இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

காரின் பின் பக்க விண்டுஷீல்டில் ஏன் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

கார்களின் பின் பக்க விண்டுஷீல்டில் (பின் பக்க கண்ணாடி), கோடுகள் வழங்கப்பட்டிருக்கும். பலரும் இந்த கோடுகளை டிசைன் ஸ்டிக்கர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அவை டிசைன் ஸ்டிக்கர்கள் கிடையாது. பாதுகாப்பு நோக்கத்திற்காகவே இந்த கோடுகள் வழங்கப்படுகின்றன. இந்த கோடுகளுக்கு பின்னால் உள்ள அறிவியலை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

பொதுவாக குளிர் காலங்களில் காரின் பின் பக்க விண்டுஷீல்டில் பனி அதிகமாக படர்ந்திருக்கும். இதனால் உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரர் மூலமாக காரின் பின் பக்கத்தை டிரைவரால் தெளிவாக பார்க்க முடியாது. இவ்வாறான சூழல் ஏற்பட்டால், கார் சாலை விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

எனவே காரின் பின் பக்க விண்டுஷீல்டில் படர்ந்திருக்கும் பனியை அகற்றுவதற்காகதான் இந்த கோடுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் டிரைவர் பின் பக்கத்தை தெளிவாக பார்த்து, காரை ஓட்ட முடியும். உண்மையில் இவை கோடுகள் கிடையாது. இவை சிறிய ஒயர்கள் ஆகும். கார்களில் இருக்கும் இந்த அமைப்பிற்கு டீஃப்ராஸ்டர்கள் (Defrosters) என்று பெயர்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

டீஃபாகர் (Defogger) மற்றும் டீமிஸ்டர் (Demister) என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. காரின் பின் பக்க விண்டுஷீல்டின் மீது படர்ந்திருக்கும் பனி மற்றும் தண்ணீர் துளிகளை அகற்றுவதுதான் இந்த அமைப்பின் வேலை. பின் பக்க விண்டுஷீல்டில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய ஒயர்கள் வெகு விரைவாக பனியை அகற்றி விடும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

காரின் பின் பக்க விண்டுஷீல்டில் இருப்பவை செகண்ட்ரி டீஃப்ராஸ்டர் ஆகும். இந்த டீஃப்ராஸ்டர் அமைப்பை பயன்படுத்துவதற்கு காரின் டேஷ்போர்டில் ஸ்விட்ச் வழங்கப்பட்டிருக்கும். பின் பக்க விண்டுஷீல்டின் மீது பனி அல்லது தண்ணீர் படர்ந்திருக்கும்போது, இந்த ஸ்விட்ச்சை ஆன் செய்ய வேண்டும். அப்போது இந்த ஒயர்களுக்கு மின்சாரம் பாயும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

இதன் மூலமாக ஒயர்கள் வெப்பமடைந்து, பனி மற்றும் தண்ணீர் துளிகள் அகற்றப்படும். காரின் பின் பக்க விண்டுஷீல்டில் கோடுகள் வழங்கப்பட்டிருப்பது ஏன்? என்ற உங்களது சந்தேகம் தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம். ஆனால் முன் பக்க விண்டுஷீல்டில் ஏன் கோடுகள் இல்லை என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வந்திருக்கலாம். அதையும் விளக்கி விடுகிறோம்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

காரின் முன் பக்க விண்டுஷீல்டை சூடாக்கி, பனி மற்றும் தண்ணீர் துளிகளை அகற்ற உதவி செய்யக்கூடிய அமைப்பிற்கு ப்ரைமரி டீஃப்ராஸ்டர் என பெயர் (பின் பக்க விண்டுஷீல்டிற்கு செகண்ட்ரி டீஃப்ராஸ்டர்). காரின் டேஷ்போர்டில், முன் பக்க விண்டுஷீல்டை ஒட்டி சில வெண்ட்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

இதன் மூலமாக வெதுவெதுப்பான காற்று அனுப்பப்பட்டு முன் பக்க விண்டுஷீல்டின் மீது படர்ந்திருக்கும் பனி மற்றும் தண்ணீர் துளிகள் அகற்றப்படும். காரின் முன் பக்க விண்டுஷீல்டின் மீதுள்ள பனி மற்றும் தண்ணீர் துளிகளை அகற்றும் ப்ரைமரி டீஃப்ராஸ்டர் அமைப்பை இயக்குவதற்கான ஸ்விட்ச்சும் டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

சரி, முன் பக்க விண்டுஷீல்டிற்கு மட்டும் ஏன் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் என நீங்கள் நினைக்க கூடும். பின் பிக்க விண்டுஷீல்டை போல், முன் பக்க விண்டுஷீல்டிலும் கோடுகளை வழங்கினால், டிரைவரின் பார்க்கும் திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவேதான் முன் பக்க விண்டுஷீல்டில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தை கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். ஒரு சில கார்களில், பின் பக்க விண்டுஷீல்டில் இருப்பதை போன்று, முன் பக்க விண்டுஷீல்டிலும் கோடுகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் அவை கண்களுக்கு தெரியாது. இதன் மூலமாக டிரைவரின் பார்வை திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம்! காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா?

ஆனால் ஒரு சில கார்களில் மட்டுமே இதுபோன்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஒரு சில முன்னணி கார் நிறுவனங்கள், பனி மற்றும் தண்ணீர் துளிகளை அகற்றும் நேரத்தை குறைப்பதற்காக, கண்ணுக்கு தெரியாத எலெக்ட்ரிக் அமைப்பை முன் பக்க விண்டுஷீல்டில் வழங்குவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Do Cars Have Lines On The Rear Windshield? Detail Explanation. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X