உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை.. ஏன் தெரியுமா?

இந்தியா முழுவதும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றும் போலீசாரின் வாகனங்களில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படுவதில்லை ஏன் தெரியுமா? இது குறித்த தெளிவான முழு விளக்கத்தைக் கீழே காணலாம் வாருங்கள்

இந்தியா முழுவதும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றும் போலீசாரின் வாகனங்களில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படுவதில்லை ஏன் தெரியுமா? இது குறித்த தெளிவான முழு விளக்கத்தைக் கீழே காணலாம் வாருங்கள்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

நாம் இன்று பல வாகனங்களைப் பார்த்திருப்போம். இதில் சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும், விவிஐபிகளான அரசியல் தலைவர்கள், பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பயன்படுத்தும் கார்களுக்கும் இருக்கும் வித்தியாசம் பாதுகாப்பு தான். இன்று அரசியல் தலைவர்கள் பலருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் செல்லும் வாகனம் பாதுகாப்பான வாகனமான இருக்க வேண்டும் அவர்களது பாதுகாப்புக் குழு கருதுகிறது.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

இதனால் அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பிற்காக அவர்களது வாகனங்களில் பொருத்தப்படும் கண்ணாடிகள் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் அதனால் அவர்களை யாராவது தூரத்திலிருந்து துப்பாக்கியால் சுட முயன்றால் அந்த குண்டு காருக்குள் இருப்பவரைத் தாக்காத வண்ணம் பாதுகாக்கும்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

இப்படியான குண்டு துளைக்கான வகையிலான கண்ணாடிகள், அரசியல் தலைவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், உயர் அரசு பதவியில் இருப்பவர்கள். நீதிபதிகள் இப்படிப்பட்டவர்களின் வாகனங்களில் காண முடியும். ஆனால் இவர்களுக்கு இருக்கும் அதே ஆபத்து போலீசார்களுக்கும் இருக்கிறது. போலீசார் பிரச்சனை மற்றும் அசாதாரண சூழ்நிலையில் தான் அதிகம் பணியாற்றுவார்கள்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

இதனால் போலீசாரின் வாகனங்கள் எல்லாம் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இப்படியாகத் தாக்குதலில் போலீசாருக்கு சேதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் வானகங்களில் உள்ள ஜன்னல் மற்றும் முன்பின்பக்க கண்ணாடிகளைக் கவர் செய்யும் வகையில் இரும்பு கம்பிகள் அடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த வாகனங்களில் உள்ள கண்ணாடிகள் சாதாரண கண்ணாடிகளாகத் தான் இருக்கும்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் உயிர் தான் இருக்கிறது. போலீஸ் காரர்களுக்கும் உயிர் தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இருக்கும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் ஏன் போலீஸ் வாகனங்களில் பொருத்தப்படுவதில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இதனால் இந்த பதிவில் அதை விளக்கும் வகையில் அது குறித்த தகவல்களை வழங்கவுள்ளோம்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

போலீசாரின் வாகனங்களுக்கு மட்டும் ஏன் குண்டு துளைக்காத கண்ணாடிகள் வழங்கப்படுவதில்லை எனப் பார்க்கும் முன்பு இந்த குண்டு துளைக்காத கண்ணாடிகள் எப்படிச் செய்யப்படுகிறது. அந்த கண்ணாடிக்கும் சாதாரண கண்ணாடிக்கும் என்ன வித்தியாசம் முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

பொதுவாக வாகனங்களில் உள்ள கண்ணாடிகள் எளிதாக உடையும் படியான கண்ணாடிகளைக் கொண்டு செய்யப்படுவதில்லை. பாலி கார்பனேட் எனப்படும் மெட்டீரியல் கொண்டு செய்யப்படுகிறது. இதனால் கண்ணாடியில் கனமான பொருள் வேகமாகப் பட்டால் கண்ணாடி சிதறிப்போகாமல் நொறுங்கிப் போய் அப்படி இருக்கும். இதனால் காருக்குள் இருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

