திருடினாலும், மழை பெய்தாலும் கவலையில்ல... நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன்?

இந்தியாவில் அனல் மின் நிலையங்களுக்கு மின் உற்பத்திக்காக ரயிலில் கொண்டு செல்லப்படும் நிலக்கரிகள் திறந்த நிலை பெட்டிகளில் தான் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் திருட்டு பயம், மழையில் நினையும் பிரச்சனை இருந்தாலும் இந்த பெட்டியில் ஏன் கொண்டு செல்லப்படுகிறது என்ற காரணத்தை காணலாம்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இந்தியாவிற்கு நிலக்கரி என்பது மிகவும் கட்டாய தேவையாக இருக்கிறது. இந்தியாவிற்கான மின்சாரத்தை தயார் செய்ய நிலக்கரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை நிலக்கரிகள் இங்குள்ள நிலக்கரி சுரங்கங்களிலிருந்தும்,வெளிநாட்டிலிருந்து இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இப்படியாக சுரங்கம் மூலம் எடுக்கப்படும் நிலக்கரிகளும், கப்பகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளும் மின்சார தயாரிப்பிற்காக அனல் மின் நிலையத்திற்கு ரயில்கள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன.இந்தியாவிற்கான 75 சதவீத மின் தேவைகளை அனல் மின் நிலையங்களே உற்பத்தி செய்கின்றன.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

நிலக்கரி எடை அதிகமாக இருப்பதால் அதை விமானங்களில் ஏற்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது என்பது நடக்காத காரியம். அதே நேரத்தில் சாலைகள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகமாகும். தரையில் நிலக்கரியை கொண்டு செல்ல ரயிலே சிறந்த வழி, நாடு விட்டு நாடு செல்ல கப்பலே சிறந்த வழி.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இப்படியாக நிலக்கரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில், இந்திய ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான பணியை செய்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட நிலக்கரிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன .

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இந்த நிலக்கரியை எடுத்துச்செல்வதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் BOXN வகை ரயில் பெட்டிகளை பயன்படுத்துகிறது. சரக்கு ரயிலை பொருத்தவரை 2 விதமான ரயில் பெட்டிகள் இருக்கிறது. ஒன்று முற்றிலும் மூடப்பட்ட ரயில் பெட்டி மற்றொன்று மேல் பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் ரயில் பெட்டி.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இதில் நிலக்கரிகளை ரயில்வே நிர்வாகம் மேல் பகுதி திறந்த நிலையில் இருக்கும் ரயில் பெட்டியில் தான் கொண்டு செல்வார்கள். பலர் இதை ஏன் இப்படி கொண்டு செல்கிறார்கள் என யோசிக்க கூட மாட்டார்கள் ஆனால் இந்த பெட்டியில் கொண்டு செல்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

பொதுவாக முயற்றிலும் அடைக்கப்பட்ட பெட்டிகள் பொருட்களுக்கு பாதுகாப்பானது. திருட்டு பயம் இருக்காது. மழை பெய்தால் எந்த விதமான சோதாரமும் ஆகாது. ஆனால் அதையும் மீறி நிலக்கரியை திறந்த நிலை ரயில் பெட்டியில் தான் கொண்டு செல்வார்கள்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

பலர் இதற்கு நிலக்கரிகளை ரயிலில் லோடு மற்றும் அன்லோடு செய்வது எளிது என்பதால் இதை தேர்வு செய்திருக்கலாம் என கருதுவார்கள். ஆனால் அதுவும் காரணமில்லை. இப்படியாக திறந்த நிலைர யில் பெட்டியில் நிலக்கரியை ஏற்றி செல்வதால் சிக்கலும் இருக்கின்றன.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

ரயில் நிறத்தப்பட்டிருக்கும் போது இந்த நிலக்கரிகளை சில சட்ட விரோத நபர்களால் திருடப்படும் அபாயமும் உள்ளது. மார்கெட்டில் நிலக்கரிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் பலர் இதை திருடி வெளியில் விற்பனை செய்கின்றனர். அதே போல போக்குவரத்தின் போது மழை பெய்தால் நிலக்கரி முழுவதுமாக நனைந்துவிடும்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இதற்கு முக்கியமான காரணம் நிலக்கரி எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய பொருள். இதனால் தீவிபத்துக்களை தவிர்க்கவே இதை திறந்த நிலை ரயில் பெட்டியில் கொண்டு செல்கின்றனர். இப்படியாக பயணிக்கும் போது. இந்த நிலக்கரி தீ பிடித்து விட்டால் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இதுவே முற்றிலுமாக மூடப்பட்ட ரயில் பெட்டியில் கொண்டு சென்றால் தீ பிடித்தது வெளியில் இருக்கும் நபர்களுக்கு தெரிய வரும் போது உள்ளே தீ கெளுந்துவிட்டு எரிந்து பாதி நிலக்கரி நாசம் ஆகியிருக்கும். அதனால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக கண்டுபிடித்து பரவாமல் தடுக்க முடியும்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

அதே நேரம் நிலக்கரி மழையில் நனைவதால் அதன் தரம் எந்த விதத்திலும் கெட்டுப்போகாது. அதனால் மழையில் நனைந்தால் பரவாயில்லை. ஆனால் திருட்டு உண்மையில் ஒரு பிரச்சனை தான். அதை சமாளிக்க ரயிலை முடிந்தவரை நிறுத்தாமல் பயணிக்க வைக்க திட்டமிடுகின்றனர்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

நிலக்கரியை இப்படியாக திறந்தவெளியில் கொண்டு செல்வது ரயில்களில் மட்டுமல்ல கப்பல்களுக்கும் பொருந்தும், கப்பல்களிலும் நிலக்கரியை எதையும் போட்டு மூடாமல் திறந்த நிலையில் தான் கொண்டு வருவார்கள். இதற்கும் தீ விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமான காரணம்.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இந்தியாவை பொருத்தவரை ஒரு ரயில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் நிலக்கரியை சுமந்து செல்லும் ஆண்டு தோறும், சுமார் 1000 மில்லியன் டன் நிலக்கரிகள் ரயில்வே மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த ரயில்வே சிஸ்டம் இந்தியாவில் மின் தேவைக்காக இதை செய்கிறது.

திருடினாலும் , மழை பெய்தாலும் கவலையில்ல . . . நிலக்கரியை மட்டும் திறந்தவெளி ரயிலில்தான் கொண்டு போவாங்க ஏன் தெரியுமா ?

இது பாதிக்கப்பட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? இது போன்ற வேறு ஏதாவது தகவல் உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why coal is are transported in open train know scientific reason behind it
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X