இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை விளக்கும் வீடியோக்களின் தொகுப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

சமீபகாலமாக போலீஸாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முறைகேடுகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம், காவல்துறையினர் எந்த பேச்சுவார்த்தையிலும் இடம் இல்லாத அளிவிற்கு இ-செல்லான் முறைக்கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், போலீஸார் தங்களுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் கேமிராக்கள் மூலம் போக்குவரத்து விதமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவெண்ணை புகைப்படம் எடுத்து அவர்களது விலாசத்துக்கே ரசீது அனுப்பி வருகின்றனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

அதேபோல, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை சம்பந்தப்பட்ட இடத்தில் மடக்கிப் பிடித்து அப்போதே அவர்களுக்கு அபாரதத் தொகைக்கான இ-ரசீது வழங்குகின்றனர். இதைப்பெறும் வாகன ஓட்டிகள் அந்த ரசீதைக் கொண்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் அபராதத்தொகையை செலுத்தலாம்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தகவல்கள், வேகன் ஆப் மூலம் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பகிரப்படும். அதன்படி, நீங்கள் எத்தனை முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளீர்களோ, அதற்கேற்ப இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களின் பிரிமீயம் தொகையை இரட்டிப்பாக்கி உங்களிடம் வசூலிக்கும். இதுபோன்று, பல்வேறு நடவடிக்கைகள் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், வாகன ஓட்டி மற்றும் போலீஸாருக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் குறைந்தபாடில்லை.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

இந்த நிலையில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்பதனை விளக்கும் வகையில் வீடியோக்கள் தற்போது யுடியூபில் வளம் வருகிறது. இந்த வீடியோக்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், ஏன் இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்கிறார்கள் என்று.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

ஓர் நிறுவனம் தனது தயாரிப்பு நல்ல முறையில் விற்பனையாக வேண்டும் என்பதுக்காக, அவர்களின் ஊழியர்களுக்கு டார்கெட் வைத்து வேலை செய்ய வற்புறுத்துவார்கள், அதே பாணியில் தான், இந்தியாவிலும் போலீஸுக்கு டார்கெட் கொடுத்து இத்தனை நாளுக்கு குறைந்தளவிலான வழக்குகளைப் பதிய வேண்டும் என அவர்களின் உயரதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

நம்ம ஊரு போலீஸ்காரங்க சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவாங்க, இதுல உயரிதிகாரிகள் கொடுத்த இந்த உத்தரவு, அவர்களுக்கு பச்சைக் கொடிக் காட்டியதைப்போல வசூல் வேட்டையில் ஈடுபட ஆரம்பிக்க வைத்தது.

இதன்படி, சாலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் ரக வாகனம் சென்றால் போதும், உடனே அவரை மடக்கிப்பிடித்து அவன் தலையில் ஒரு அபராதத் தொகைக்கான பில்லை கட்டிட வேண்டும். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், நாள்தோறும் பல ஏழை அப்பாவிகள் சிக்கி துயருற்று வருகின்றனர். இதனால், அவர்களின் ஒரு நாள் பிழைப்பில் வீணாகவும் அவளத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

இதுபோன்ற சில காரணங்களாலும், போலீஸாரின் அநாகரீகமான செயலாலும் சில வாகன ஓட்டிகள் மன உலைச்சலைடந்து தற்கொலைச் செய்யும் அளிவிற்கு தள்ளப்படுகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இவ்வாறு, சூழல் இக்கட்டான நிலையில் இருக்க, வாகன ஓட்டிகள் தங்களிடம் முறைகேடில் ஈடுபடும் போலீஸாரின் விடியோக்களை பொதுவெளியில் காண்பிக்கும்படி, யுடியூப்பில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அவ்வாறு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போலீஸாரின் முறைகேடுகள் இந்த வீடியோ மூலம் அம்பலமாகி உள்ளன. இதுகுறித்த வீடியோக்களின் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்,

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் ஃபேக்டரி இணைப்பு மின் விளக்குக்கு அபராதம்:

டிவிஎஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் தான் இந்த புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. காரணம் இதன் ஹெட்லைட்டுகள்.

டிவிஎஸ் நிறுவனத்தால் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல் தான் அப்பாச்சி ஆர்ஆர்310 மாடல் பைக். இது ஸ்போர்ட்ஸ் ரக தோற்றத்தில் முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிசான இந்த பைக் நவீன தொழில்நுட்பத்துக்கு எந்த குறைபாடும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

அதன்படி, அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் இந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டியை போலீஸார் மடக்கிப்பிடித்து, வாகனத்தில் சட்டத்துக்கு புரம்பாக ஹெட்லைட் பொருத்தப்பட்டிருப்பதாக கூறி செல்லான் வழங்கியுள்ளனர்.

