அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

அந்தக்கால கார்களை விட இந்தக்கால கார்கள் ஏன் பாதுகாப்பானது? என்ற உண்மையை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

கார்களின் பாதுகாப்பு என வந்து விட்டால், நம் மக்களிடையே இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சிலர் அந்தக்கால பழைய கார்கள்தான் மிகவும் பாதுகாப்பானது என சொல்கின்றனர். இன்னும் சிலரோ தற்போது வந்து கொண்டிருக்கும் மாடர்ன் கார்கள்தான் பாதுகாப்பானது என கூறுகின்றனர். இதில், எந்த கருத்து சரியானது? என்ற சந்தேகம் உங்களுக்கும் கூட இருக்கலாம்.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

பழைய கார்கள் ஸ்டீல் (Steel) மூலமாக உருவாக்கப்பட்டன. இதனால் அவை மிகவும் உறுதியாக இருந்தன. பழைய கார்கள்தான் பாதுகாப்பானது என்ற வாதத்தை முன் வைப்பவர்கள், அதற்கான காரணமாக கூறுவது இந்த கருத்தைதான். ஆனால் இந்தக்கால மாடர்ன் கார்கள் எல்லாம் உலோகங்கள் மூலமாக உருவாக்கப்படுவதில்லை.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

மாறாக அவை பிளாஸ்டிக் போன்றவற்றின் மூலமாக உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்தக்கால மாடர்ன் கார்கள் பாதுகாப்பானவை கிடையாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் உலோகத்தால் உருவாக்கப்படாவிட்டாலும் கூட, அந்தக்கால கார்களை காட்டிலும், இந்தக்கால கார்கள்தான் மிகவும் பாதுகாப்பானவை. அதற்கான காரணங்களைதான் இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

இன்றைய மாடர்ன் கார்கள் எல்லாம் பல்வேறு யுக்திகளை பின்பற்றி கட்டமைக்கப்படுகின்றன. எனவேதான் அவை மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கின்றன. ஒரு கார் பார்ப்பதற்கு உறுதியாக தெரிகிறது என்பதற்காக மட்டும், அதனை பாதுகாப்பானது என கூறி விட முடியாது. அந்தக்கால கார்கள் இப்படிப்பட்டவைதான்.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

ஆனால் மாடர்ன் கார்கள் பார்ப்பதற்கு உறுதியாக தெரியாவிட்டாலும் கூட, அவை பாதுகாப்பானவை. இந்த கார்களின் கட்டுமானத்திற்கு பின்னால் இருக்கும் யுக்திகள்தான் அதற்கு காரணம். இந்தக்கால மாடர்ன் கார்களில் க்ரம்ப்பிள் ஜோன்கள் (Crumple Zones) இருக்கின்றன. இவற்றை தமிழில் 'நொறுங்கும் மண்டலங்கள்' என்று சொல்லலாம்.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

அதாவது மோதலின் தாக்கத்தை காரே வாங்கி கொள்ளும் வகையில் கார் கட்டமைக்கப்படுகிறது என்பதுதான் இதற்கான அர்த்தம். மோதலின் தாக்கத்தை முடிந்தவரை, பயணிகளுக்கு இது கடத்தாது. ஆனால் அந்தக்கால பழைய கார்களால் இதனை செய்ய முடியாது. எனவேதான் அந்தக்கால பழைய கார்களை விட இந்தக்கால மாடர்ன் கார்கள் பாதுகாப்பானவை என உறுதியாக சொல்ல முடியும்.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

நோய் ஏற்பட்ட பிறகு குணமாவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. விபத்திற்கும் இது பொருந்தும். விபத்து ஏற்பட்ட பிறகு பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை காட்டிலும், விபத்தே ஏற்படாமல் தடுப்பதுதான் சிறந்தது. அந்த வகையில் முடிந்த வரை சாலை விபத்துக்களே ஏற்படாமல் இருக்க கூடிய வகையிலான அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இன்றைய மாடர்ன் கார்களில் இருக்கின்றன.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

இன்றைய மாடர்ன் கார்களில் உள்ள சென்சார்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த சென்சார்கள், கார் விபத்தில் சிக்குவதை முடிந்த வரைக்கும் தடுக்க முயற்சி செய்கின்றன. இதுதவிர ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (Anti-lock Braking System - ABS), ஏர்பேக்குகள், சீட் பெல்ட்கள் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இன்றைய மாடர்ன் கார்களில் இருக்கின்றன.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

மிகவும் விலை குறைவான கார்களில் கூட, இந்த பாதுகாப்பு வசதிகளை எல்லாம் நம்மால் தற்போது பார்க்க முடிகிறது. விலை உயர்ந்த கார்கள் என்றால், இன்னும் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் இன்றைய மாடர்ன் கார்கள், டிரைவர்கள் முன்னால் உள்ள சாலையையும், சுற்றுப்புறத்தையும் தெளிவாக காண கூடிய வகையில் கட்டமைக்கப்படுகின்றன.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

அதாவது 'ப்ளைண்ட் ஸ்பாட்கள்' (Blind Spots) மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இதுபோன்ற வசதிகள் எல்லாம் அந்தக்கால பழைய கார்களில் இருக்காது. எனவே பழைய கார்கள் மிகவும் வலிமையான ஸ்டீல் ஃப்ரேம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, அவை பயணிகளின் பாதுகாப்பை பெரிதாக உறுதி செய்யாது.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

கார் எந்த மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது? என்பதை மட்டும் வைத்து, அதன் பாதுகாப்பை நம்மால் உறுதியாக சொல்லி விட முடியாது. பயன்படுத்துபவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும், புதுமையான சிந்தனைகள் மற்றும் டிசைன் என இதற்கு பின்னால் பல்வேறு விஷயங்கள் மறைந்திருக்கின்றன. எனவே பொத்தாம் பொதுவாக பழைய கார்கள்தான் பாதுகாப்பானவை என சொல்வது சரி கிடையாது.

அந்தக்கால கார்கள் வேஸ்ட்... பிளாஸ்டிக்கா இருந்தாலும் இந்தக்கால கார்கள்தான் பாதுகாப்பானது... ஏன் தெரியுமா?

மேலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஆட்டோமொபைல் துறை ஓயாது உழைத்து கொண்டுள்ளது. எனவே வரும் காலங்களில் கார்கள் இன்னும் பாதுகாப்பானவையாக மாறும் என்பது உறுதி. இந்தக்கால மாடர்ன் கார்கள் பாதுகாப்பானவைதான் என்றாலும், நாம் அனைவரும் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why new generation cars are safer than older ones
Story first published: Monday, October 3, 2022, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X