இதுவே குண்டு துளைக்காத கண்ணாடி என்றால் அதில் இன்னும் அதிகமாகப் பாலி கார்பனேட் லேயர் சேர்க்கப்பட்டிருக்கும். அதிகமாகப் பாலி கார்பனேட் சேர்க்கப்பட்டால் எளிதாக இந்த கண்ணாடியை உடைக்க முடியாது. சாதாரண கார் கண்ணாடியில் துப்பாக்கியிலிருந்து வரும் வேகமான குண்டு பட்டால் அந்த வேகம் கண்ணாடியில் பட்டதும் கண்ணாடியின் குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்டு ஒரு சக்தி கண்ணாடி முழுவதும் பரவி அதை விரித்துக்கொண்டே செல்லும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து குண்டு கண்ணாடியையும் தாண்டி செல்லும்,

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

ஆனால் குண்டு துளைக்காத கண்ணாடியில் துப்பாக்கியிலிருந்து வரும் குண்டு பட்டதும். அது கண்ணாடி முழுவதும் பரவி அந்த குண்டின் வேகத்தைக் குறைத்து கண்ணாடியைத் தாண்டி செல்லாத வண்ணம் குண்டு அங்கேயே விழுந்துவிடும். இதனால் காருக்கும் இருக்கும் பயணிகள் துப்பாக்கி குண்டுலிருந்து பாதுகாக்கப்படுவர்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

குண்டு துளைக்கான கண்ணாடி என்பது கண்ணாடியின் தரத்தில் மட்டுமல்ல, அந்த கண்ணாடியைச் சுற்றி இருக்கும் பேனல்களிலும் இருக்கிறது. அந்த பேனல்கள் குண்டு தாக்கும் போது அதனால் ஏற்படும் அதிர்வுகளை உள் வாங்கும் அளவிற்குத் திறன் கொண்டதாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் குண்டு துளைக்காத கண்ணாடி சிறப்பாக வேலை செய்யும்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

இதனால் வாகனங்களில் குண்டு துளைக்காத கண்ணாடிகளை மாட்டுவது என்பது அதிகப் பணம் செலவாகும் விஷயம் ஆகும். பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் உயிர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு துப்பாக்கிக் குண்டு புறப்பட்டு வரலாம் என்பதால் அவர்கள் அதன் விலையைப் பொருட்படுத்தாது தங்கள் வாகனங்களில் துண்டு துளைக்காத கண்ணாடிகளை மாட்டி விடுகின்றனர்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

ஆனால் போலீசார் வாகனங்கள் அப்படி அல்ல, எல்லா போலீசார் வாகனங்களுக்கும் குண்டு துளைக்காத கண்ணாடி போட வேண்டும் என்றால் அதற்கு பட்ஜெட் இருக்காது. உயிர் விஷயத்தில் பட்ஜெட் பார்க்கக்கூடாது என்றாலும் இப்படியாக வானகங்களுக்குக் குண்டு துளைக்காத கண்ணாடி போடும் செலவு அரசால் தங்கமுடியாத அளவு அதிகமாக இருப்பதால் அதற்குப் பதிலாக இரும்பு கம்பிகளைக் கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி குண்டிலிருந்து தடுக்கவிட்டாலும் மற்ற தாக்குதலிருந்து காக்கும்.

உசுருக்கே ஆபத்து இருக்கு இருந்தாலும் போலீஸ் வாகனங்களில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இல்லை . . . ஏன் தெரியுமா ?

மேலும் போலீசாருக்கு பெரும்பாலும் ஏற்படும் ஆபத்து உணர்ச்சி வசப்பட்ட கூட்டத்திலிருந்து வரும் தாக்குதல் தான். இது திட்டமிடப்படாதது. அதனால் துப்பாக்கி தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவு தான். ஆனால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் பதவியில் இருப்பவர் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இதில் துப்பாக்கி தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகம் இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் போலீசார் வாகனங்களுக்குத் துப்பாக்கிக் குண்டு துளைக்கான கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை. இதுவே போலீசில் உயர் பதவியில் இருப்பவர்களின் வாகனங்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why most police cars dont have bulletproof glasses in their cars
Story first published: Thursday, August 18, 2022, 16:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X