ஆனால், அந்த மின் விளக்கானது, டிவிஎஸ் நிறுவனத்தால் பொருத்தப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லைட். இதுகுறித்து, காவல் அதிகாரியிடம் அந்த வாலிபர் எடுத்துக் கூறியும் அவர் அதைக் கண்டுக்கொள்ளாமல் பில் போடுவதிலேயே நோக்கமாக செயல்பட்டுள்ளார். இதனைத் தனது ஹெல்மெட்டில் இருந்த கேமிரா மூலம் பதிவுச் செய்த அந்த வாலிபர் தனது பக்க நியாயத்தைக் வெளிக்காட்டும் வகையில் யுடியூபில் பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற இச்சம்பவம் ஆர்டிஓ அதிகாரிகளையே அலறவிடும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓர் நிறுவனம் தனது புதிய தயாரிப்பை விற்பனைக்கு களமிறக்குவதற்கு முன்பு பல்வேறு தர ஆய்வுக்கு அனுப்பி வைத்த பின்னரே விற்பனையைத் தொடங்கும். அதன்படி, முன்னதாக ஆர்டிஓ-க்கள் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மாடல் பைக்கின் மின்விளக்கு தற்போது சட்டவிரோதமாக மாறியுள்ளது. இது அந்த காவல் அதிகாரியின் அறியாமையா? அல்லது ஆர்டிஓ-க்களின் அலட்சியமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

போலீஸ் வாகனத்தைக் கடந்து சென்றதுக்காக விரட்டிப்பிடித்த காவலர்கள்:

இந்த வீடியோக் காட்சியானது, போலீஸார்கள் எந்த அளவிற்கு அராஜகம் செய்வார்கள் என்பதை விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது விலையுயர்ந்த பைக்குகளில் அன்றைய ஜாலி டிரைவுக்காக சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்றுக்கொண்டிருந்த சாலையில், திடீரென போலீஸ் வாகனம் ஒன்று குறுக்கிட்டு திரும்பியது. போலீஸாரின் இந்த செயல், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனை மேலேக் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்த்தாலே தெரிந்துக்கொள்ளலாம்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

அவ்வாறு போலீஸ் வாகனம் செயல்பட, சிறிது தூரம் சென்றப்பிறகு அதே போலீஸ் வாகனம் பின் தொடர்ந்து வந்து, இரு சக்கர வாகன ஓட்டியை மடக்கி மிரட்டும் தோணியில் பேசுகின்றனர். அதைத்தொடர்ந்து, ஸ்டேஷனுக்கு வா என ஒருமையில் அழைக்கும் அந்த போலீஸார், அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். ஆனால், வாகன ஓட்டிகள் தங்கள்மீது தவறு இல்லையென்றும், எங்களது ஹெல்மெட்டில் உள்ள கேமிராவில் வீடியோ ஆதாரம் உள்ளது என்றும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.

முன்புவரை கடுமையாக வாதம் செய்த போலீஸார், வீடியோ ஆதாரம் இருப்பதைக் கேட்டவுன் பெட்டிப் பாம்பைப் போல் அடங்கி, மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பு எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இரு வாகன ஓட்டிகளும் மன்னிப்புக் கேட்டுவிட்டு புறப்படுகின்றனர்.

இந்த வீடியோவைப் பொருத்தவரை, போலீஸார் தப்பினை மறைக்க எப்படி வேணாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த இளைஞர்கள் வீடியோக் காட்சிகளைப் யுடியூபில் பதிவிட்டுள்ளனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி இருந்தால் சட்ட விரோதம்:

கேரளாவில் நடைபெற்ற இச்சம்பவம் பலரை ஆச்சரியத்தில் விழ வைக்கலாம். ஏனென்றால் கேடிஎம் பைக்கை ஓட்டி வந்த இளைஞரை, அம்மாநில போலீஸார் வாகன தணிக்கையின்போது மடக்குகின்றனர். அப்போது, அந்த வாகன ஓட்டி அணிந்து வந்த ஹெல்மெட்டில் கேமிரா இருப்பதை அறிந்த காவல் அதிகாரி, அந்த கேமிராவை ஆஃப் செய் என பல முறை கூறுகிறார். மேலும், ஹெல்மெட்டைப் பறிமுதல் செய்த போலீஸார் அவரிடம், பணம் கேட்டு பேரத்தில் ஈடுபடுகின்றனர். இவையனைத்தையும், பதிவு செய்த அந்த வாலிபர் தற்போது அந்த காட்சிகளை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

இறுதியாக அந்த போலீஸார், பைக்கில் கண்ணாடி இல்லையெனக் கூறி அந்த வாகன ஓட்டியிடம் இருந்துப் பணத்தைப் பெற்று அனுப்பி வைத்துள்ளனர்.

