அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

வெளிநாடுகளில் குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார், இந்தியாவில் நூற்றுக்கணக்கில் கூட விற்பனையாவதில்லை இது ஏன் தெரியுமா? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம்.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இந்தியாவில் கார்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மக்கள் பலர் அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ற கார்களை வாங்கத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் குறைந்த விலை கார்களும் இருக்கிறது. கோடிக்கணக்கிலான விலை உள்ள கார்களும் இருக்கிறது. பொதுவாக நாம் எல்லோருக்கும் குறைந்த விலை கார்கள் அதிகம் விற்பனையாகும். அதிக விலை கொண்ட வாகனங்கள் குறைவாக விற்பனையாகும் எனக் கருதுவோம்.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

ஆனால் உண்மை என்ன? இந்தியாவில் மிகக் குறைவாக விற்பனையாகும் கார் வெளிநாடுகளில் நம்பர் 1 விற்பனையில் இருக்கிறது. இந்தியாவில் அந்த காரை வாங்க மக்கள் ஆர்வமே காட்டவில்லை எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

ஆம் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் செடான் கார் என்றால் அது மாருதி டிசையர் கார் தான். ஒவ்வொரு மாதமும் சுமார் 10 ஆயிரம் கார்கள் வரை விற்பனையாகிறது. ஆனால் அமெரிக்காவில் நம்பர் 1 விற்பனையில் இருக்கும் செடான் கார் என்றால் அது டொயோட்டா கேம்ரி கார். இந்த கார் இந்தியாவிலும் விற்பனையாகிறது. ஆனால் மாதம் 100 கார்கள் விற்பனையாவது கூட கடினம் தான்.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

ஏன் இந்த வித்தியாசம் அமெரிக்க மக்கள் பெரிதும் விரும்பும் காரை, இந்திய மக்கள் ஏன் வாங்க ஆர்வம் கட்டுவதில்லை. அமெரிக்க மக்களின் டேஸ்டும், இந்திய மக்களிடம் டேஸ்டும் அவ்வளவு வித்தியாகப்படுகிறதா என்றால் இல்லை. இந்த விற்பனை மாற்றத்திற்கு முக்கியமான காரணம் அதை விலை

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் டொயோட்டா கேம்ரி கார் ஒரு ஹைபிரிட் காராக விற்பனையாகிறது. இந்த கார் அமெரிக்கப் பண மதிப்பில் 27 ஆயிரம் டாலர் என்ற விலையில் விற்பனையாகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கார் ரூ22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. அமெரிக்க மக்களின் வருமானம், பொருளாதாரத்தை ஒப்பிடும் போது இது மக்கள் காருக்காக செலவிடும் தொகையில் சராசரி விலையில் தான் இருக்கிறது. சொல்லப்போனால் அமெரிக்க மக்கள் இந்த கார் அதிகம் ஒன்று விலையில்லை என்று கூடச் சொல்லுவார்கள்.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

ஆனால் இதே கார் இந்தியாவிற்கு வரும் போது இதன் விலை ரூ50.53 லட்சமாக மாறுகிறது. அதாவது அங்கிருக்கும் விலையைவிட இந்தியாவில் 2.5 மடங்கு விலை அதிகமாகிறது. ஏன் இந்த விலை உயர்வு என்றால் எல்லாம் வரி தான். அதைப் பற்றி மேலும் விரிவாகக் காணலாம்.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்தாலும் கேம்ரி காரை அந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கவில்லை. உதிரிப்பாகங்களை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தி இந்தியாவில் அந்த காரை கட்டமைத்து விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்தியாவில் 3 விதமா கார்கள் தயாராகிறது. இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட கார், உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்கப்பட்ட கார், முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட காரை இறக்குமதி செய்து விற்பனை செய்து.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இதில் டொயோட்டா நிறுவனம் கேம்ரி காரின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் கட்டமைத்து விற்பனை செய்கிறது. இப்பொழுது கேம்ரி காரின் விலை எப்படி அதிகமாகிறது எனக் காணலாம். டொயோட்டா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ20 லட்சத்திற்கு ஒரு கேம்ரி காரின் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்கிறது என வைத்துக்கொள்வோம்.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

