விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சிறிய துளை உள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானத்தின் வால் (Tail) பகுதியை, அதாவது பின் பகுதியை, நீங்கள் உற்று நோக்கினால், சிறிய துளை (Hole) இருப்பதை கவனிக்கலாம். அனைத்து விமானங்களிலும் இந்த துளை இருக்காது என்றாலும் கூட, பெரும்பாலான வர்த்தக விமானங்கள் (Commercial Airplanes), வால் பகுதியில் இந்த துளையை கொண்டிருக்கும்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானத்தின் வால் பகுதியில் நீங்கள் காணும் துளை, ஆக்ஸலரி பவர் யூனிட் (Auxiliary Power Unit) அமைந்துள்ள பகுதியாகும். விமானங்களுக்கு தேவையான சக்தியை உருவாக்க இவை பயன்படுகின்றன. அதற்காக விமானங்கள் முன்னோக்கி செல்வதற்கு பயன்படும் உந்து சக்தியை இவை உருவாக்கும் என்று அர்த்தம் கிடையாது.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

மாறாக விமானங்கள் தரையில் இருக்கும்போது, அவற்றின் எலெக்ட்ரானிக் சிஸ்டம்களை (Electronic Systems) இயக்குவதற்கு ஆக்ஸலரி பவர் யூனிட் பயன்படுத்தப்படுகிறது. அதாவது விமானங்கள் ஓடுபாதையில் இருக்கும்போது, அவற்றின் எலெக்ட்ரானிக் சிஸ்டம்களுக்கு தேவையான சக்தியை உருவாக்குவதுதான் ஆக்ஸலரி பவர் யூனிட்டின் பணி.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானங்கள் தரையில் இருக்கின்ற சமயங்களில், லைட்கள், நேவிகேஷன் கண்ட்ரோல்கள் மற்றும் ஏசி உள்பட பல்வேறு எலெக்ட்ரானிக் சிஸ்டம்களுக்கு தேவையான சக்தியை உருவாக்குவதற்கு, ஆக்ஸலரி பவர் யூனிட் 'ஆக்டிவேட்' செய்யப்படும். ஆக்ஸலரி பவர் யூனிட்கள், விமானங்களுக்கு முழுமையான சக்தியை வழங்க கூடியவை அல்ல.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானத்தின் வழக்கமான இன்ஜின்கள் 'ஆன்' செய்யப்பட்டவுடன், ஆக்ஸலரி பவர் யூனிட் முடக்கப்படும். அதாவது விமானத்தின் இன்ஜின்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, ஆக்ஸலரி பவர் யூனிட் செயல்படாது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகுதான், ஆக்ஸலரி பவர் யூனிட் மீண்டும் 'ஆக்டிவேட்' செய்யப்படும்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

ஆக்ஸலரி பவர் யூனிட்டை, விமானங்களில் உள்ள மற்ற இன்ஜின்களை போன்ற ஒரு சிறிய இன்ஜின் என்று நீங்கள் கருதலாம். சக்தியை உருவாக்குவதற்கு இது எரிபொருளை எரிக்கிறது. பின்னர் இந்த சக்தி விமானத்தின் எலெக்ட்ரானிக் சிஸ்டம்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலமாக விமானத்தின் எலெக்ட்ரானிக் சிஸ்டம்கள் இயங்குகின்றன.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானம் தரையில் இருக்கும்போது, விமானத்தின் எலெக்ட்ரானிக் சிஸ்டம்களுக்கு சக்தியை வழங்குவதுதான் ஆக்ஸலரி பவர் யூனிட்டின் பொறுப்பு. மாறாக நாங்கள் ஏற்கனவே கூறியபடி, விமானங்கள் முன்னோக்கி செல்வதற்கு தேவையான முழுமையான சக்தியை இது வழங்காது. விமானங்கள் தங்களது வழக்கமான மெயின் இன்ஜின்கள் மூலமாகவே பறக்கின்றன.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

ஆனால் விமானங்களின் மெயின் இன்ஜின்களுக்கு தேவையான தொடக்க சக்தியை, அதாவது ஸ்டார்ட்டிங் பவரை, ஆக்ஸலரி பவர் யூனிட்கள்தான் வழங்குகின்றன. அதாவது விமானத்தின் மெயின் இன்ஜின்களை 'ஸ்டார்ட்' செய்வதற்கு ஆக்ஸலரி பவர் யூனிட்கள் பயன்படுகின்றன. ஆக்ஸலரி பவர் யூனிட்களை விமானங்களுக்கான 'கூடுதல் ஆற்றல் ஆதாரம்' என்று சொல்லலாம்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

ஆக்ஸலரி பவர் யூனிட்கள் இருப்பதால்தான், விமானங்கள் தரையில் இருக்கும்போது, மெயின் இன்ஜின்களை 'ஆன்' செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இதன் மூலமாக குறிப்பிடத்தக்க அளவில் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. எனவே விமான நிறுவனங்களுக்கு செலவை குறைத்து, லாபத்தை அளிக்க கூடிய ஒன்றாகவும் ஆக்ஸலரி பவர் யூனிட்கள் இருக்கின்றன.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி, ஆக்ஸலரி பவர் யூனிட்கள் எனப்படுபவை சிறிய டர்பைன் இன்ஜின்கள் ஆகும். அதற்காக விமானங்களில் உள்ள மெயின் இன்ஜின்களுடன் இவற்றை குழப்பி கொள்ள கூடாது. ஆக்ஸலரி பவர் யூனிட்கள் விமானங்களின் பின் பகுதியில் இருப்பதால்தான், அங்கே நாம் சிறிய எக்ஸாஸ்ட்டை (Exhaust) பார்க்கிறோம். அவற்றை ஆக்ஸலரி பவர் யூனிட் எக்ஸாஸ்ட் என்கின்றனர்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா? அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

ஆனால் ஆக்ஸலரி பவர் யூனிட்கள் விமானங்களுக்கு மிகவும் புதியவை கிடையாது. அவை நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கின்றன. விமானங்களின் வால் பகுதியில் ஏன் துளை உள்ளது? விமானங்களுக்கு ஆக்ஸலரி பவர் யூனிட்கள் எவ்வளவு முக்கியம்? என்பது போன்ற உங்கள் சந்தேகங்கள் தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why do some airplanes have a small hole in the tail we explain
Story first published: Thursday, June 30, 2022, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X