வாகன ஓட்டியின் ஹெல்மெட்டில் கேமிராப் பொருத்தப்பட்டிருப்பதைப் பற்றி துளியும் கவலைப்படாத அந்த காவலர்கள் முறைகேட்டில் ஈடுபடும் காட்சிகள், காட்டுத் தீயைப் போல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

வாகனம் ஓட்டுவதுக்கான பாதுகாப்பான உடையணிந்தால் சட்ட விரோதம்:

வாகன ஓட்டிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதமாக ஹெல்மெட், கையுரைகள் உள்ளிட்டவற்றை அணிந்துக்கொண்டு வாகனத்தை இயக்குகின்றனர். அதேபோல, அதிவேக இரு சக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்கள், தங்களை விபத்தில் இருந்து சிறு கீரல் கூட ஏற்படாத அளவிற்கு பாதுகாப்பான உடைகளை அணிந்துச் செல்கின்றனர். இதுபோன்ற உடையை அணிந்து, ஓர் இளைஞர் ஹோண்டாவின் நவி பைக்கை ஓட்டிச் சென்றபோது, அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகக் கூறி அவரைப் போலீஸார் மடக்கி விசாரனைச் செய்துள்ளனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இரு நண்பர்களுடன், ஹைதராபாத்துக்கு புறப்பட்டுள்ளார். அவ்வாறு, அவர் நவி பைக்கிலும், அவரது நண்பர்களில் ஒருவர் ஹீரோ பேஷன் பைக்கிலும், மற்றொருவர் ராயல் என்பீல்டு பைக்கிலும் சென்றுள்ளனர். அப்போது ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகன ஓட்டிகளை மடக்கிய போலீஸார், அவர்கள் மூவரும் ரேஸில் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

ஆனால், அவர்கள் ரேஸ் செய்யவில்லை என பல முறை அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதை மறுத்த போலீஸார்கள், நீங்கள் ரேஸ் செய்பவர்களைப் போன்று உடையணிந்து உள்ளீர்கள். ஆகையால், நீங்கள் ரேஸ் செய்பவர்கள் தான் என கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த இளைஞர்கள், ஹோண்டா நவியை வைத்து எப்படி ராயல் என்பீல்டு பைக்குடன் ரேஸ் செய்ய முடியும் என விளக்கி கூறியுள்ளனர்.

இளைஞர்களின் இந்த விளக்கத்துக்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், நீங்கள் ரேஸ் உடையை அணிந்துள்ளீர்கள், நிச்சயம் நீங்கள் செய்பவர்கள் தான் என ஆணித்தரமாக கூறியுள்ளனர். பின்னர், வாகன ஓட்டிகளின் அடுத்தடுத்த விளக்கத்தினால், போலீஸார் அவர்களை விட்டுச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோவைப் தனது யுடியூப் பக்கத்தில் பதிவிட்ட அந்த இளைஞர், ஹோண்டா நவி பைக்கை வைத்து எவ்வாறு ரேஸ் செய்ய இயலும், என கேள்வியெழுப்பி, இதுபோன்று உங்களுக்கு நேர்ந்துள்ளதா? என கேட்டு வைரல் செய்துள்ளனர்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

55 கிமீ வேகத்தில் சென்றவருக்கு ஓவர் ஸ்பீடு அபராதம்:

இவற்றிற்கெல்லாம் மேலாக கேரள மாநில போலீஸார், 55 கிமீ வேகத்தில் சென்றதுக்காக வாகன ஓட்டி ஒருவரை மடக்கிப்பிடித்து காவல்நிலையம் அழைத்துச் செல்லும் காட்சி அட்டகாசத்தின் உச்சகட்டமாக உள்ளது.

வளைவு நெலிவான அந்த மலைப் பாதையில், வாகன ஓட்டி மிகவும் குறைந்த வேகமான 40 முதல் 50 கிமீ வேகத்தில் தனது பைக்கில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த போலீஸ் வாகனம் அவரை இடைமறைத்து காவல்நிலையம் அழைத்துச் செல்கிறார்.

இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஸை வெறுக்க காரணம் இதுதான்: வீடியோக்களின் தொகுப்பு!

வாகன ஓட்டி எதற்காக என்னை அழைத்துச் செல்கிறீர்கள் என்ற கேள்விக்குக் கூட பதிலளிக்காமல் அவரை கட்டாயமாக அவரது பைக்கிலேயே அழைத்துச் செல்கிறார். பின்னர், காவல்நிலையம் சென்று அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாகக்கூறி அவர்மீது வழக்குபதிய முற்பட்டுள்ளனர்.

ஆனால், இதனை மறுத்த அந்த வாகன ஓட்டி, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் கேமிராவில் பதிவாகியிருந்த காட்சியை போலிஸாரிடம் காட்டிவிட்டு வெளியேறியுள்ளார்.

மேற்கூறியதைப் போன்று பல்வேறு சம்பவங்களுக்கு வாகன ஓட்டிகளிடமே தீர்வு இருந்ததால், தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். ஆகையால், ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதுபோன்ற சட்டப்பிரச்னைகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Indian Two Wheel Riders Hate Police-Videos. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X