மத்திய அரசு அதற்கு 15 சதவீத இறக்குமதி வரியை விதிக்கிறது. அப்பொழுது அதன் விலை 23 லட்சமாகிறது. மேலும் அந்த பாகங்களுக்கு ஐஜிஎஸ்டியாக 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. இன்னும் கார் உற்பத்தியாகவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்தாக கார் ஆலையில் கட்டமைக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த உதிரிப் பாகங்களை வைத்து கார் முழுமையாகத் தாயாராகிறது.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இப்படியாக கார் தயாராகி ஆலையிலிருந்து வெளியே வரும் போது அரசு அடுத்ததாக 2 விதமான வரிகளை விதிக்கிறது. இந்தியாவில் கார்களுக்கான ஜிஎஸ்டியை பொருத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 1200 சிசி மற்றும் 4 மீட்டர் நீளத்திற்குக் குறைவான பெட்ரோல் இன்ஜின் வாகனங்களுக்கு 18 சதவீத வரி மற்றும் 1 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. 1500 சிசிக்கும் குறைவான 4 மீட்டர் நீளத்திற்குக் குறைவான டீசல் இன்ஜின் கார்களுக்கு 18 சதவீத வரி 3 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

1500 சிசிக்கு அதிகமான கார்களுக்கு 28 சதவீத வரி மற்றும் 17 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. எஸ்யூவி கார்களை பொருத்தவரை 1500 சிசி இன்ஜினிற்கு அதிகமான கார்களுக்கு 28 சதவீத வரி 22 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. அதன்படி கேம்ரி கார் 1500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறனைக் கொண்டுள்ளதால் 28 சதவீத வரி 17 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இதெல்லாம் சேர்ந்து கேம்ரி கார் ஆலையிலிருந்து வெளியே வரும்போதே அதன் விலை ரூ38.8 என அந்த காரின் விலை வந்துவிடுகிறது. அதன் அடுத்த வரியாக இந்த காரின் மீது சாலை வரி விதிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். அதன் படி தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் உள்ள கார்களுக்கு 13.75 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இது போக இந்த பணத்திற்கான டிசிஎஸ் 1 சதவீதம், இந்த காருக்கான, இன்சூரன்ஸ் 2 லட்சம், எல்லாம் சேர்த்து இந்த காரின் விலை 45.3 லட்சமாக மாறுகிறது. அதனால் வெறும் ரூ20 லட்சத்திற்கு இந்தியாவில் உதிரிப்பாகங்களாக வரும் கார். விற்பனையாகி வாடிக்கையாளரின் கைக்குச் செல்லும் போது 45.3 லட்சம் என்ற விலையில் செல்கிறது.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இது டொயோட்டா கேம்ரி காருக்கு மட்டுமல்ல ஸ்கோடா சூப்பர்ப் காரும் இப்படியாகத் தான் உதிரிப் பாகங்களாக வந்து இந்தியாவில் தயாராகிறது. இதுவும் வாடிக்கையாளர் கைக்குச் செல்லும் போது அதன் விலை 120 சதவீதம் அதிகமாகிவிடுகிறது.

அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?

இதாவது பராவாயில்லை, முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட ஒரு காரை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய அதற்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதன் பின்னர் அதற்கு

ஜிஎஸ்டி, செஸ், சாலை வரியும் அடங்கும் அப்படியாக இறக்குமதியாகும் கார்கள் இன்னும் விலை அதிகமாகும். இப்பொழுது தெரிகிறதா இந்தியாவில் ரூ1 கோடிக்கும் அதிகமான விலையில் ஏன் கார்கள் விற்பனையாகிறது என்று?

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why foreign cars are expensive in India know full details
Story first published: Thursday, June 23, 2022, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X