தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

கார் உள்பட மற்ற வாகனங்களின் சக்கரங்கள் இரப்பரால் ஆன டயரால் மூடப்பட்டிருக்க, இரயிலின் சக்கரங்கள் மட்டும் ஏன் முற்றிலுமாக இரும்பினால் ஆனவைகளாக உள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

நம் வாழும் புவியில் பல்வேறு விதமான நிலப்பரப்புகள் உள்ளன. இவை அனைத்திலும் நாம் ஒரே விதமான வாகனத்தை பயன்படுத்துவது என்பது மிகவும் கடினம். இதனால் ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஏற்ப வாகனங்களும், அவற்றின் சக்கரங்கள் & டயர்களும் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

ஆனால் பல்வேறு நாடுகளில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுள் ஒன்று இரயில். கார் உள்பட மற்ற வாகனங்கள் அனைத்தின் சக்கரங்களும் இரப்பரினால் உருவாக்கப்பட்ட டயர்களால் சூழப்பட்டிருக்கும். ஆனால் தொலைத்தூர பயணங்களுக்கான எக்ஸ்பிரஸ் இரயில்களிலும் சரி, நகரத்திற்குள் இயங்கும் மெட்ரோ இரயில்களிலும் சரி சக்கரங்கள் முழுவதுமாக இரும்பினால் தயாரிக்கப்பட்டவைகளாக இருக்கும்.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

இரயில் சக்கரங்கள் முற்றிலுமாக இரும்பினால் தயாரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானதாக கூற வேண்டுமென்றால், தண்டவாளத்துடனான உராய்வு. எந்தவொரு வாகனத்திலும் எத்தகைய சக்கரங்கள் & அவற்றிற்கான டயர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதை உராய்வு தான் தீர்மானிக்கின்றன.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

வாகனங்களின் உராய்வு என்பது இயங்கும் பாதையில் வாகனம் எந்த அளவிற்கு என்ஜினின் இயக்க ஆற்றலை உபயோகித்து இயங்கிறது என்பதை பொறுத்ததாகும். இது ஒரு விசை என கூட சொல்லலாம். அதாவது ஒரு பாதையில் வாகனம் அதிக இயக்க ஆற்றலை உபயோகித்த போதிலும், குறைந்த தூரம் மட்டுமே இயங்குகிறது என்றால், அங்கு உராய்வு ஆனது எதிர்வினை ஆற்றுகிறது என்பது பொருளாகும்.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

அதுவே குறைந்த இயக்க ஆற்றல் தான் செலவாகிறது என்றாலும், வாகனம் நீண்ட தூரத்திற்கு செல்கிறது என்றால் அங்கு வாகனத்தின் சக்கரத்திற்கும், இயங்கும் பாதைக்கும் இடையேயான உராய்வு விசை அதிகமாக கிடைக்கிறது என்பதாகும். இரயில் தண்டவாளங்கள் இரும்பினால் செய்யப்பட்டவை என்பதால், உராய்வு விசை அதிகமாக கிடைக்க இரயில் சக்கரங்களும் இரும்பினால் பொருத்தப்படுகின்றன.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

இரண்டாவது முக்கிய காரணம், வேகம். எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்? மற்றும் அதே அதிகப்பட்ச வேகத்தில் எவ்வளவு தூரத்திற்கு செல்ல வேண்டும் என்பதை பொறுத்து எந்தவொரு வாகனத்திற்கும் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இரயில்களும் இந்த காரணத்தினாலேயே இரும்பு சக்கரங்களை பெறுகின்றன.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

ஏனெனில் இரயிலின் ஒவ்வொரு பெட்டியும் பல டன் எடையில் உருவாக்கப்படுபவை. அதை தாண்டி, அவற்றில் மேலும் சில டன்களுக்கு பொருட்களோ அல்லது பயணிகளோ ஏற்றப்படுவர். இவ்வளவையும் தாங்கி கொண்டு மணிக்கு 100-150kmph வேகத்தில் பயணிப்பது மட்டுமின்றி, நீண்ட நேரத்திற்கு அதே அதிவேகத்தில் செல்ல வேண்டும்.இதற்கு நிச்சயமாக இரும்பு சக்கரங்களே ஏற்றவை.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

மூன்றாவது காரணம், காலநிலை. நீண்ட தூரம் பயணிக்கும் ஒரு இரயில் ஆனது குளிர் மிகுந்த பகுதியையும் கடந்ததாக வேண்டும், அதேநேரம் வெப்பம் மிகுந்த பகுதியிலும் பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும். இவை எல்லாவற்றையும் விட, தண்டவாளம், இரயில் சக்கரங்களுக்கு இடையே தீப்பொறி ஏற்படுவதையும் பார்த்திருப்பீர்கள்.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

பயணத்தின்போது மிகவும் சில சமயங்களில் மட்டுமே ஏற்படக்கூடிய இந்த தீப்பொறிகளை தவிர்க்கும் விதமாகவே தண்டவாளமும், இரயில் சக்கரங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும், சில நேரங்களில் இந்த தீப்பொறிகளை தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு எல்லா விதமான சூழலையும் இரப்பரினால் தாங்க இயலாது.

தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

இவற்றுடன், ஆயுட்காலம் கருத்தில் கொண்டும் இரயில்களில் முழுவதுமாக இரும்பு சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. ஏனெனில் இரயில்களில் சக்கரங்களை அவ்வப்போது கழற்றி மாற்றுவது என்பது நீங்கள் நினைப்பதை காட்டிலும் கடினமான வேலையாகும். ஆதலால்தான், மேற்கூறப்பட்ட சோதனைகளை கண்ட பின்பும் நீடித்து உழைக்கும் வகையில் வலிமையான இரும்பினால் இரயில் சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why do trains need metal wheels
Story first published: Wednesday, August 10, 2022, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X