Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா?
அனைத்து கப்பல்களின் கீழ் பகுதியும் ஏன் சிகப்பு நிறத்திலேயே உள்ளது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் உல்லாச கப்பல்களில் பயணம் செய்துள்ளீர்களா? ஆம், என்றால் ஒவ்வொரு உல்லாச கப்பலும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது ஒரு உல்லாச கப்பலுக்கும், மற்றொரு உல்லாச கப்பலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கிட்டத்தட்ட அனைத்து உல்லாச கப்பல்களும் பகிர்ந்து கொள்கின்றன.

சிகப்பு நிறம்தான் அது. ஆம், உல்லாச கப்பல்களை நீங்கள் நன்றாக கவனித்தால், அதன் கீழ் பகுதியில் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதை காணலாம். பெரும்பாலான உல்லாச கப்பல்களின் கீழ் பகுதியில் சிகப்பு நிறம்தான் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். உல்லாச கப்பல்கள் மட்டுமல்லாது, கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களுக்கும் இது பொருந்தும்.

ஏன் கிட்டத்தட்ட அனைத்து கப்பல்களின் கீழ் பகுதியும் சிகப்பு நிறத்தால் பெயிண்ட் செய்யப்படுகிறது? என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு ஏற்கனவே இருந்திருக்கலாம். இன்னும் சிலருக்கு தற்போது அந்த சந்தேகம் எழுந்திருக்கலாம். கப்பல்களின் அடிப்பகுதியில் சிகப்பு நிறம் பயன்படுத்தப்படுவதற்கு பின்னால் உள்ள காரணத்தை இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.

ஆரம்ப கால கட்டங்களில் கப்பல்களை பாதுகாப்பதற்காக சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக சிகப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கப்பல் போக்குவரத்து தொடங்கிய ஆரம்ப கால கட்டங்களில், கப்பல்கள் மரத்தை பயன்படுத்திதான் உருவாக்கப்பட்டு வந்தன.

1800களில்தான் இரும்பு மற்றும் எஃகு மூலம் கட்டமைக்கப்பட்ட கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கு முன்பாக மரம் உண்ணும் புழுக்கள், கொட்டலசுகள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றிடம் இருந்து மரக்கப்பல்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. எனவே கடற்பயணம் மேற்கொள்ளும் மாலுமிகள் தங்கள் கப்பல்களின் உடற்பகுதியில் காப்பர் பெயிண்ட்டை பூசி பாதுகாத்தனர்.

இந்த காப்பர்தான் பெயிண்ட்டில் சிகப்பு வண்ண சாயலை சேர்த்தது. காப்பர் பெயிண்ட் மூலம் பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்படுவதால், கொட்டலசுகள் போன்ற உயிரினங்கள் மற்றும் செடிகள் உள்ளிட்ட தாவரங்கள் கப்பலின் கீழ் பகுதியில் தங்களை இணைத்து கொள்ளாது. உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கப்பலின் உடற்பகுதியில் இணைவதை பாதுகாப்பு அடுக்கின் மூலம் தடுப்பது மிகவும் முக்கியமானது.

இல்லாவிட்டால் அவை கப்பலின் இழுவையை அதிகரித்து விடும். இதன் விளைவாக கப்பல் மெதுவாகதான் செல்லும். அத்துடன் அதிக எரிபொருளும் தேவைப்படும். கொட்டலசுகள் போன்ற உயிரினங்கள் கப்பல்களில் ஒட்டிய நிலையில் தொகுப்புகளாக வாழக்கூடியவை என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

ஆனால் இன்றைய அதிநவீன யுகத்தில் கப்பல்களின் கீழ் பகுதி சிகப்பு நிறமாகதான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எந்த வண்ணத்தில் பெயிண்ட் செய்தாலும், கப்பல்களை பாதுகாக்க தற்போது நிறைய தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. எனினும் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இன்றும் பலர் சிகப்பு நிறத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.