

யுவராஜ் சிங் வைத்துள்ள லம்போர்கினி முர்சியலாகோ எல்பி640-4 காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 631 பிஎச்பி பவர் மற்றும் 660 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

தினேஷ் கார்த்திக்

தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தால் ஒரு சில முறை இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் போராடி வரும் தினேஷ் கார்த்திக் போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) கார் ஒன்றை வைத்துள்ளார். இதுவும் பிக் பாய் டாய்ஸில் இருந்து வாங்கப்பட்டதுதான்.

MOST READ: நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியிடம் பென்ட்லீ மற்றும் லம்போர்கினி என ஏராளமான லக்ஸரி கார்கள் உள்ளன. இவர் சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் லாங் வீல்பேஸ் வெர்ஷன் காரை வாங்கியுள்ளார். இது அதிக இட வசதி அளிக்க கூடியது. இதுவும் கூட பிக் பாய் டாய்ஸில் இருந்து வாங்கப்பட்ட கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியிடம் இரண்டு பென்ட்லீ கார்கள் உள்ளன. இதில், ஒரு கார் டெல்லியிலும் மற்றொன்று மும்பையிலும் உள்ளது. விராட் கோஹ்லி பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) காரை வாங்கியுள்ளார். இந்த வெள்ளை நிற காருடன் அவரை பல முறை பார்க்க முடிந்துள்ளது.

MOST READ: இவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

விமான நிலையத்திற்கு செல்ல விராட் கோஹ்லி இந்த காரை அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த காரில் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக வேரியண்ட்டை பொறுத்து 500 பிஎச்பி அல்லது 521 பிஎச்பி பவரை வாரி வழங்க கூடியது. இவர்கள் மட்டுமல்ல. இன்னும் ஏராளமான பிரபலங்களும் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் கார்களை வாங்கியுள்ளனர்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

பிரபலங்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் கார்களை நாடி செல்வது ஏன்?

செகண்ட் ஹேண்ட் கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் குறித்து பார்த்தோம். புதிய கார்களுக்கு பதிலாக அவர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை ஏன் தேர்ந்து எடுக்கின்றனர்? என்பது குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

பணம் சேமிப்பு

இந்த காரணத்தை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம், உண்மைதான் நம்மை போலவே பிரபலங்களும் கூட பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கு யூஸ்டு கார்கள் மிகச்சிறந்த வழி. புதிய கார்களை காட்டிலும் செகண்ட் ஹேண்ட் கார்களை தேர்வு செய்தால் பணத்தை வெகுவாக மிச்சம் பிடிக்க முடியும்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

அதுவும் பிரபல மனிதர்கள் எல்லாம் நம்மை போல் சாதாரண கார்களை வாங்குவது கிடையாது. அவர்கள் சொகுசு கார்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார்களைதான் அதிகம் வாங்குகின்றனர். இந்த ரகத்தை சேர்ந்த புதிய கார்களின் விலை மிகவும் அதிகம். எனவேதான் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் கவனம் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் பக்கம் திரும்புகிறது.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

உதாரணத்திற்கு பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை நாம் எடுத்து கொள்ளலாம். புத்தம் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை வாங்குவதற்கு பதில் அதனை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கினால், அதன் புதிய உரிமையாளரால் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் வரை மிச்சம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

அடிக்கடி அப்டேட்

நம்மை போன்றவர்கள் ஒரு முறை ஒரு காரை வாங்கி விட்டால், கிட்டத்தட்ட அந்த காரைதான் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவோம். ஆனால் பிரபலங்கள் அப்படியல்ல. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்கள் எல்லாம் தங்கள் காரை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும் என விரும்புவார்கள். அதாவது புதிது புதிதாக கார்களை மாற்றி கொண்டே இருப்பார்கள்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

அதுவும் சாதாரண கார்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள். லக்ஸரி மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார்கள்தான் அவர்களின் தேர்வாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டதை போல் இந்த ரகங்களை சேர்ந்த கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே ஒவ்வொரு முறையும் அதிக விலை கொடுத்து கார்களை மாற்றி கொண்டிருக்க முடியாது அல்லவா?

எனவே அடிக்கடி காரை மாற்ற வேண்டும் என விரும்புபவர்களுக்கு செகண்ட் ஹேண்ட் கார்கள்தான் நல்ல சாய்ஸாக உள்ளன. பிரபல மனிதர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

நம்பகத்தன்மை

பொதுவாக செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கும்போது அவற்றின் தரம் குறித்த சந்தேகம் அனைவருக்கும் எழும். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. கார்கள் நல்ல கண்டிஷனில் உள்ளதா? என யூஸ்டு கார் டீலர்கள் பலமுறை பரிசோதிக்கின்றனர். உதாரணத்திற்கு பிக் பாய் டாய்ஸ் போன்ற டீலர்கள் தரமான யூஸ்டு கார்களை விற்பனை செய்கின்றனர். எனவே பிரபலங்கள் தயக்கம் இல்லாமல் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகின்றனர்.

Source: Cartoq

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Celebrities Buy Used Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more